தமிழக சட்ட சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைப்பதர்கு திராவிட முன்னேற்றக் கழகம் புதிய புதிய திட்டங்களுடன் காய் நகர்த்துகிறது.ஆட்சியில் பங்கு வேண்டும், அமைச்சரவியில் இடம் வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும் என அடம் பிடித்த விடுதலைச் சிறுத்தைகளும், தமிழக காங்கிரஸும் இப்போதைக்கு அமைதியாக இருக்கின்றன. இவற்றி எல்லாம் காதில் வேங்கிக் கொள்ளாத முதல்வர் ஸ்டாலின் தனது திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விகளுக்கு பாரதீய ஜனதாக் கட்சிதான் காரணம் எனக்
கண்டுபிடித்த எடப்பாடி அந்தக் கட்சியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் மட்சித் தலைவர்பதவியில் இருந்த மகன் அன்புமணியைத்
தூக்கு எறிந்துவிட்டு இன்று முதல் நான் தான் தலைவர் என அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். தகப்பனுக்கு
எதிராகப் போர்க்கொடி தூக்கிய அன்புமணி இன்னமும்
நானே தலைவர் என சொல்கிறார். தகப்பனுக்கும்,
மகனுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்கள் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள்.
தனது மகனை அரசியல் அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார் வைகோ. வைகோவின் மகன் துரைக்கும் , கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்தியவுக்கும் இடையிலான உட்பூசல் சந்திக்கு வந்துள்ளது.
தமிழக அரசிலயைத் தாண்டி இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது.
தமிழகத்தில்
நடந்த தேர்தல்களில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி
சேர்ந்ததனால் தோல்வியடைந்ததாக வாக்கு மூலம் வழங்கிய எடப்பாடியார் கூட்டணியை முறித்துக்
கொண்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இல்லை என்றால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது
எனத் தெரிந்துகொண்ட பாரதீய ஜனதாத் தலைவர்கள் எடப்பாடிஅயிச் சமாதானப் படுத்த முயன்றார்கள்.
தனது நிலைப் பாட்டில் எடப்பாடி உறுதியாக இருந்தார்.
பாரதீய
ஜனதாவுடன் கூட்டணி சேரமாட்டேன் என எடப்பாடி சத்தியப் பிரமாணம் செய்தார்.
அண்ணா
திராவிட முன்னேறக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால்
கட்சியை விட்டு வெளியேறப் போவதாக அண்ணாமலை
ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இரண்டு
பேரின் வாய்ச் சவடால்களும் காற்றில் கரைந்து விட்டன.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை மீண்டும் தொடங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வெள்ளிக்கிழமை முறைப்படி அறிவித்தார்.
அதிமுக இல்லை என்றால் தமிழ்கத்தில் தாமரை மலராது என்பதை
உணர்ந்துகொண்ட அமித்ஷா கூட்டணியை உறுதி செய்தார்.
2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக
முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி
பழனிசாமி இருப்பார் என அமித்ஷா கூறியுள்ளார்.
அமித்ஷாவின்
அருகே எடப்பாடி அமைதியாக இருந்தார். அமித்ஷாவின் இன்னொரு பக்கத்தில் ஒன்றுமே தெரியாததுபோல அப்பாவியாக அண்ணாமலை அமர்ந்திருந்தார்.
அந்த
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமித்ஷா மட்டும் பேசினார். எடப்பாடி பொம்மைபோல இருந்தார். பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதற்கு அண்ணாமலையில் நடவடிக்கைகளும் காரணம்.
அதிமுகவுடன்
கூட்டணி சேர்வதற்காக அண்ணாமலை பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்
பதவியில் இருந்து அண்ணாமலை தூக்கி எறியப்பட்டார். தமிழக பாரதீய ஜனதாவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் டெரிவு செய்யப்பட்டார்.பாரதீய
ஜனதாவுடன் எடப்பாடி கூட்டணி சேர்ந்ததை அதிமுகவின் மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை. தொகுதிக்குள்
ராஜாவாக வலம் வந்த நான் தோற்றது பாரதீய ஜனதாவால்தான் என மேடைக்கு மேடை வாக்கு மூலமளித்த ஜெயக்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனைய வர்களும்
மெளனமாக இருக்கின்றனர். கூட்டனி மேடையில் எடப்பாடியைத் தவிர வேறு யாரும் காணப்படவில்லை.
