Friday, October 13, 2023

பாகிஸ்தான் - இலங்கை போட்டியில் குவிந்த சாதனைகள்

 பாகிஸ்தான், இலங்கை அசகியவற்ருக்கிடையே நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில்   ஆறு  விக்கெட்களால்  பாகிஸ்தான் வெற்றி  பெற்றது. இலங்கை அடித்த    345 ஓட்டங்கள் என்ற  வெற்றி   இலகை நோக்கி  களமிறங்கிய பாகிஸ்தான்,  48.2 ஓவர்களில்  நான்கு விக்கெற்களை இழந்து 345 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. உலகக் கிண்ண  வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ரன் சேஸ் ஆகும்.  

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் நேற்று முறியடித்தது. தற்போது உலகக் கிண்ணத் தொடரில்  ஏதேனும் ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்ற அணியாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது. உலகக் கிண்ணத்தொடரில்  இதுவரை இலங்கையால் பாகிஸ்தானை வீழ்த்த முடியவில்லை. உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானும் இலங்கையும் 8 முறை நேருக்கு நேர் மோதின, ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றிப் பயணம் உலகக் கோப்பையிலும் தொடர்ந்தது.

உலகக் கிண்ணத்தில் ஒரே அணிக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்ற சாதனை:

8 - பாகிஸ்தான் எதிர் இலங்கை*

7 - இந்தியாம்  எதிர்  பாகிஸ்தான்

6 - மேற்கு இந்தியா எதிர் ஸிம்பாப்வே

உலகக் கிண்ணத்தொடரில் ஒரே போட்டியில் அதிக சதங்கள்:

உலகக்கிண்ணப் போட்டியில்  ஒரு போட்டியில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கை வீரர்கள்  இருவர் சதம் அடித்தனர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் நான்கு சதங்கள் அடிப்பது இதுவே முதல் முறை. 

உலகக்  கிண்ண  வரலாற்றில் பாகிஸ்தான் மிகப்பெரிய ரன் சேஸ்:

பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸ் செய்தது. இது தவிர முகமது ரிஸ்வான் மற்றும் அப்துல்லா ஷபிக் இடையே 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பாகும். இதற்கு முன் சயீத் அன்வர் மற்றும் வஸ்தியின் பெயர்களில் பதிவு இருந்தது. இருவரும் 1999 உலகக் கோப்பையில் 194 ஓட்டங்கள் எடுத்தனர்.

உலகக் கோப்பையில் மிகப்பெரிய இலக்கை துரத்திய சாதனை

345, பாகிஸ்தான் எதிர்  இலங்கை, ஹைதராபாத், 2023*

328, அயர்லாந்து எதிர்  இங்கிலாந்து, பெங்களூரு, 2011

322,  பங்களாதேஷ்  எதிர்  வெஸ்ட் இண்டீஸ், டவுன்டன், 2019

319,  பங்களாதேஷ்  எதிர்  ஸ்காட்லாந்து, நெல்சன், 2015

313, இலங்கை எதிர்  ஸிம்பாப்வே, பிலிமோப்வே, 1992

குமார் சங்கக்காரவை பின்தள்ளிய குசல் மெண்டிஸ்:

இலங்கைக்காக உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார். குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதத்தை தொட்டார். முன்னதாக இந்த சாதனை குமார் சங்கக்கார பெயரில் இருந்தது. 2015 உலகக் கோப்பையில் குமார் சங்கக்கார 70 பந்துகளில் சதம் அடித்தார்.

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர்

131* - முகமது ரிஸ்வான்  எதிர் இலங்கை, ஹைதராபாத், 2023*

124 - கம்ரான் அக்மல் எதிர் மேற்கு இந்தியா, பிரிஸ்பேன், 2005

116* - கம்ரான் அக்மல் எதிர் அவுஸ்திரேலியா, அபுதாபி, 2009

115 - முகமது ரிஸ்வான் எதிர் அவுஸ்திரேலியா, ஷார்ஜா*2019

 

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பராக சதம் அடித்த சாதனை

5 - கம்ரான் அக்மல்

3 - முகமது ரிஸ்வான்*

2 - சர்பராஸ் அகமது

1 - உமர் அக்மல்

No comments: