Sunday, October 29, 2023

இங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை


 பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில்  இங்கைலாந்துக்கு எதிராக விளையாடிய  இலங்கை எட்டு விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கைலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 33.2  ஒவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது. பென் ஸ்டொக்ஸ் அதிக பட்சமாக  43  ஓட்டங்கள் அடித்தார்.

இலங்கை அணி இரண்டு விக்கெற்களை இழந்து 25.4  ஓவர்களில் 160 ஓட்டங்கள் எடுத்தது. பதும் நிஸங்க ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களும், சமர விக்கிரம ஆட்டமிழக்காமல்  65  ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து    அசத்தலாக விளையாடிக்கொண்டிருந்த வேளையில் டேவிட் மலானை மத்யூஸ் வீழ்த்தினார்.   பத்தாவது ஓவரில் ஜோ ரூட்டை ரன் அவுட் செய்தார்.  மொயின் அலி,ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். அந்த நேரத்தில் மொயின் அலியை மத்யூஸ் வீழ்த்தி அந்த அணியின் அச்சாணியையே முறித்து விட்டார். இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் உட்பட 1 ரன் அவுட்டையும் செய்து இங்கிலாந்து அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

உலகக் கிண்ணப்  போட்டியில்  இலங்கைக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச ஓட்டங்களைப் திவு செய்து இங்கிலாந்து மோசமான சாதனை படைத்தது. அத்துடன் பெங்களூரு மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் மோசமான சாதனையை இங்கிலாந்து வாங்கிக் கொண்டது. இதற்கு முன் 1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 168 ஓட்டங்கள் எடுத்ததே முன்னைய சாதனையாகும்.

1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில்  தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது.   அதன்பிறகு 27 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வரலாற்றில் தற்போது ஹட்ரிக் தோல்வியை இங்கிலாந்து அணி முதல்முறையாக சந்தித்திருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான இங்கிலாந்தை தோற்கடித்துள்ள இலங்கை உலகக் கோப்பையில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆம் கடைசியாக கடந்த 1999 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

ஐந்து போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்து 9வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்தின் செமி ஃபைனல் வாய்ப்பு 90% முடிந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக அடுத்ததாக வலுவான இந்தியாவை எதிர்கொள்ளும் நிலையில் அடுத்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் மோசமான ரன்ரேட்டை கொண்டுள்ள அந்த அணி அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற இதர அணிகளின் தோல்வியை பார்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழன்,உலகக்கிண்ணம்23,இந்தியா,இலங்கை,இங்கிலாந்து

 

No comments: