Tuesday, January 6, 2009

வெற்றி பெறுமா தென் ஆபிரிக்கா?

தென் ஆபிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 390 ஓட்டங்கள் என்ற இலக்கை அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 445 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆபிரிக்க அணி முதலா வது இன்னிங்ஸில் 327 ஓட்டங் கள் எடுத்தது.
விக்கெட் இழப்பின்றி 33 ஓட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஹைடன் 39, கட்டிச் 61, பொண்டிங் 53, கிளார்க் 41 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். ஹசே ஆட்டம் இழக்காது 45 ஓட்டங்கள் எடுத்தார்.
மார்க்கஸ் இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்ரெயின், ஹாமிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தென் ஆபிரிக்க அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான மார்க்ஸ் ஓட்டம் எதனையும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மக்கன்சி 25 ஓட்டங்களுடனும், அம்லா 30 ஓட்டங்களுடனும் நான்காம் நாள் களத்தில் உள்ளனர். முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 414 ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி கடைசி நாளான இன்று 313 ஓட்டங்களை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தென்னாபிரிக்க ரசிகர்களிடம் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
தென் ஆபிரிக்க வீரர்கள் சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்றனர். மூன்றாவது போட்டியையும் அவுஸ்திரேலியா இழக்கும் என்ற அவா ரசிகர்களிடம் உள்ளது.

No comments: