Thursday, December 20, 2012

தடம் மாறிய தமிழ்ப் படங்கள் 45


பெண்பித்தனானகணவனைத்திருத்தும்பெண்ணின்கதைதான்1976ஆம்ஆண்டுவெளியானமன்மதலீலை.இளம்பெண்களையும்திருமணமானபெண்களையும்மயக்கிவசப்படுத்தும்கணவனாககமல்நடித்தார்.கமலைத்திருத்தும்மனைவியாககவர்ச்சிநடனமாடிரசிகர்களைக்கிளுகிளுக்கவைத்தஆலம்நடித்தார்.

பெண்பித்தனாகத்திரியும்கமல்,ஆலத்தைமுறைப்படி திருமணம் செய்கிறார். ஒருவர்மீதுஒருவர்அளவுகடந்தபாசத்தையும்அன்பையும்பொழிகின்றனர்.அழகானமனைவிவீட்டில்இருக்கவேறுபெண்களைக்கண்டதும்மனம்தடுமாறுகிறார்கமல்.அழகானபெண்களின்பின்னால்சென்றுஅவர்களதுபலவீனம்அறிந்துதன்வலையில்வீழ்த்துகிறார்.இளம்பெண்களும் திருமணமான பெண்களும் கமலின்  வலையில் வீழ்ந்து அவரின் காமப் பசிக்கு இரையாகின்றனர்.

கணவனின்காமலீலைகளைஅறிந்தஆலம்அவரைத்திருத்தமுயல்கிறார்.கமலைத்திருத்துவதற்காகஅவரின்கழுத்தில்தாலிகட்டுகிறார்.கழுத்தில்தாலிஇருந்தால்தனதுநினைவுவரும்வேறுபெண்களைத்திரும்பிப்பார்க்கமாட்டார்என்றுநினைக்கிறார்ஆலம்.ஆலம்கட்டியதாலிக்குமதிப்புக்கொடுக்காதுஅதனைக் கழற்றிவைத்துவிட்டுசல்லாபலீலையைத்தொடர்கிறார்கமல்.கமலைத்திருத்தமுடியாதுஎன்பதை அறிந்த ஆலம் விவாகரத்துச் செய்கிறார்.


ஆலம்தன்தாய்வீட்டிற்குச்செல்கிறார்.ஆலம்வீட்டைவிட்டுவெளியேறியதால்கவலைப்படுகிறார்கமல்.அன்றுமுதல்தன்னுடன்வேலைசெய்பவரிடம் தனது மனக்குமுறலைவெளிப்படுத்துகிறார்.நண்பனின்அறிவுரையால்கமல்மனம்மாறுகிறார்.தாய்வீட்டிற்குசென்றஆலம்தனதுதகப்பனும்கம‌லைப் போன்று பெண்பித்தன் என அறிகிறார் தன்தவறை உணர்ந்து இருவரும் மீண்டும் ணைந்து வாழத் தொடங்குகிறார்கள்.

கமல்,ஆலம்,ஜெயப்பிரதா,வை.விஜயா,சுனந்தினி,ஹேமாசௌத்திரி,ஜெயசுதாஆகியோர்நடித்தனர்.இவர்கள் அனைவரும் கமலின்ஆசைக்குஇரையாகும் பாத்திரத்தில்நடித்தனர்.அன்றையகவர்ச்சிநடிகையானஆலம்கதாநாயகியாகநடிக்கஅன்றையபிரபலநாயகிகளானஜெயப்பிரதாஜெயசுதாஆகியோர்சிறியபாத்திரத்தில்நடித்தனர்.மன்மதலீலையில்பெண்க‌ளைமயக்ககமல்புரியும்அங்கசேஷ்டைகள்ரசிகர்க‌ளைப்பெரிதும்கவர்ந்தது.பெண்களைப்பார்த்து"உங்களுக்குத்திருமணமாச்சா"என்றுகமல்கேட்கும்வசனத்தைஅன்றுஉச்சரிக்காதவர்கள் இல்லை.

பாடல்கள்கண்ணதாசன்இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்,கே.ஜே.ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா,வாணிஜெயராம்,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோர் பாடியுள்ளனர்.மன்மதலீலைமயக்குதுஆளைமனைவிஅமைவதெல்லாம்இறைவன்கொடுத்தவரம்  நாதமெனும்கோயிலிலே,ஹலோமைடியர்ரோங் நம்பர்ஆகியபாடல்கள்இன்றும்திகட்டாதுஇனிக்கின்றன. கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் கே. பாலச்சந்தர்.

தமிழில்மன்மதலீலைஎன்றபெயர்வெளியாகிரசிகர்களைக்கவர்ந்தஇப்படம்தெலுங்கில்"மன்மதலீலா"ஹிந்தியில்"மீட்டிமீட்டிபேட்டன்"என்றபெயரில்வெளியாகி பிரபல்யமானது.
மித்திரன்
ரமணி 30/12/12


No comments: