Tuesday, April 15, 2025

குழப்பத்தில் தமிழக அரசியல் கட்சிகள்


 

தமிழக சட்ட சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைப்பதர்கு திராவிட முன்னேற்றக் கழகம்  புதிய  புதிய திட்டங்களுடன் காய் நகர்த்துகிறது.ஆட்சியில் பங்கு  வேண்டும், அமைச்சரவியில் இடம்  வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும் என அடம் பிடித்த விடுதலைச் சிறுத்தைகளும், தமிழக காங்கிரஸும் இப்போதைக்கு அமைதியாக  இருக்கின்றன. இவற்றி  எல்லாம் காதில்  வேங்கிக் கொள்ளாத முதல்வர் ஸ்டாலின் தனது  திட்டங்களை  முன்னெடுத்து வருகிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விகளுக்கு பாரதீய ஜனதாக் கட்சிதான் காரணம் எனக் கண்டுபிடித்த எடப்பாடி  அந்தக் கட்சியுடன்  ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்தார்.

பாட்டாளி  மக்கள் மட்சித் தலைவர்பதவியில் இருந்த மகன் அன்புமணியைத் தூக்கு எறிந்துவிட்டு  இன்று முதல் நான் தான்  தலைவர் என அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். தகப்பனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அன்புமணி இன்னமும்  நானே தலைவர் என சொல்கிறார்.  தகப்பனுக்கும், மகனுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்கள் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள்.

தனது மகனை அரசியல் அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார் வைகோ.  வைகோவின் மகன் துரைக்கும் , கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்தியவுக்கும் இடையிலான உட்பூசல் சந்திக்கு வந்துள்ளது. 

தமிழக அரசிலயைத் தாண்டி இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மீண்டும்  உருவாகி உள்ளது. 

தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் பாரதீய ஜனதாவுடன்  கூட்டணி சேர்ந்ததனால் தோல்வியடைந்ததாக வாக்கு மூலம் வழங்கிய எடப்பாடியார் கூட்டணியை முறித்துக் கொண்டார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை என்றால் தமிழகத்தில் கால்  ஊன்ற முடியாது எனத் தெரிந்துகொண்ட பாரதீய ஜனதாத் தலைவர்கள் எடப்பாடிஅயிச் சமாதானப் படுத்த முயன்றார்கள். தனது நிலைப் பாட்டில் எடப்பாடி உறுதியாக இருந்தார்.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேரமாட்டேன் என எடப்பாடி சத்தியப் பிரமாணம் செய்தார்.

அண்ணா திராவிட முன்னேறக் கழகத்துடன்   கூட்டணி சேர்ந்தால் கட்சியை விட்டு வெளியேறப் போவதாக அண்ணாமலை   ஆவேசத்துடன் தெரிவித்தார்.

இரண்டு பேரின் வாய்ச் சவடால்களும் காற்றில் கரைந்து விட்டன.


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை மீண்டும் தொடங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கடந்த  வெள்ளிக்கிழமை   முறைப்படி அறிவித்தார்.

அதிமுக  இல்லை என்றால் தமிழ்கத்தில் தாமரை மலராது என்பதை உணர்ந்துகொண்ட அமித்ஷா  கூட்டணியை உறுதி செய்தார்.

  2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இருப்பார் என அமித்ஷா கூறியுள்ளார்.

அமித்ஷாவின் அருகே எடப்பாடி அமைதியாக  இருந்தார்.  அமித்ஷாவின் இன்னொரு பக்கத்தில்  ஒன்றுமே தெரியாததுபோல அப்பாவியாக அண்ணாமலை அமர்ந்திருந்தார்.

அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமித்ஷா மட்டும் பேசினார். எடப்பாடி பொம்மைபோல    இருந்தார். பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதற்கு அண்ணாமலையில் நடவடிக்கைகளும் காரணம்.

அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்காக அண்ணாமலை பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை தூக்கி எறியப்பட்டார். தமிழக பாரதீய ஜனதாவின்  புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் டெரிவு செய்யப்பட்டார்.பாரதீய ஜனதாவுடன் எடப்பாடி கூட்டணி சேர்ந்ததை அதிமுகவின் மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை. தொகுதிக்குள் ராஜாவாக வலம் வந்த நான் தோற்றது   பாரதீய ஜனதாவால்தான்   என மேடைக்கு மேடை வாக்கு மூலமளித்த ஜெயக்குமார்  அதிர்ச்சியடைந்துள்ளார்.  ஏனைய வர்களும்  மெளனமாக இருக்கின்றனர். கூட்டனி மேடையில் எடப்பாடியைத் தவிர வேறு யாரும் காணப்படவில்லை.

அதிமுக தலைவர்களை வழிக்குக் கொண்டுவரும் பாரிய பொறுப்பு எடப்பாடியின் தலையில்  சுமத்தப்பட்டுள்ளது.

 பாமக பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். தேர்தல் ஆணையமும் அதை அங்கீரித்திருக்கிறது என்று டாக்டர் அன்புமணி  தெரிவித்ததால் சமாதனப் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்

பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 திக‌தி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யாவின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.

அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் , டாக்டர் ராமதாஸுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இப்போது கட்சித் தலைவர் நீக்கத்திற்கு அவர் அவசர பொதுக்குழுவைக் கூட்டியாக வேண்டும். ஆனால் பொதுக் குழுவில் அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என்று கூறப்படுகிறது. எனவேதான் அவசர பொதுக்குழுவை டாக்டர் ராமதாஸ் கூட்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தலைவர் பதவியை  தான் விட்டுக் கொடுத்து விட மாட்டேன் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்துவதாக கருதப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் சமரசத்திற்கு வராவிட்டால் கட்சி உடைவதையும் தவிர்க்க முடியாது என்றே சொல்கிறார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் பாமகவின் சின்னத்தை முடக்கி விடும் வாய்ப்புகளும் அதிகம்.

இரு தலைவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் யாருக்கும் டாக்டர் ராமதாஸ் பிடி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் செயல்படக் கூடாது என நிர்வாகிகளுக்கு வைகோ அறிவுறுத்தி உள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், துரை வைகோ பொறுப்பேற்ற நாள் முதல் அவரது ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் போட்டுள்ளதாக வும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்ததால், துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர், அதுமோதலாக உருவெடுத்து, தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்புதிருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 12‍ம் திக‌தி சென்னை தாயகத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டி, நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வைகோ முன்னிலையில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்து துரை வைகோ கோபமாக வெளியேறினார்.

இந்நிலையில், துரை வைகோ ஆதரவாளர் சத்யகுமரன், ‘மதிமுகவில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும், ஈ.வெ.ரா., அண்ணா, வைகோ, துரை வைகோ மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் இருக்கலாம். மறுப்பவர்கள் உடனே வெளியேறலாம். இது துரை வைகோ காலம்,’ என அறிக்கை வெளியிட்டார்.

இதற்குப் பதிலடி கொடுத்த மல்லை சத்யா, ‘மதிமுகவில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர். எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத்தன்மையை வைகோ அறிவார்.

ஒருசிலர் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க எந்த சக்தியாலும் முடியாது. நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் அரசியல் உலகம் என்னை சொல்லலாம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒரு போதும் வரக்கூடாது என்ற உறுதியோடு மதிமுகவில் பயணிக்கிறேன். சமூக வலைதளங்களில் என் படம், பெயர் போட்டு பதிவிடுபவர்க ளுக்கு நானே பதில் கொடுக்கிறேன். இந்த விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்,’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வைகோ அறிக்கை: இதற்கிடையே, திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் ஏப்.20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறை வேற்றி உள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களின்  குழறுபடிகளால் தொண்டர்கள் திகைத்து நிற்கிறார்கள். தேர்தலுக்கு ஒரு வருடம்  இருப்பதாக் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ர்க்கப்பட்டு விடும் என அவர்கள் நம்புகிறார்கள். 

Thursday, April 10, 2025

சந்திக்கு வந்த குடும்பச் சண்டை மகனின் பதவியை பறித்த தந்தை


 

 அரசியல் என்றாலே அங்கே வரிசுக்கு தனி மரியாதை இருக்கும் வரிசு அரச்யல் என விமர்சகர்கள்   பெரிதாக கூப்பாடு போட்டாலும். வரிசு அரசியலை அடுத்த கட்ட தலைவர்களும், தொண்டர்களும் சிரமேல் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்.

வாரிசுக்காக  இரண்டாம் கட்டத் தலைவர்கள் தூக்கி எறியப்பட்ட சம்பவங்களும், நின்று பிடிக்க முடியாமல்  கட்சியை விட்டே  ஓடிஒ போன சம்பவங்களும்  அரசியல் அரங்கில்  நிறையவே உள்ளன. மகனிடம்  இருந்த தலமைப் பதவியைப் பரித்து  தன்னை  மீண்டும் தலைவராக்கிய அதிர்ச்சியான  அரசியல் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணியிடம்  இருந்த தலைமைப் பதவிடை  தகப்பனான‌ டாக்டர் ராமதாஸ்  பிடுங்கி எடுத்துள்ளார்.

பாமக நிறுவனரான நானே இனி கட்சித் தலைவர் பதவியையும் வகிக்கப் போகிறேன். கட்சியின் செயல் தலைவராக டாக்டர் அன்புமணி செயல்படுவார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி தொடர்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது பெரும்  இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு கட்சிக்கு மூன்று தலைவர்களா என்ற கேள்வியஒயும் எழுப்பி உள்ளது.

பாமக தலைவராக கடந்த 2022ம் ஆண்டு வரை ஜி.கே.மணி செயல்பட்டு வந்தார். டாக்டர் ராமதாஸும், ஜி.கே.மணியும் இணைந்து பல கூட்டணிகளை உருவாக்கியுள்ளனர். சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பாமக தலைவராக, அதுவரை இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி மாற்றப்பட்டார்.

 சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் ஆவார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே கடும் வாதமும் மூண்டது. அப்போது இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க விரும்பாதவர்கள், யாராக இருந்தாலும் வெளியேறி விடுங்கள் என்று கோபமாக கூறினார்.

தகப்பனின்  கோபத்தால் ஒந்தளித்த அன்புமணி தனது அலுவலகம் பனையூரில் இருப்பதாகவும் தன்னை விரும்புவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் தெரிவித்து விட்டு  வெளியேறிபனார்.   அரசியல் காரணமாக தகப்பனும் மகனும்  பிரிந்திருப்பதை விரும்பாத கட்சியின் மூத்த தலைவர்கள்  இருஅவ்ரையும் சமாதானமாக்கினார்கள்.தகப்பனின் தைலாபுர வீட்டுக்கு அன்புமணி சென்றார். இறுக்கமான முகத்துடன் அன்புமணியை ஏறெடுத்தும் பார்க்காமல் ராமதாஸ். இருந்தார்.  பிரச்சனை முற்றுப் பெற்ரு விட்டதாக அனைவரும் நினைத்தனர். இப்போ அது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மகனிடம் இருந்த தலைமைப் பதவியைப் பரித்ததற்கு  பல காரணங்கள்  உண்டு அதனைத் தெரிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார்.

 அன்புமணியின் தலைமையில் கட்சி  பல தோல்விகளைச் சந்தித்தது. வாக்கௌ வங்கி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பாரதீய ஜனதாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் அன்புமணி பாரதீய ஜனதாக் கூட்டணியில் தொடர விரும்புகிறார். அரசியலில் மிகவும் அனுபவம் உள்ள ராமதாஸின் பார்வை வேறு விதமாக  உள்ளது. அதிமுகவுடன்  கூட்டணி சேர ராமதாஸ் ஆசைப்படுகிறார். அதிமுகவின் அனுரசணையில் எம்பியாக இருக்கிறார் அன்புமணி. தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கனவுகண்டு காலத்தைக் க்டத்துகிறார்.  நாடா ளுமன்றத்துக்கு  அன்புமணி செல்வதில்லை என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்துக்காக நாடாளுமன்றத்தில்  தமிழ் அம்பிக்க குரல் கொடுக்கும்  போது அங்கு  அன்புமணி  தென்படுவதில்லை. மக்களுக்காகச் சேவை செய்யச் சென்ற அவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

 வன்னியர் சமூகத்துக்காக‌ வன்னியர் சங்கத்தில் தீவிரமாக களமாடி வந்தவர் டாக்டர் ராமதாஸ். அவரது அயராத உழைப்பு, கடுமையான முயற்சிகள், கிராமம் கிராமமாக சென்று அவர் மேற்கொண்ட திண்ணைப் பிரச்சாரத்தால் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அளப்பறியது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கே கடும் சவாலாக திகழ்ந்தவர் டாக்டர் ராமதாஸ்.

பின்னாளில், பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. வட மாவட்டங்களில் மிகப்பெரிய சக்தியாக பாமக ஒரு காலத்தில் திகழ்ந்தது. இப்போதும் வட மாவட்ட முக்கிய அரசியல் சக்தியாக பாமக இருந்தாலும் கூட முக்கியமான வெற்றிகளை பெற அது தவறி வருகிறது. இதற்கு காரணம் பாமகவின் செயல்பாடுகளில் காணப்படும் ஒரு விதமான தொய்வு. பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் பல்வேறு தலைவர்களை தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தி செயல்பட வைத்தார்

 கருணாநிதியும், ஜெயலலிதாவும் ராமதாஸுடன் முதலில் பேசி   தொகுதிகளை அறிவித்த பின்னரே எஆனிய கட்சிகளுடன்  பேச்சு வார்த்தி நடத்துவார்கள்.  அந்த நிலை இப்போது  மாரிவிட்டது. தொடர் தோல்விகள் தொண்டர்களிடையே சலிப்பை ஏறப்ப‌டுத்தியுள்ளது. ஜி.கே.மணி காலம் வரை பாமகவின் செயல்பாடுகள் சற்று சிறப்பாக இருந்தது என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பாமகவின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அன்புமணியின் வரவுக்கு பின்னர் பாமகவின் செயல்பாடுகள் அதன் போக்கில் பல மாற்றங்கள் காணமுடிந்தது. ஒரு ஜாதி கட்சியாக மட்டுமே அறியப்பட்ட பாமகவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டினார். அதற்கு ஏற்ப அவர் செயல்பாடுகளில் முன்னெடுத்தார். வெறும் ஜாதி கட்சியாக மட்டும் இருக்கக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதற்கு காரணம் அவர் அரசியல் செய்தது டெல்லியில், டாக்டர் ராமதாஸின் அரசியல் தமிழ்நாட்டில். எனவே அவரவர் சூழலுக்கு ஏற்ற அரசியலை அவர்கள் செய்ய முனைந்தனர். இதன் காரணமாக இருவருக்குள்ளும் பல்வேறு முட்டல் மோதல்கள் வெடித்தன.

கூட்டணி கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்திக்க உள்ள நிலையில், பாமகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டுள்ளார்.. இது பாமக தொண்டர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.. டாக்டர் ராமதாஸின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அமித்ஷா வரும்போது இப்படியொரு முடிவை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன? என்ற கேள்விடும் எழுந்துள்ளது.

கடந்த முறை அதிமுகவுடன் வலிமையாக கூட்டணி வைத்தும்கூட, பாமகவால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எப்படி வெற்றி பெற முடியும்? என்பதே இந்த அதிருப்தியாளர்களின் சந்தேகமாக எழுந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காப்பது ஏன்? பாஜகவின் நிலைப்பாடு தெரியாதபட்சத்தில், எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது எனத் தொண்டர்கள்  கேள்வி எழுப்பி உள்ளனர்.

 அதாவது கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் அன்புமணியும், செளமியா அன்புமணியும் சேர்ந்து எடுக்கிறார்களாம்.. இது தொடர்பாக தன்னை ஆலோசிப்பதில்லை என்றும், இதனால் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ராமதாஸ் உணர்ந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முக்கிய கட்சியான அதிமுக பலவீனப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் பாமகவும் பலவீனப்பட்டால் அல்லது பிளவுபட்டால் அது அக்கட்சிக்கு நல்லதல்ல என்று தொண்டர்கள் கவலைப்படுகிறார்கள். அன்புமணியும், ராமதாஸும் வெளிப்படையாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பிளவு வரைக்கும் போய் விட்டால் பல வருடங்களாக கடுமையாக உழைத்து செங்கல் செங்கல்லாக பார்த்துப் பார்த்து உருவாக்கிய பாமகவின் கோட்டை தகர்வதை யாராலும் தடுக்க

    

Wednesday, April 9, 2025

சாதித்தார் சாய் சுதர்சன் வென்றது குஜராத்


  குஜராத் மாநிலம் அஹம‌தாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் போட்டியில்   ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய குஜராத 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனான சாய் சுதர்சன் ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார்.

நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  ராஜஸ்தான் கப்டன் சஞ்சு சாம்சன், பந்து வீசைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத  20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த ராஜஸ்தான் 159  ஓட்டங்கள் எடுத்தது.

  குஜராத் அணிக்கு கப்டன் சுப்மன் கில் 2  ஓட்டங்களுடன் வெளியேறினார். சாய் சுதர்சன், பட்லர் ஜோடி நம்பிக்கை தந்தது. பொறுப்பாக ஆடிய சுதர்சன், 32 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 80  ஓட்டங்கள் சேர்த்த போது தீக் ஷனா பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்த  பட்லர் ஆட்டமிழந்தார். பட்லர் வெளியேற களத்துக்கு வந்த ஷாருகான் அதிரடி காட்டினார்.

 பரூக்கி வீசிய 12வது ஓவரில்   2 பவுண்டரி  அடித்த‌ ஷாருக்கான், ஷாருக்கான், தீக் ஷனா வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்டினார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு 62  ஓட்டங்கள்  சேர்த்த போது தீக் ஷனா 'சுழலில்' சிக்கிய  ஷாருக்கான்  36  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.53 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்த சாய்சுதர்சன் ஆட்டமிழந்தார். 

சுதர்சன் 82 ரன்னில் (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ரஷித் கான் (12) நிலைக்கவில்லை. சந்தீப் சர்மா வீசிய 20வது ஓவரில் அசத்திய ராகுல் திவாதியா, ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

குஜராத் அணி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 218 எனும்  இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தானின் வீரர்கள் நிலைக்கவில்லை கப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடி ஓரளவு கைகொடுத்தது.  மூன்றாவது விக்கெட்டுக்கு 48  ஓட்டங்கள் அடித்தபோது 26 ஓட்டங்கள் எடுத்த பராக் ஆட்டமிழந்தார்  பறக்கவிட்டார்.  சாம்சன் 41 ,ஹெட் மெயர்  52 ஓட்டங்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. 

ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சாய் சுதர்சன். இவர், 1307  ஓட்டங்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில்  1338 ஓட்டங்களுடன் ஷான் மார்ஷ்  உள்ளார். 1141 ஓட்டங்களுடன்  கிறிஸ் கெயில்: மூன்றாவது இடத்திலும், 1096 ஓட்டங்களுடன் . கேன் வில்லியம்சன் நான்காவது இடத்திலும், 1082 ஓட்டங்களுடன்  மேத்தியூ ஹைடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி கப்டன் சஞ்சு சாம்சன்,   தனது 300வது 'ரி-20' போட்டியில் பங்கேற்றார். 

பிரிமியர் லீக் அரங்கில் குஜராத் அணி, ராஜஸ்தானுக்கு எதிராக 6வது வெற்றியை பதிவு செய்தது.  இரு  அணிகளும் மோதிய 7 போட்டியில், குஜராத் 6 போட்டிகளிலும்,  ராஜஸ்தான் ஒரு போட்டியிலும்  வென்றன.

 

எடப்பாடியை நெருங்கும் அமித்ஷா உறுதியானது கூட்டணி


  தமிழகத்தில் நடைபெற்ற 11 தேர்தல்க்ளில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  படு தோல்வியைச் சந்தித்தது. தனது  தலமையிலான ண்அணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விகளுக்கு பாரதீய ஜனதா தான் காரணம் எனக் கண்டு பிடித்த எடப்பாடி  பாரதீய ஜனதாவுடனான கூட்டணியைத் துறந்தார்.

