Monday, October 16, 2023

ஒரே ஒரு சதம் மூலமாக இத்தனை சாதனைகளா?

உலகக் கிண்ண  கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி ஆடி வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்தியா எட்டு விக்கெற்களால் வெற்ரி பெற்றது.

இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கப்டன் ரோகித் சர்மா அதிரடியான தொடக்கம் தந்தார். கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய ரோகித்சர்மா இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்ஸர் என்று விளாசிய கேப்டன் ரோகித்சர்மா 63 பந்துகளில் சதம் விளாசினார். இந்த ஒரு போட்டியில் மட்டும் ரோகித்சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த சாதனைகளின் பட்டியலை கீழே காணலாம்.

சாதனைகள்:

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ( கிறிஸ் கெயிலின் 553 சிக்ஸர்கள் சாதனையை இந்த போட்டியில் முறியடித்தார்).

ஒருநாள் உலகக் கிண்ண கிறிக்கெற் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (6) சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கிண்ணத்தில்  அதிக சதம் (7) விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஒருநாள் உலகக் கிண்ணத்தில்  அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அவர் 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஒருநாள் உலகக்கிண்ணத்தில் அதிவேகமாக 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த போட்டி மூலம் பல சாதனைகளை படைத்த கப்டன் ரோகித் சர்மாவிற்கு  இது 31வது சதம் ஆகும். அவர் 253 ஒருநாள் போட்டிகளில் ஆடி 31 சதங்கள், 3 இரட்டை சதம்,  52 அரைசதம் விளாசியுள்ளார். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்ஸருடன் 131 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

  30 பந்துகளில் 50 ஓட்டங்களைக்  கடந்து அதிரடியாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல கொஞ்சம் கூட அதிரடியை குறைக்காமல் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 63 பந்துகளில் 100 ஓட்டங்கள் கடந்தார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் 40 வருட ஆல் டைம் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா புதிய சரித்திர சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 1983 உலக கிண்ணப் போட்டியில் ஸிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் தேவ் 72 பந்துகளில் 100 ஓட்டங்கள் அடித்ததே இது நாள் வரை சாதனையாக இருந்தது.

கடந்த 2015 உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு  சதமடித்த  ரோகித்  2019 உலகக்  கிண்ணத்தில் 5 சதங்கள் அடித்தார். இந்த சதத்தையும் சேர்த்து மொத்தம் 7 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1992 – 2011 காலகட்டங்களில் 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இ ஜாம்பவான்கள் சச்சின், கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்த ஹிட்மேன் ரோஹித் – 2 சரித்திர சரவெடி உலக சாதனை இது போக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் (555*) அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் (553) உலக சாதனை உடைத்த அவர் உலகக் கோப்பையில் வேகமாக 1000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

No comments: