
இந்திய இலங்கை அணிகளுக்கிடையே தம்புள்ளையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற் றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டில்ஷான் ஓட்டமெதுவும் எடுக்காது "ரன் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார்.
ஜயசூரிய, சங்கக்கார ஜோடியின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 86 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார 44 ஓட்டங்களில் ஒஜாவின் பந்துக்கு ரெய்னாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். கந்தம்பே 17 ஓட்டங்களில் இஷாந்த் சர்மாவின் பந்தை சஹீர்கானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் விக்öகட்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கையில் ஜயசூரிய தனது ஆளுமையை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தார்.
114 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஜயசூரிய ஒரு சிக்ஸர் 10 பௌண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சஹீர்கானின் பந்தை பட்டேலிடம் பிடி கொடுத்து அவர் ஆட்டம் இழந்தபோது இலங்கை அணி 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அணித் தலைவர் மஹேல 11 ஓட்டங்களிலும் மஹ்ரூப் 35 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். 11 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்த கபுகெதர "ரன் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார்.
இஷாந்த் சர்மா மூன்று விக்கட்களையும் சஹீர்கான், ஒஜா ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
247 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 4 விக் கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.
துஷாரவின் பந்து வீச்சில் ஐந்து ஓட்டங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். கம்பீர், ரெய்னா ஜோடி இந்திய அணியை தூக்கி நிறுத்தியது. இவர்கள் இருவரும் இணைந்து 113 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 68 பந்துகளுக்கு முகம் கொடு த்து 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முரளிதரனின் பந்தை கந்தம்பேயிடம் பிடி கொடு த்தே அவர் ஆட்டம் இழந்தார்.
கம்பீரின் விக்கெட்டைக் கைப்பற்றிய முரளிதரன் 501 ஆவது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் அதிரடி ஆட்ட நாயகர்களில் ஒருவரான ரெய்னா 54 ஓட்டங்களில் "ரன் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்துவந்த யுவராஜ் 23 ஓட்டங்களு டன் ஆட்டமிழந்தார். டோனி ரோஹித் ஷர்மா ஜோடி நிதானமாக துடுப்பெடுத் தாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. டோனி ஆட்டமிழக்காது 61 ஓட்டங்க ளையும், ரோஹித் ஷர்மா 25 ஓட்டங் களையும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பாக துஷார, மஹ் ரூப், முரளிதரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டார்.
1 comment:
ரொம்ப முக்கியம்
Post a Comment