கிறிக்கெற் உலகில் சாதனை படைத்த 14 வயதுப் பாலகனைப் பற்றியே விளையாட்டுலகம் இப்போது பேசுகிறது.
குஜராத்
அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்சியின் அபார சதத்தால் ராஜஸ்தான் எட்டு விக்கெட்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
ஜெய்ப்பூரில்
நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள்
முடிவில் நான்கு விக்கெற்களை இழந்து 209 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக
சுப்மன் கில் 80 ஓட்டங்களும் பட்லர் 50 ஓட்டங்களும் எடுத்தனர் .
கடின
இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் வைபவ் சூர்யவன்சி,
யஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ராஜஸ்தான் அணிக்கு அதிரடியான தொடக்கம் தந்தனர்.
14 வயது சிறுவனான வைபப் சூரியவன்சி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். ஒரு பக்கம்
இவர் அடித்து ஆட மறுமுனையில் ஜெய்ஸ்வால் நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வந்தார். சூர்யவன்சி
17 பந்துகளில் தனது அரை சதத்தை கடக்க இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த
வீரர் எனோட்டங்ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையும் ஐ பி எல் வரலாற்றில் சூர்யவன்சி படைத்தார்.
தொடர்ந்து இருவரும் தங்களது அதிரையை தொடர ராஜஸ்தான் ராயல் அணி எட்டாவது ஓவரிலேயே
100 ஓட்டங்களை கடந்தது.
அதிரடியாக
விளையாடிய சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் குறைந்த வயதில் சதம்
அடித்த வீரர் என்ற உலக சாதனையும் சூரியவன்சி தனதாக்கினார்.
38
பந்துகளில் 103 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற மறுமுனையில் ஜெய்ஸ்வால் அரை சதம்
அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.
ல்
ராஜஸ்தான் ராயல் 15.3 ஓவர்களில் 210 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால்
70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலும் கப்டன் ரியான் பராக் 32 ஓட்டங்கள் எடுத்து இறுதி
வரை களத்தில்
53
பந்துகளில் சதம் அடித்த சூர்யவ்வன்ஷி 3 உலக
சாதனையுடன் 6 ஐபிஎல் வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளார். 11 சிக்ஸர்கள்
7 பவுண்டரிகள் அடித்து குஜராத் பந்து வீச்சாளர்களை திணறடித்தார்.
14 வருடம் 32 வயதில் 100 ஓட்டங்களைத் தொட்ட சூர்யவன்ஷி ரி20 கிறிக்கெட்ற்ல் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பைக்கு எதிராக 2013ஆம் ஆண்டு உள்ளூர் தொடரில் மகாராஷ்டிராவின் விஜய் ஜோல் 18 வருடம் 118 நாட்களில் சதத்தை அடித்தார்.
ரி20
கிறிக்கெற்றில் மிகவும் இளம் வயதில் அரை சதத்தை
அடித்த வீரர் என்று உலக சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஆப்கானிஸ்தான்
வீரர் முகமது நபியின் மகன் ஹசன் ஐசக்கில் 2022ஆம் ஆண்டு 15 வருடம்
360 நாளில் அரை சதத்தை அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இந்தப் போட்டியில் அடித்த 101 ஓட்டங்களில் 93.06% ஓட்டங்களை அதாவது 94 ஒட்டங்களை சூர்யவன்ஷி பவுண்டரிகள் சிக்ஸர்களால் மட்டுமே அடித்துள்ளார். ஒரு ரி20
போட்டியில் பவுண்டரிகளால் மட்டுமே அதிக சதவீத ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு மேகாலயாவுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா
92.45% ப்ப்ட்டங்களை பவுண்டரிகளால் அடித்ததே முந்தைய சாதனை.
.
ஐபிஎல் தொடரில் இளம் வயதில் 50 ஓட்டங்களையும் , 100 ஓட்டங்களையும் அடித்த இந்திய வீரர் என்ற இரட்டை
வரலாற்று சாதனைகளையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக
ரியான் பராக்
17 வருடம் 175 நாட்களில் அரை சதம் அடித்தார்.
மனிஷ் பாண்டே
19 வருடம் 253 நாட்களில் சதம் அடித்தார்.
அந்த இருவரின் சாதனைகளையும் சூர்யவன்ஷி
ஒரு போட்டியிலேயே முறியடித்தார்.
5. 35 பந்துகளில் சதத்தை அடித்த சூர்யவன்சி ஐபிஎல்
வரலாற்றில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் சரித்திரத்தையும் படைத்துள்ளார். இதற்கு
முன் 2010இல் மும்பைக்கு எதிராக ராஜஸ்தானுக்காக யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே
முந்தைய சாதனையாகும்.
கிறிஸ்
கெய்லுக்கு பின் 2வது வேகமான ஐபிஎல் சதத்தை
அடித்த வீரராகவும் சூரியவன்சி சாதனை படைத்துள்ளார்.
க்றிஸ்
கெய்ல்ஸ் - 30 பந்துகளிலும்
வைபவ்
சூர்யவன்ஷி - 35 பந்துகளிலும்
யூசஃப்
பதான் - 37 பந்துகளிலும்
டேவிட்
மில்லர் - 38 பந்துகளிலும்
ட்ராவிஸ் ஜெட் - 39 பந்துகளிலும் சதம் அடித்தர்.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஆட்டநாயகன்
விருதை வென்ற வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் முஜீப் உர் ரஹ்மான்
17 வருடம் 39 நாட்களில் ஆட்டநாயகன் விருதை வென்றதே முந்தைய சாதனை.
ஐபிஎல்
தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக (11) சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும்
அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2010இல் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே வீரர் முரளி
விஜயையும் 11 சிக்சர்கள் அடித்துள்ளார். இது போக குறைந்த (3) போட்டிகளில் ஐபிஎல் சதத்தை
அடித்த இந்திய வீரராகவும் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சேசிங்கில்
வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
No comments:
Post a Comment