அதிமுக
தலைவர்களை வழிக்குக் கொண்டுவரும் பாரிய பொறுப்பு எடப்பாடியின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
பாமக பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்களால்
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். தேர்தல் ஆணையமும் அதை அங்கீரித்திருக்கிறது என்று
டாக்டர் அன்புமணி தெரிவித்ததால் சமாதனப் பேச்சு
வார்த்தை நடத்தியவர்கள் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள்.
அன்புமணி
வெளியிட்ட அறிக்கையில்
பாட்டாளி
மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை
கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில்
2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 திகதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக்
காவலர் மருத்துவர் அய்யாவின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
அதை
இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி
பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும்
நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக
கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா
பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும்
தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால்
, டாக்டர் ராமதாஸுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இப்போது கட்சித் தலைவர் நீக்கத்திற்கு
அவர் அவசர பொதுக்குழுவைக் கூட்டியாக வேண்டும். ஆனால் பொதுக் குழுவில் அன்புமணிக்கே
ஆதரவு அதிகம் என்று கூறப்படுகிறது. எனவேதான் அவசர பொதுக்குழுவை டாக்டர் ராமதாஸ் கூட்டாமல்
இருப்பதாக சொல்லப்படுகிறது.
தலைவர்
பதவியை தான் விட்டுக் கொடுத்து விட மாட்டேன்
என்பதை அவர் மறைமுகமாக உணர்த்துவதாக கருதப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் சமரசத்திற்கு
வராவிட்டால் கட்சி உடைவதையும் தவிர்க்க முடியாது என்றே சொல்கிறார்கள். அப்படி ஒரு சூழல்
ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் பாமகவின் சின்னத்தை முடக்கி விடும் வாய்ப்புகளும் அதிகம்.
இரு
தலைவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். ஆனால்
யாருக்கும் டாக்டர் ராமதாஸ் பிடி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
துரை
வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு
எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை
மீறி யாரும் செயல்படக் கூடாது என நிர்வாகிகளுக்கு வைகோ அறிவுறுத்தி உள்ளார்.
மதிமுக
பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதை
தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியால்
கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், துரை வைகோ பொறுப்பேற்ற நாள் முதல் அவரது
ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில்
அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் போட்டுள்ளதாக
வும் கூறப்படுகிறது.
தொடர்ந்து,
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்ததால், துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கு
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர், அதுமோதலாக உருவெடுத்து, தற்போது உச்ச கட்டத்தை
அடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்புதிருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்
மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானத்தை
நிறைவேற்றினர்.
இந்த
சூழ்நிலையில், கடந்த 12ம் திகதி சென்னை தாயகத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
நடைபெற்றது. அப்போது, நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டி,
நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வைகோ முன்னிலையில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அப்போது
கூட்டத்தில் இருந்து துரை வைகோ கோபமாக வெளியேறினார்.
இந்நிலையில்,
துரை வைகோ ஆதரவாளர் சத்யகுமரன், ‘மதிமுகவில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும்,
ஈ.வெ.ரா., அண்ணா, வைகோ, துரை வைகோ மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள்
இருக்கலாம். மறுப்பவர்கள் உடனே வெளியேறலாம். இது துரை வைகோ காலம்,’ என அறிக்கை வெளியிட்டார்.
இதற்குப்
பதிலடி கொடுத்த மல்லை சத்யா, ‘மதிமுகவில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய்,
பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு
தந்துள்ளனர். எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு
இருப்பேன். என் விசுவாசம், நம்பகத்தன்மையை வைகோ அறிவார்.
ஒருசிலர்
எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க
எந்த சக்தியாலும் முடியாது. நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் அரசியல் உலகம்
என்னை சொல்லலாம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒரு போதும் வரக்கூடாது
என்ற உறுதியோடு மதிமுகவில் பயணிக்கிறேன். சமூக வலைதளங்களில் என் படம், பெயர் போட்டு
பதிவிடுபவர்க ளுக்கு நானே பதில் கொடுக்கிறேன். இந்த விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்,’
என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வைகோ
அறிக்கை: இதற்கிடையே, திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தைக்
கண்டித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் ஏப்.20-ம்
தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தை
கூட்டி தீர்மானங்கள் நிறை வேற்றி உள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய
கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர்களின் குழறுபடிகளால் தொண்டர்கள் திகைத்து நிற்கிறார்கள். தேர்தலுக்கு ஒரு வருடம் இருப்பதாக் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ர்க்கப்பட்டு விடும் என அவர்கள் நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment