Wednesday, October 4, 2023

உலகக்கிண்ணத்தில் சாதிக்கத் துடிக்கும் இலங்கை

கிறிக்கெற் உலகின் சம்பியனைத் தீர்மானிக்கும் உலகக்கிண்ணத் தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதச்ல் முதல் நவம்பர் 19  ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியாவுக்கு நடப்பு சம்பியன் இங்கிலாந்து, ஆர்டாஅவ்து கிண்ணத்துக்கு குரிவைக்கும் அவுஸ்திரேலியா, சிரந்த முரையில் விளையாடியும் கடைசியில் கோட்டை விடும் நியூஸ்லிஆந்து, தென் ஆபிரிக்காஆகியன சவாலாக  உள்ளன.

இத்தனை சவால்களுக்கு மத்தியில்  இலங்கை சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு     அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது.   1996இல் அர்ஜுன ரணதுங்க தலைமையில் அரவிந்தா  டிசில்வா, ஜெயசூர்யா போன்ற ஆல் ரவுண்டர்களின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்ற இலங்கை 2007, 2011 ஆகிய தொடர்களில்  இறுதிப் போட்டிவரை சென்ரு  வரை சென்று தோல்வியை சந்தித்தது. சங்ககார, ஜயவர்த்தனே மலிங்க, முரளிதரன் போன்ற  அச்சுறுத்தும் வீரர்களுடன்  எதிரணிகளை அச்சுருத்தி இறுதிப் போட்டிகளில்  இலங்கை விளையாடியது.   அவர்கள் ஓய்வு பெற்றதும் இலங்கையின்  கிரிக்கெற் கீழ் நோக்கிச் சென்றது. கப்டன்களும், வீரர்களும் அடிக்கடி மாற்றப்பட்டதால்   2015, 2019 தொடர்களில் நொக் அவுட் சுற்றுக்குச் செல்லாமல்  வெளியேறியது. 2023 உலகக்கிண்ணப் போட்டிக்கு நேரடியாக்த் தகுதி பெறவில்லை. ஸிம்பாப்வேயில்  நடைபெற்ற தகுதிச் சுற்றுத்  தொடரில் வென்று உலகக்கிண்ணப் போட்டிக்குள் நுழைந்தது

 

 ஆனால், கடந்த வருடம் இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆசியக் கிண்ணத்தை வென்றது.     இம்முறை சொந்த மண்ணில் நடைபெற்றாஅசியக்கிண்ணப் போட்டியில்  இந்தியாவிடம் தோல்வியடைந்தது.  1996 விட தற்போதைய இலங்கை அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் இருப்பதாக அர்ஜுன ரணதுங்க பாராட்டியிருந்தார்.

சகலதுறை வீரரான சானகவின் தலைமையில்  இலங்கை அணி களம்  புக  உள்ளது.   நிசங்க, திமுத் கருணரத்ன, குசால் மெண்டிஸ்  ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் பலமாக  உள்ளனர். பந்து வீச்சாலரின் பலவீனத்தைப் புரிந்துகொண்டு அதிரடியாக  ஓட்டங்களைக் குவிக்கும்   திறமையை  இவர்கள் கொண்டுள்ளனர். மத்திய வரிசையைத் தாங்கிப் பிடிப்பதற்கு சமரவிக்ரம, குசல் பெரேரா, அசலங்கா, தனஞ்செயா டீ சில்வா ஆகியோர் தயாராக  இருக்கிறார்கள். ஆசியக்கிண்ணப் போட்டியில் இவர்கள்  மூவரும் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

 துஷன் ஹேமந்த, டீ சில்வா ஆகியோர்   பந்து வீசும் திறமையைக் கொண்டுள்ளனர்.மஹீஸ் தீக்சனா சுழல் பந்து வீச்சை துறையை வலுப்படுத்துகிறார். ஆசியக்கிண்ணப் போட்டியில்  இந்திய ஜாம்பவான்களை சீட்டுக்கட்டுப் போல் சரித்த   துணித் வெல்லாலகே  அச்சுறுத்தலாக  இருப்பார்.  சுழலுக்கு சாதகமான மைதானங்களில் மேஜிக் நிகழ்த்தும் திறமையை வெல்லாலகே கொண்டுள்ளார்.

இலங்கை அணியின் முதன்மை ஸ்பின்னரான  ஹஸரங்க காயத்தால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இது  இலங்கை அணிக்கு மிகப்பெரிய  இழப்பாகும். குட்டி மலிங்க என்றழைக்கப்படும் பதிரன, மதுசங்க, லகிரு குமார, கௌசன் ரஜித  ஆகியோரால் இலங்கையின் வேகப்பந்து வீச்சு துறை  நன்றாகவே இருக்கிறது.  இருப்பினும் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவர்களால் தொடர் முழுவதும் சவால் கொடுக்க முடியுமா என்பது சந்தேகமாகும். துடிப்பாக சீறிப்பாயக்கூடிய இளம் வீரர்களை கொண்டுள்ள இலங்கை அணி முழுமூச்சுடன் முழு திறமையை வெளிப்படுத்தி லீக் சுற்றை கடந்து நொக் அவுட் சுற்றை தொட்டால் 2023 கோப்பை தொடுவதற்கும் கணிசமான வாய்ப்புகள் இருக்கிறது.

No comments: