Wednesday, April 9, 2025

போராடித் தோற்றது கொல்கத்தா

 கொல்கத்தா டன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் கொல்கத்தா    லக்னோ அணிகள் மோதின லக்னோவுக்கு எதிராக  கடைசி ஓவர் வரை 'டென்ஷன்' எகிறிய போட்டியில் லக்னோ பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. 4  ஓட்ட வித்தியாசத்தில் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

நணயச் சுழற்சியில்கொல்கத்தா க‌ப்டன் ரகானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 3 விக்கெற்களை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது. 239 ர்னும் பிரமாண்டமான இலக்கைத் துரத்திய  கொல்கத்தா 7 விக்கெற்களை  இழந்து 234 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மிட்சல் மார்ஷ், மார்க்ரம் கலக்கினர்.  முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 99  ஓட்டங்கள்  சேர்த்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் மார்க்ரம் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.   . இத்தொடரில் நான்காவது அரைசதம் கடந்த மார்ஷ், 81  ஓட்டங்களுடன் வெளியேறினார்.

  பூரன். 21 பந்துகளில்   அரைசதம் எட்டினார். ரசல் ஓவரில் (18வது), பூரன் 24  ஓட்டங்கள்  விளாசினார்.   கடைசி 10 ஓவர்களில்  143  ஓட்டங்கள் அடிக்கப்பட்டன.  லக்னோ அணி 20 ஓவர்கலில் 3 விக்கெற்களை இழந்து  238 ஓட்டங்கள் எடுத்தது.   பூரன் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்தார்.

239  எனும் கடின இலக்கை விரட்டிய கொல்கத்தா மிரட்டியது.   குயின்டன்15,  நரைன், 30 ஓட்டங்களுடன் வெளியேறினர்.  26 பந்துகளில்  அரைசதம் எட்டிய‌னார் ரகானே. ஷர்துல் தாகூர் பந்தில் ரகானே 61 ஓட்டங்கள் அடித்த ரகானே ஆட்டமிழந்ததுடன் கொல்கத்தசவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  ரமன்தீப் சிங் 1, ரகுவன்ஷி 5   வெங்கடேஷ், 45 , ரசல் 7 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர். 18 ஓவர்களீல்   7 விக்கெற்களை  இழந்து  கோல்கட்டா  201 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி 12 பந்துகளில்  வெற்றிக்கு 38  ஓட்டங்கள்  தேவைப்பட்டது. அவேஷ் கான் ஓவரில்  19 ஓட்டங்கள் , ரிங்கு சிங் 14  ஓட்டங்கள்  (6,4,4) விளாச, 'டென்ஷன்' அதிகரித்தது. கடைசி ஓவரில் 24  ஓட்டங்கள்  தேவை என்ற நிலையில், பிஷ்னோய் பந்துவீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹர்ஷித் ராணா, அடுத்த இரு பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வாய்ப்பு மங்கியது. கடைசி 3 பந்துகளில் 19 ஓட்டங்கள்  தேவைப்பட்டன. 3 சிக்சர் அடித்தால் 'சூப்பர் ஓவருக்கு' வாய்ப்பு இருந்தது. ரிங்கு சிங் (4, 4, 6) விளாசியும் பலன் கிடைக்கவில்லை. கோல்கட்டா அணி 20 ஓவரில் 234/7 ரன் மட்டும் எடுத்து, தோற்றது. ரிங்கு சிங் (38), ஹர்ஷித் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை பூரன் வென்றார்.

லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் தனது 100வது பிரிமியர் போட்டியில் பங்கேற்றார். இவருக்கு '100' என்ற நம்பர் பொறிக்கப்பட்ட சிறப்பு 'ஜெர்சி'யை லக்னோ ஆலோசகர் ஜாகிர் கான் வழங்கினார்.

 தடுமாறிய ஷர்துல், பிரிமியர் அரங்கில் தொடர்ந்து 5 'வைடு' (12.1வது ஓவர்) வீசிய முதல் வீரரானார்.

பிரிமியர் அரங்கில் லக்னோ அணி அதிபட்சமாக 257/7 ரன் (எதிர், பஞ்சாப், 2023, மொகாலி) எடுத்து உள்ளது.   இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (238/3) பதிவு செய்தது.

பிரிமியர் அரங்கில் அதிவேகமாக 2,000  ஓட்டங்கள்  எட்டிய இரண்டாவது வீரரானார் பூரன் (1198 பந்து). முதலிடத்தில் ரசல் (1120 பந்து) உள்ளார்.

  61 ஓட்டங்கள் எடுத்த கொல்கத்தா கப்டன் ரகானே, 'ரி-20' அரங்கில் 50வது அரைசதம் அடித்தார். 'ரி-20' அரங்கில் 7,000  ஓட்டங்கள்  (276 போட்டி) எட்டி அசத்தினார்.

பிரிமியர் அரங்கில்,  ஓட்ட  அடிப்படையில் 3வது குறைவான வித்தியாசத்தில் (4 ஓட்டங்கல் ) லக்னோ வென்றது. இதற்கு முன் 1  ஓட்டம்  (எதிர், கோல்கட்டா, 2023), 2  ஓட்டங்கள்  (எதிர், கோல்கட்டா, 2022) வென்றிருந்தது.

* பிரிமியர் அரங்கில் 'சேஸ்' செய்த போட்டிகளில் 4 அல்லது அதற்கு குறைவான ஓட்ட‌ வித்தியாசத்தில் 7 முறை  கொல்கத்தா  தோற்றது. இதில் 3 முறை லக்னோவிடம் தோல்வியை சந்தித்தது.

No comments: