Wednesday, January 21, 2009

ஒபாமாவின் ரூ.2.2 கோடி கார்


அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள பராக் ஒபாமா பயன்படுத்தும் காரில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. அதன் விவரம்:
? 18 அடி நீளமும், 5 அடி 10 அங்குலம் உயரமும் கொண்ட இந்த கெடிலாக் நிறுவன சொகுசு காரின் விலை ரூ.2.2 கோடி.
? அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகம் செல்லும் இந்த காரில் சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
? புறப்பட்ட 15வது விநாடியில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
? ஒரு லிட்டர் டீசலுக்கு 2.8 கி.மீ. து}ரம்தான் செல்லும்.
? இந்த காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. காரை குண்டு துளைக்காமல் இருக்க ஸ்டீல், அலுமினியம், டைட்டானியம் கலந்த தகடு பொருத்தப்பட்டுள்ளது.
? கண்ணி வெடி வெடித்தாலும் சேதம் ஏற்படாமல் தடுக்க 12 செ.மீ. கனமான தகடு காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. கார் கதவுகள் முக்கால் அடி கனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
? ஏவுகணை வீசி தாக்கினாலும் சேதமடையாத டீசல் டேங்க் காரில் பொருத்தப்பட்டுள்ளது.
? தீயணைப்பு கருவிகள், துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் காரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
? டயர்கள் வெடித்தாலும் தொடர்ந்து காரை ஓட்டலாம்.
? டிரைவர் சி.ஐ.ஏ.வால் பயிற்சி அளிக்கப்பட்டவர். தீவிரவாத தாக்குதல் உட்பட எந்த ஒரு அபாயகரமான சு10ழ்நிலையிலும் வேகமாக வண்டியை ஓட்ட அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
? நம்பர் பிளேட் பகுதியிலும், பக்கவாட்டிலும் இரவிலும் தெளிவாக படம் எடுக்க கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
? காரில் உள்ள ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் கார் எங்கு இருக்கிறது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்கலாம்.
? பின் பகுதியில் உள்ள இருக்கையில் ஒபாமா உட்கார்ந்து இருப்பார். அவருக்கு முன் இன்டர்நெட் வசதியுடன் ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப் கம்யூட்டர் உள்ளது. மேலும் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும், துணை ஜனாதிபதி மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகனுடன் உடனடியாக பேச தொலைபேசிகளும் வைக்கப்பட்டுள்ளது.
? ஆபத்து காலத்தில் உதவுவதற்காக ஒபாமாவின் ரத்த வகையை சேர்ந்த ரத்தமும், ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் வைக்கப்பட்டிருக்கும்.

1 comment:

Anonymous said...

தகவலுக்கு நன்றி ...

::வாங்கலான்::