இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கராச்சியில் நடைபெற்ற பரபரப்பான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
முதல் மூன்று நாட்களும் இலங்கை அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மூன்றாம் நாள் மாலையில் இருந்து ஐந் தாம் நாள் வரை பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் தன் தலைமையில் பொறுப்பைச் சுமந்து இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
யூனுஸ் கானின் 313 ஓட்டங்களும் கமரன் அக்மல் ஆட்டமிழக்காத 158 ஓட்டங்களும் இலங்கை வீரர்களை திக்குமுக்காடச் செய்தன.
ஐந்து விக்öகட்டை இழந்து 574 ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் 765 ஓட்டங்கள் அடித்து இலங்கையை திக்கு முக்காடச் செய்தது. முதல் இன்னிங்ஸில் 121 ஓட்டங்கள் கூடுதலாக பாகிஸ்தான் எடுத்ததனால் இலங்கை வீரர்கள் சோர்வடைந்தனர்.
யூனுஸ்கான் 306 ஓட்டங்களுடனும் கமரன் அக்மல் 27 ஓட்டங்களுடனும் நேற்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர். பெர்னாண்டோவின் பந்து வீச்சில் 313 ஓட்டங்கள் எடுத்த யூனுஸ்கான் ஆட்டமிழந்தார்.
788 நிமிடங்கள் களத்தில் நின்ற இவர் 568 பந்துகளுக்கு முகம் கொடுத்து நான்கு சிக்ஸர் 27 பௌண்டரிகள் அடங்கலாக 313 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆறு விக்கெட்டுகளை இழந்து 765 ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு இலங்கையை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
கமரன் அக்மல் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களும் யசிர் அரபாத் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்தது.
பரணவிதாரண 9, வர்ணபுர 21, சங்கக்கார 65, டில்சான் 2, மஹேல 22 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக யூனுஸ்கான் தெரிவு செய்யப்பட்டார்
No comments:
Post a Comment