 மோடி, அமித் ஷா ஆகியோர் அழைப்பு விடுத்தும் எடப்பாடி இறங்கிவரவில்லை.கடந்தவாரம் ஒரு நாள் திடுதிப்பென டெல்லிக்குப் பறந்த எடப்பாடி அமித்ஷாவை இரகசியமாக‌ச் சந்தித்தார்.

அதிமுக  தலைவர்களுக்குக் கூடத் தெரியாமல் எடப்பாடி டெல்லி சென்றது  கழகத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பொழுதே கூட்டணி உறுதி எனத்  தகவல்கள் வெளியாகின. டெல்லியில் அதிமுக அலுவலகத்தைப் பார்க்கச் சென்றதாககூறிய எடப்பாடி  அமித்ஷாவைச் சந்தித்ததை  மழுப்பினார்.எடப்பாடியின் மகனுடைய தில்லு முல்ல்லு  ஆவணங்கள் அமித்ஷாவின் கையில் இருப்பதால் எடப்பாடி  இறங்கி வந்த்தாகவும் செய்திகள் பரவின.

தமிழகத்தில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.  அண்ணாமலைஒயும்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்கிறார். நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சென்னையில்  சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2021 சட்டசபை தேர்தலின்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிட்டன. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டில் இந்த கூட்டணி முறிந்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றில் பாஜகவும், அதிமுகவும் வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் தான் அமோக வெற்றி பெற்றன.

 சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கும் அமித்ஷாவை நள்ளிரவில் மூத்த அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணி பற்றி இருதரப்பும் விவாதிக்க உள்ளதாகவும், அதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றிய பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமித்ஷா தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் போது  சீமானை சந்திக்கப்போவதாகவும் தகவல் பரவி உள்ளது.  அண்மையில் ஒரு கல்லூரி விழாவில்  சீமானும், அண்ணாமலையும் ஒரே மேடையில் தோன்றினார்கள். சீமான் மோடியைப் புகழ்ந்து பேசிஒனார்,அண்ணாமலை,  சீமானை வானளாவக் பாராட்டினார். அப்போதே விமர்சகர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாட்டு  விஜயத்தை முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்குஎடப்பாடி  பிறப்பித்து உள்ளார்.   5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் செங்கோட்டையனுக்கு இந்த அறிவிப்பு செல்லவில்லை. அவர் சென்னையில்தான் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு அறிவிப்பு செல்லவில்லை. அதேபோல் தங்கமணி சென்னையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.

 விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும். சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் களமாடும் போது  அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம். 

போராடித் தோற்றது கொல்கத்தா

 கொல்கத்தா டன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் கொல்கத்தா    லக்னோ அணிகள் மோதின லக்னோவுக்கு எதிராக  கடைசி ஓவர் வரை 'டென்ஷன்' எகிறிய போட்டியில் லக்னோ பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. 4  ஓட்ட வித்தியாசத்தில் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

நணயச் சுழற்சியில்கொல்கத்தா க‌ப்டன் ரகானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 3 விக்கெற்களை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது. 239 ர்னும் பிரமாண்டமான இலக்கைத் துரத்திய  கொல்கத்தா 7 விக்கெற்களை  இழந்து 234 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மிட்சல் மார்ஷ், மார்க்ரம் கலக்கினர்.  முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 99  ஓட்டங்கள்  சேர்த்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் மார்க்ரம் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.   . இத்தொடரில் நான்காவது அரைசதம் கடந்த மார்ஷ், 81  ஓட்டங்களுடன் வெளியேறினார்.

  பூரன். 21 பந்துகளில்   அரைசதம் எட்டினார். ரசல் ஓவரில் (18வது), பூரன் 24  ஓட்டங்கள்  விளாசினார்.   கடைசி 10 ஓவர்களில்  143  ஓட்டங்கள் அடிக்கப்பட்டன.  லக்னோ அணி 20 ஓவர்கலில் 3 விக்கெற்களை இழந்து  238 ஓட்டங்கள் எடுத்தது.   பூரன் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்தார்.

239  எனும் கடின இலக்கை விரட்டிய கொல்கத்தா மிரட்டியது.   குயின்டன்15,  நரைன், 30 ஓட்டங்களுடன் வெளியேறினர்.  26 பந்துகளில்  அரைசதம் எட்டிய‌னார் ரகானே. ஷர்துல் தாகூர் பந்தில் ரகானே 61 ஓட்டங்கள் அடித்த ரகானே ஆட்டமிழந்ததுடன் கொல்கத்தசவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  ரமன்தீப் சிங் 1, ரகுவன்ஷி 5   வெங்கடேஷ், 45 , ரசல் 7 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர். 18 ஓவர்களீல்   7 விக்கெற்களை  இழந்து  கோல்கட்டா  201 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி 12 பந்துகளில்  வெற்றிக்கு 38  ஓட்டங்கள்  தேவைப்பட்டது. அவேஷ் கான் ஓவரில்  19 ஓட்டங்கள் , ரிங்கு சிங் 14  ஓட்டங்கள்  (6,4,4) விளாச, 'டென்ஷன்' அதிகரித்தது. கடைசி ஓவரில் 24  ஓட்டங்கள்  தேவை என்ற நிலையில், பிஷ்னோய் பந்துவீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹர்ஷித் ராணா, அடுத்த இரு பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வாய்ப்பு மங்கியது. கடைசி 3 பந்துகளில் 19 ஓட்டங்கள்  தேவைப்பட்டன. 3 சிக்சர் அடித்தால் 'சூப்பர் ஓவருக்கு' வாய்ப்பு இருந்தது. ரிங்கு சிங் (4, 4, 6) விளாசியும் பலன் கிடைக்கவில்லை. கோல்கட்டா அணி 20 ஓவரில் 234/7 ரன் மட்டும் எடுத்து, தோற்றது. ரிங்கு சிங் (38), ஹர்ஷித் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை பூரன் வென்றார்.

லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் தனது 100வது பிரிமியர் போட்டியில் பங்கேற்றார். இவருக்கு '100' என்ற நம்பர் பொறிக்கப்பட்ட சிறப்பு 'ஜெர்சி'யை லக்னோ ஆலோசகர் ஜாகிர் கான் வழங்கினார்.

 தடுமாறிய ஷர்துல், பிரிமியர் அரங்கில் தொடர்ந்து 5 'வைடு' (12.1வது ஓவர்) வீசிய முதல் வீரரானார்.

பிரிமியர் அரங்கில் லக்னோ அணி அதிபட்சமாக 257/7 ரன் (எதிர், பஞ்சாப், 2023, மொகாலி) எடுத்து உள்ளது.   இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (238/3) பதிவு செய்தது.

பிரிமியர் அரங்கில் அதிவேகமாக 2,000  ஓட்டங்கள்  எட்டிய இரண்டாவது வீரரானார் பூரன் (1198 பந்து). முதலிடத்தில் ரசல் (1120 பந்து) உள்ளார்.

  61 ஓட்டங்கள் எடுத்த கொல்கத்தா கப்டன் ரகானே, 'ரி-20' அரங்கில் 50வது அரைசதம் அடித்தார். 'ரி-20' அரங்கில் 7,000  ஓட்டங்கள்  (276 போட்டி) எட்டி அசத்தினார்.

பிரிமியர் அரங்கில்,  ஓட்ட  அடிப்படையில் 3வது குறைவான வித்தியாசத்தில் (4 ஓட்டங்கல் ) லக்னோ வென்றது. இதற்கு முன் 1  ஓட்டம்  (எதிர், கோல்கட்டா, 2023), 2  ஓட்டங்கள்  (எதிர், கோல்கட்டா, 2022) வென்றிருந்தது.

* பிரிமியர் அரங்கில் 'சேஸ்' செய்த போட்டிகளில் 4 அல்லது அதற்கு குறைவான ஓட்ட‌ வித்தியாசத்தில் 7 முறை  கொல்கத்தா  தோற்றது. இதில் 3 முறை லக்னோவிடம் தோல்வியை சந்தித்தது.