Thursday, February 5, 2009

அருகில்வந்து தேனாக இனிக்கும் குரல்


ஆந்திரப் பிரதேசத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அந்த வீட்டில் சேஷகிரி அம்மாள் மனமுருகி பக்திப் பாடல்களைப் பாடுவார். அவரின் மகனான ஸ்ரீநிவாஸ் ஹிந்தி திரைப்படப் பாடல்களில் மனதைப் பறிகொடுத்தார். மெஹ்மூத், முகம்மது ரஃபி, மன்னாடே, முகேஷ், லதா மங்கேஸ்கர் ஆகியோரின் பாடல்களை பாடிப் பரவசமடைந்தார்.
ஸ்ரீநிவாஸின் கலை உணர்வை கண்ட தாய்மாமனான கிடாம்பி கிருஷ்ணமாச்சாரி, இசைத்துறையில் அவரை ஊக்குவித்து 12 வயதில் மேடையேற்றிப் பாட வைத்தார். பாடகனாகும் ஆசையில் சினிமா நாடகம் என்று மகன் சுற்றுவதைக் கண்ட தகப்பன் முதலில் படித்து பட்டம் வாங்கு என்று கட்டளையிட்டார். தகப்பனின் விருப்பப்படி பி. கொம் படித்து விட்டு பாடகனாகும் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்தார்.
ஸ்ரீநிவாஸ் கலைத்துறையில் வெற்றி பெறுவாரா என்று அறிவதற்காக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற சோதிடர் ஒருவரிடம் மகனை அழைத்துச் சென்றார் தாயாரான சேஷகிரி அம்மாள்.
ஸ்ரீநிவாஸின் சாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்த ஜோதிடர் உதட்டைப் பிதுக்கினார். கலைத்துறையில் இந்தப் பிள்ளை ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டான் என்று அடித்துக் கூறினார் சோதிடர். சோதிடரின் கூற்றால் தாயார் மனம் கலங்கினார். ஆனால் ஸ்ரீநிவாஸன் அசரவில்லை.
நீங்கள் சொல்லும் பலன்கள் எல்லாம் பலிக்குமா என்று ஜோதிடரைக் கேட்டார் ஸ்ரீநிவாஸ்.
பெரும்பாலும் பலிக்கும் சிலவேளை பலிக்காமலும் போகலாம் என்று பதிலளித்தார் சோதிடர்.
என் விஷயத்தில் உங்கள் சோதிடம் பலிக்காமல் போகலாம் என்று ஸ்ரீநிவாஸ் கூறினார்.
ஸ்ரீநிவாஸின் ஆர்வத்தைக் கண்ட சோதிடர் அவரை வாழ்த்தி அனுப்பினார்.
ஸ்ரீநிவாசனின் தகப்பனான பணித்திர சுவாமியின் குடும்ப நண்பர் வீணை வித்துவானான ஈமனி சங்கர சாஸ்திரி, ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். மகனின் எதிர்கால ஆசையை நிறைவேற்றுவதற்காக ஈமனி சங்கர சாஸ்திரியிடம் மகனை அழைத்துச் சென்றார் தகப்பன்.
சின்ன வயதில் ஸ்ரீநிவாஸன் பாடியதைக் கேட்ட ஈமனி சங்கர சாஸ்திரி வளர்ந்து விட்ட ஸ்ரீநிவாஸை பாடும்படி கூறினர். முகமது ரஃபியின் பாடலை பாடினார் ஸ்ரீநிவாஸின் அந்தக் குரலைக் கேட்டதும் ஈமனி சங்கரசாஸ்திரி மெய்சிலித்தார்.
இவனுடைய வருங்காலம் நல்லதாக இருக்கும். இவனை இங்கேயே விட்டு விட்டு ஊருக்குப் போங்கள் என்றார்.
1952 ஆம் ஆண்டு மிஸ்டர் சம்பத் என்ற படத்தை ஜெமினி அதிபர் வாசன் தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்தார். தமிழில் கொத்தமங்கலம் சுப்புவும், ஹிந்தியில் மோதிலாலும் பிரதான பாத்திரத்தில் நடித்தனர். மிஸ்டர் சம்பத் ஹிந்தி படத்தில் பெண் குரல்களுடன் இணைந்து சில துண்டுப் பாடல்களைப் பாடினார் ஸ்ரீநிவாஸன்.
ஸ்ரீநிவாஸின் குரலைக் கேட்டவாசன் மெய் மறந்தõர். சிறந்ததொரு பின்னணிப் பாடகரை அறிமுகப்படுத்தியதற்காக ஈமனி சங்கர சாஸ்திரிகளை பாராட்டினார். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்ற பெயர் பி. பீ. ஸ்ரீநிவாஸ் என்று அழைக்கப்பட்டது. பி. பீ. ஸ்ரீநிவாஸ் என்றால் பிளேபாக் கிங்கர் ஸ்ரீநிவாஸ் என்று மிஸ்டர் சம்பத்தின் ஒலிப்பதிவாளர் ஜீவா குறிப்பிட்டார்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ரீநிவாஸின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி. ஆருக்கும் ரி. எம். சௌந்தரராஜன் பின்னணிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளை ஜெமினிகணேசனுக்கு ஏ. எம். ராஜா பின்னணி குரல் கொடுத்தார்.
1959 ஆம் ஆண்டு வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜெமினி கணேசனுக்காக இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்ற பாடலை முதன் முதலாகப் பாடினார் பி. பீ. ஸ்ரீநிவாஸ். ஜி. ராமநாதனின் இசையில் உருவான இப்பாடலை பி. சுசீலாவுடன் இணைந்து பாடினார் ஸ்ரீநிவாஸ்.

ஜெமினி கணேசனின் குரலுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது ஸ்ரீநிவாஸின் குரல். கப்பலோட்டிய தமிழன் படத்துக்காக மீண்டும் ஒரு முறை ஜெமினி கணேசனுக்காக ஸ்ரீநிவாஸைப் பாடச் செய்தார் இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன். காற்று வெளியிடை கண்ணம்மா என்ற பாரதியின் இலக்கிய வரிகள் ஸ்ரீநிவாஸின் குரலில் தேனாக இனித்தது.
ஸ்ரீநிவாஸின் குரல் ஜெமினி கணேசனுக்கு பொருத்தினாலும் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியை உடைக்க முடியவில்லை. மிஸ்ஸியம்மா, களத்தூர் கண்ணம்மா, கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் பாடல்கள் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியில் ஜொலித்தன.
உத்தமி பெற்ற ரத்தினம் படத்தில் எஸ். வேணுவின் இசை அமைப்பில் தேடிடுதே வானமிங்கே, பாதை தெரியுது பார் படத்தில் எம். வி. ஸ்ரீநிவாஸன் இசை அமைப்பில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே, பொன்னித் திருநாள் படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் வீசுதென்றலே வீசு விடிவெள்ளி படத்தில் ஏ. எம். ராஜாவின் இசையில் பண்ணோடு பிறந்தது தாளம். மன்னாதி மன்னனில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் நீயோ நானோ யார் நிலவே போன்ற பாடல்கள் ஸ்ரீநிவாஸனுக்கு பெருமை சேர்த்தன.
பி. பி. ஸ்ரீநிவாஸனின் வாழ்க்கையை மாற்றிய பாடல் 1961 ஆம் ஆண்டு வெளியானது. ஏ. வி. எம். தயாரித்த பாவ மன்னிப்புப் படத்தில் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை பி. பீ. ஸ்ரீநிவாஸ் பாடினார். கண்ணதாசனின் அந்தப் பாடல் ஸ்ரீநிவாஸின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியது.
ஜெமினிகணேசனின் குரலுக்கு ஏ. எம். ராஜாவின் குரல்தான் பொருத்தம் என்று இருந்த வேளையில் காலங்களில் அவள் வசந்தம் பாடலை ஸ்ரீநிவாஸன் பாடினால் நன்றாக இருக்கும் என்று மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் கருதினார். இயக்குனர் பீம்சிங்குக்கும் அதே கருத்து இருந்தது. தங்கள் கருத்தை இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கூறினார்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஸ்ரீநிவாஸை பாடச் செய்யுங்கள் என்றார் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. காலத்தால் அழியாத தமிழ்த் திரைப்பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், ஸ்ரீநிவாஸன் கூட்டணி தமிழ்த் திரை இசையை தம் கைகளில் எடுத்தது.
ஸ்ரீநிவாஸின் குரல் ஜெமினி கணேசனுக்கு பொருத்தினாலும் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியை உடைக்க முடியவில்லை. மிஸ்ஸியம்மா, களத்தூர் கண்ணம்மா, கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் பாடல்கள் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியில் ஜொலித்தன.
உத்தமி பெற்ற ரத்தினம் படத்தில் எஸ். வேணுவின் இசை அமைப்பில் தேடிடுதே வானமிங்கே, பாதை தெரியுது பார் படத்தில் எம். வி. ஸ்ரீநிவாஸன் இசை அமைப்பில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே, பொன்னித் திருநாள் படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் வீசுதென்றலே வீசு விடிவெள்ளி படத்தில் ஏ. எம். ராஜாவின் இசையில் பண்ணோடு பிறந்தது தாளம். மன்னாதி மன்னனில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் நீயோ நானோ யார் நிலவே போன்ற பாடல்கள் ஸ்ரீநிவாஸனுக்கு பெருமை சேர்த்தன.
பி. பி. ஸ்ரீநிவாஸனின் வாழ்க்கையை மாற்றிய பாடல் 1961 ஆம் ஆண்டு வெளியானது. ஏ. வி. எம். தயாரித்த பாவ மன்னிப்புப் படத்தில் காலங்களில் அவள் வசந்தம் என்ற
பாடலை பி. பீ. ஸ்ரீநிவாஸ் பாடினார். கண்ணதாசனின் அந்தப் பாடல் ஸ்ரீநிவாஸின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியது.
ஜெமினிகணேசனின் குரலுக்கு ஏ. எம். ராஜாவின் குரல்தான் பொருத்தம் என்று இருந்த வேளையில் காலங்களில் அவள் வசந்தம் பாடலை ஸ்ரீநிவாஸன் பாடினால் நன்றாக இருக்கும் என்று மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் கருதினார். இயக்குனர் பீம்சிங்குக்கும் அதே கருத்து இருந்தது. தங்கள் கருத்தை இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கூறினார்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஸ்ரீநிவாஸை பாடச் செய்யுங்கள் என்றார் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. காலத்தால் அழியாத தமிழ்த் திரைப்பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், ஸ்ரீநிவாஸன் கூட்டணி தமிழ்த் திரை இசையை தம் கைகளில் எடுத்தது.காலங்களில் அவள் வசந்தம் பாடலின் மூலம் ஒரே இரவில் ஸ்ரீவாஸின் மதிப்பு உயர்ந்துவிட்டது. ஜெமினி ராஜா என்ற கூட்டணி மறைந்து ஜெமினி, ஸ்ரீனிவாஸ் கூட்டணி உருவானது. சௌந்தரரராஜன் பாடும் போது அப்பாடல் எம்.ஜி.ஆரீன் படமா, சிவாஜியின் படமா என்று கூறி விடலாம். ஸ்ரீநிவாஸ் பாடும்போது அது ஜெமினியின் படம்தான் என்று அடித்துக் கூறி விடலாம்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் இசை அமைப்பில் பீ.பீ. ஸ்ரீநிவாசுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் ஒரு புதிய உணர்ச்சியை ஏற்படுத்தின.
ஸ்ரீதரின் கை வண்ணத்தில் உருவான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் ஸ்ரீநிவாஸ்
பாடிய நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பாடல் உருகாத உள்ளத்தையும் உருக வைத்தது.

ஜெமினி சாவித்திரி ஆகியோரின் கால்ஷீட் கிடைத்ததும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விரும்பினார் தயாரிப்பாளர் அவசர அவசரமாக பாடலுக்கு இசை அமைத்தார் விஸ்வநாதன். அன்று மாலை சேலம் செல்வதற்காக நீலகிரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய ஸ்ரீநிவாஸ் திட்டமிட்டிருந்தார்.
விஸ்வநாதன் பாடலுக்கு இசையமைத்த பின்னர் ஸ்ரீநிவாஸ் ரயிலேறி விட்டார். அந்தப் பாடலை ஸ்ரீநிவாஸ் பாடினால் தான் பாடல் சிறப்பாக இருக்கும் என்று விஸ்வநாதன் கூறினார். வேறு யாரை யாவது பாடச் சொல்லலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறினார்கள்.
ஸ்ரீநிவாஸின் குரல் வாகு, பாணி எல்லாவற்றையும் மனதில் வைத்துத்தான் பாடலுக்கு இசையமைத்தேன். வேறு யாராவது
பாடுவதாக இருந்தால் புதிதாகத்தான் இசையமைக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னர் கூறினார்.
நல்ல மெட்டை கைவிட தயாரிப்பாளரும் தயாராக இல்லை. ஜெமினி சாவித்திரி ஆகியோரின் கால்ஷீட் கிடைப்பது கஸ்டம் என்றபடியால் வேறுஒருவர் பாட இசை அமைத்து படப்பிடிப்பும் முடித்து விட்டார்கள். ஸ்ரீநிவாஸுக்கு நேரம் கிடைத்தபோது படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ஸ்ரீநிவாஸ் பாட இசையமைத்தார் விஸ்வநாதன்.
துள்ளித் திரிந்த பெண்ணொன்று என்ற அப்பாடல் இன்றும் நெஞ்சில் துள்ளி விளையாடுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமாருக்காக 180 படங்களில் பாடியுள்ளார் ஸ்ரீநிவாஸ். சிவாஜி எம்.ஜி. ஆர் நடித்த படங்களில் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். ஆனால், சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் அவர் பாடிய பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சிவாஜிக்காக நான் சொல்லும் ரகசியம் படத்தில் கண்டேனே உன்னை புனர் ஜென்மம் படத்தில் எங்கும் ??? இல்லை ஆகிய பாடல்களைப் பாடி உள்ளார். எம்.ஜி.ஆருக்கும், மன்னாதி மன்னன் படத்தில் நீயோ நானோ யார் நிலவே, திருடாதேயில் என் அருகே நீ இருந்தால், பாசம் படத்தில் பால் வண்ணம் பருவம் கண்டேன் ஆகிய பாடல்களைப் பாடி உள்ளார்.
எட்டு மொழிகளில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கவிதைகள் எழுதி உள்ளார். நான்கு படத்தில் இவர் எழுதிய இரண்டு உருதுமொழிப் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
நிலவில் மனிதன் காலடி வைத்ததும் ஆங்கிலப் பாடல் எழுதி இசையமைத்து எஸ் ஜானகியுடன் பாடி இøத் தட்டை வெளியிட்டார். அப்பாடலைக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனும் நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ரோங்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள்.
1986 ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் படத்தில் அவர் பாடிய தோல்வி நிலை என நினைத்தால் எனும் பாடல் இன்றும் எழுச்சிப் பாடலாக ஒலிக்கிறது.
ரமணி
மித்திரன் 25,01/01,02/08,02 2009

1 comment:

tamil cinema said...

நெல்லைத்தமிழின் திரட்டியில் இணைக்க
nellaitamil