
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக் கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்
இவர் தவிர அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் புஷ் (சீனி யர்), பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், தாமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமேன் ஆகியோரும், அமெரிக்க துணை அதிபராக இருந்த நெல்சன் ராக்ஃபெல்லர், ஹென்றி வாலேஸ் ஆகியோரும் இடது கைப்பழக்கம் உடையவர்கள் தான்
நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட், அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸôண் டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின் சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பாவெல் பெüடன், கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்று வித்த ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது, 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது, 6-வது ஜார்ஜ் ஆகியோர் உள்பட வர லாறு படைத்த பலர் இடது கைப்பழக்கம் உடையவர்களே.
No comments:
Post a Comment