Tuesday, January 20, 2009

வாரிசுகளின் வீழ்ச்சியும் எழுச்சியும்


தமிழ்த்திரை உலகில் பல புதுமைகளைச் செய்தவர் பாராதிராஜா. இவர் அறிமுகப்படுத்திய நாயகிகள் மிகச் சிறந்த நடிகைகளாக இன்றும் திகழ்கின்றனர். ராதா, ராதிகா, ரதி,ரஞ்சனி என்று ஆர் எழுத்தில் இவரது அறிமுகங்கள் திரை உலகில் தமது வெற்றிக் கொடியை நட்டனர்.
நடிக்க தெரிந்தவர்களை தேடிப்பிடித்து அறிமுகப்படுத்திய பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தன் மகனை நாயகனாக்க முயற்சி செய்தார். மிகச் சிறந்த படம் என பெருமை பெற்ற கடல் பூக்கள் மனோஜை குப்புற விழுத்தியது. தமிழ்த் திரை உலகில் பிராமாண்டத்துக்கு சொந்தக்காரர்களில் ஒருவரான கே.டி.குஞ்சுமோன் தன் மகன் எபி நாயகனாக்க முயற்சி செய்து கடனாளியானார். கோடீஸ்வரன் என்ற படம் இன்னமும் வெளிவரவில்லை. ஆனால், ஏ.பி. குஞ்சுமோன் கடனாளியாகிவிட்டார்.
ஏ.எல்.அழகப்பன் தன் மகன் உதயாவை கதாநாயனாக்க ஆசைப்பட்டு சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி என்ற படத்தை எடுத்தார். பெயருக்கு ஏற்றாற் போல் திருநெல்வேலி அல்வா கொடுத்து விட்டது.
ஐலவ் இந்தியா, மகா பிரபு போன்ற படங்களைத் தயாரித்த ஜி.கே. ரெட்டி, தன் மகன் அஜயை நாயனாக்க பூப்பறிக்க வருகிறோம். லவ்மரேஜ் என்ற இரண்டு படங்களை தயாரித்தார். இரண்டு படங்களும் படுதோல்வியடைந்ததால் சினிமாவை விட்டு வெளியேறி விட்டார்.

தமது மகன் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்ததனால் கதையில் கோட்டை விட்டவர்கள் திரை உலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டார்கள்.
தன் மகன் விஜயை நாயகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகர் பணத்தைச் செலவு செய்து படத்தைத் தயாரித்தார். படங்கள் சுருண்டு விட்டன. விஜய்யை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விக்ரமனின் பூவே உனக்காக வெவாரிசுகளின் வீழ்ச்சியும் எழுச்சியும் யானதும் விஜயின் புகழ் உயரத் தொடங்கியது. இன்னமும் இறங்கவில்லை.
ஆர்.பி. சௌத்ரி தன் மகன் ஜீவாவை ஆசைஆசையாய் படத்தின் மூலம் நாயகனாக்கினார். படம் படுத்து விட்டது. கவலைப்படாத சௌத்திரி தித்திக்குதே மூலம் மீண்டும் முயற்சி செய்தார். அதுவும் தித்திக்கவில்லை. சற்றும் சோர்வடையாத சௌத்தரி இன்னொரு மகன் ரமேஷை ஜித்தன் மூலம் நாயகனாக்க முயற்சி செய்தார். அதுவும் கை கூடவில்லை.
சத்தியராஜ் திரை உலகில் வலம் வர உதவி செய்த மாதம்பட்டி சிவகுமார் தன் மகன் சத்தியனை கதாநாயகனாக்க முயற்சி செய்து பணத்தை வாரி இறைத்தார். அவரின் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது
.
துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன், திருடா திருடி மூலம் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் பரபரப்பான ஹீரோவானார்.
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. ஜெயம் ஜெயித்ததும் இவரின் பெயருக்கு முன்னால் ஜெயம் ஒட்டிக் கொண்டது. எடிட்டர் மோகன் தன் மகன் ஜெயம் ரவியை நாயகனாக்கி மகிழ்ந்தார்.
தமிழ்த்திரை உலகில் பரபரப்பான நாயகர்களில் ஒருவரானார் ஜெயம் ரவி.
ஹீரோக்களின் சம்பளத்தை அதிகமாக்கி ஆச்சரியப்பட வைத்தவர் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தன் மகன் ரவி கிருஷ்ணாவை நாயகனாக்கிப்பார்க்க ஆசைப்பட்டு 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தைத் தயாரித்தார் படம் பெரு வெற்றி பெற்றது.ரவி கிருஷ்ணா காணாமல் போய்விட்டார்.
ரமணி
மித்திரன் 18 01 2009

No comments: