Sunday, January 4, 2009

பலமான நிலையில் அவுஸ்திரேலியா


தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ஓட்டங்கள் அடித்து பலமான நிலையில் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் டை வெல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
ஆறு விக்கெட்டுகளை இழந்து 267ஓட்டங்களை எடுத்த நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
மைக்கல் கிளார்க் 73 ஓட்டங்களுடனும் ஜோன்ஸன் 17 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 142 ஓட்டங்கள் எடுத்தனர்.
கிளார்க் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 138 ஓட்டங்கள் அடித்தார். 250 பந்துகளுக்கு முகம் கொடுத்த கிளார்க் 17 பவுண்டரிகள் அடங்கலாக 138 ஓட்டங்கள் எடுத்தார். கிளார்க்குடன் இணை ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய ஜோன்ஸன் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்ரெயின், ஹமிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் நிதினி, மொகைல், கலிஸ், டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தென் ஆபிரிக்க அணி முதலா வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்தது.
மக்கன்சி 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தென் ஆபிரிக்கா அணித் தலைவர் ஸ்மித் 30 ஓட்டங்களுடனும் கலிஸ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஸ்மித் 31 பந்துகள் 5 பவுன்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தார்.

No comments: