Wednesday, April 9, 2025

சாதித்தார் சாய் சுதர்சன் வென்றது குஜராத்


  குஜராத் மாநிலம் அஹம‌தாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் போட்டியில்   ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய குஜராத 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனான சாய் சுதர்சன் ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார்.

நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  ராஜஸ்தான் கப்டன் சஞ்சு சாம்சன், பந்து வீசைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத  20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த ராஜஸ்தான் 159  ஓட்டங்கள் எடுத்தது.

  குஜராத் அணிக்கு கப்டன் சுப்மன் கில் 2  ஓட்டங்களுடன் வெளியேறினார். சாய் சுதர்சன், பட்லர் ஜோடி நம்பிக்கை தந்தது. பொறுப்பாக ஆடிய சுதர்சன், 32 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 80  ஓட்டங்கள் சேர்த்த போது தீக் ஷனா பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்த  பட்லர் ஆட்டமிழந்தார். பட்லர் வெளியேற களத்துக்கு வந்த ஷாருகான் அதிரடி காட்டினார்.

 பரூக்கி வீசிய 12வது ஓவரில்   2 பவுண்டரி  அடித்த‌ ஷாருக்கான், ஷாருக்கான், தீக் ஷனா வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்டினார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு 62  ஓட்டங்கள்  சேர்த்த போது தீக் ஷனா 'சுழலில்' சிக்கிய  ஷாருக்கான்  36  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.53 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்த சாய்சுதர்சன் ஆட்டமிழந்தார். 

சுதர்சன் 82 ரன்னில் (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ரஷித் கான் (12) நிலைக்கவில்லை. சந்தீப் சர்மா வீசிய 20வது ஓவரில் அசத்திய ராகுல் திவாதியா, ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

குஜராத் அணி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 218 எனும்  இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தானின் வீரர்கள் நிலைக்கவில்லை கப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடி ஓரளவு கைகொடுத்தது.  மூன்றாவது விக்கெட்டுக்கு 48  ஓட்டங்கள் அடித்தபோது 26 ஓட்டங்கள் எடுத்த பராக் ஆட்டமிழந்தார்  பறக்கவிட்டார்.  சாம்சன் 41 ,ஹெட் மெயர்  52 ஓட்டங்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. 

ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சாய் சுதர்சன். இவர், 1307  ஓட்டங்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில்  1338 ஓட்டங்களுடன் ஷான் மார்ஷ்  உள்ளார். 1141 ஓட்டங்களுடன்  கிறிஸ் கெயில்: மூன்றாவது இடத்திலும், 1096 ஓட்டங்களுடன் . கேன் வில்லியம்சன் நான்காவது இடத்திலும், 1082 ஓட்டங்களுடன்  மேத்தியூ ஹைடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி கப்டன் சஞ்சு சாம்சன்,   தனது 300வது 'ரி-20' போட்டியில் பங்கேற்றார். 

பிரிமியர் லீக் அரங்கில் குஜராத் அணி, ராஜஸ்தானுக்கு எதிராக 6வது வெற்றியை பதிவு செய்தது.  இரு  அணிகளும் மோதிய 7 போட்டியில், குஜராத் 6 போட்டிகளிலும்,  ராஜஸ்தான் ஒரு போட்டியிலும்  வென்றன.

 

No comments: