Monday, February 9, 2009

தடம் மாறுகிறது காங்கிரஸ் தடுமாறுகிறது தி.மு.க


முத்துக்குமார் மூட்டி வைத்த தீ தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. அதனை அணைப்பதற்கு மாநில அரசும், மத்திய அரசும் பெரும் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. இலங்கைத் தமிழ் மக்கள் படும் வேதனை கண்டு தமிழகமே பொங்கி எழுந்துள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என வசனம் எழுதியவர் பொங்கவும் இல்லை தூக்கத்தில் இருந்து எழவும் இல்லை.
இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும், அமைதி திரும்ப வேண்டும் என்ற கோஷத்துடன் விநோதமான கூட்டணிகள் உருவாகியுள்ளன. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். அதேவேளை தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் என்பன விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கின்றன.
அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகம் புலிகளை எதிர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது. இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை பா
ரதீய ஜனதாக் கட்சி அடிக்கடி வலியுறுத்தி வருகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக எதிரெதிர்க் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இதில் அங்கம் வகிக்கின்றன. பழ. நெடுமாறன் இந்தப் பேரவையின் தலைவராகச் செயற்படுகிறார். தமிழ் இன ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பேரவை ஒன்றை அமைத்ததõல் திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுத்தப்பட்டது.
உலகத் தமிழர்களுக்கே தலைவன் தானென்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்பதை தமிழ் பேசும் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரவைக்கு போட்டியாக தமிழர் உரிமை பாதுகாப்பு பேரவை அமைத்ததுடன் திருப்திப்பட்ட முதல்வர், இலங்கைப் பிரச்சினைøயத் தீர்க்கும் பொறுப்பை மத்திய அரசிடம் விட்டு விட்டார்.
இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை விட விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலேயே இந்திய காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வந்த பின்னர் யுத்தம் நிறுத்தப்படும் என்ற கருத்து இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவியது. பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வந்தார், கதைத்தார், சென்றார். யுத்தம் நிறுத்தப்படவில்லை. அதன் பின்னர் வன்னிப் பகுதியில் மிக மோசமான தாக்குதல் நடைபெறுகிறது.
மத்திய அரசு நடுங்கும் வகையில் முக்கியமான முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாகாமல் சாதுரியமாக காய் நகர்த்தி உள்ளார் முதல்வர் கருணாநிதி.
மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கி விட்டால் தமிழகத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 35 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் பல பிளவுகள் இருந்தாலும் தலைமைப் பீடம் எடுக்கும் முடிவை தமிழக காங்கிரஸ் ஒரு போதும் தட்டிக் கழித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை வேடம் போடுகிறது, நாடகமாடுகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள் உறுதியளித்தால் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸை எதிர்க்க, தூக்கி எறியத் தயாராக உள்ளது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கட்சிகளைச் சார்ந்த 39 உறுப்பினர்கள் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பாதுகாப்பேõம் என்ற உறுதிமொழியை இவர்கள் வழங்கினால் முதல்வர் கருணாநிதி பொங்கி எழுவார்.
விடுதலைப் புலிகளை ஜென்ம விரோதியாக கருதுபவர் ஜெயலலிதா. அவரது ஆலோசகர்களான சோ, சுப்பிரமணிய சுவõமி ஆகியோரும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் ஒத்த கருத்துள்ளவர்கள். ஜெயலலிதாவை முற்று முழுதாக நம்பியுள்ள வைகோ, இலங்கைத் தமிழ் மக்களுக்காக உணர்வுபூர்வமாக செயற்படுகிறார்.
மத்திய அரசையும் மாநில அரசையும் குறை கூறும் பாட்டõளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய அமைச்சராக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களைக் கண்டு கொதித்துப் போயுள்ள டாக்டர் ராமதாஸ், மத்திய அரசில் இருந்து மகனை வெளியேற்றத் தயாராக இல்லை. இலங்கைத் தமிழ் மக்களின் அவலத்தைத் தீர்க்க உரத்துக் குரல் கொடுக்கும் இடதுசாரிகள் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகத்தில் அரசமைக்கத் தயாராகி விட்டனர்.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடும் இலங்கைப் பிரச்சினையை மத்திய அரசு பெரிதுபடுத்தாது.
தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையில் தமது பலத்தைக் காட்ட முனையும் வேளையில் தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து தமது பலத்தைக் காட்டியுள்ளனர்.
மாணவர்களின் எழுச்சிப் போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றினால் நிலை குலைந்த தமிழக அரசு கல்லூரிகளை மூடிவிட்டது.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அடிப்படைக் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் தமிழ் வாழ்வதற்காகப் போராடிய திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழ் மக்களுக்காகப் போராடத் தயங்குகிறது.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டுமானால் ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும்தான் முக்கியமே தவிர போராட்டங்கள் அல்ல என்பதை தமிழக அரசு உணரத் தவறிவிட்டது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
08 02 2009

2 comments:

Anonymous said...

காங்கிரஸ் விலகினால் பா.ம.க மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு தந்து தாங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.அது கருணாநிதிக்கு தெரியும்.

கருணாநிதி எந்த அளவிற்கு திட்டப்படுகிறாரோ அந்த அளவிற்கு மற்ற நாய்களும் திட்டப்படவேண்டும்.

Anonymous said...

ஒருதனும் ஒரு மயிரயிம் பிடுஙக முடியாதூ . அடுதமுதல்வர் கலைஙர் தான் வொய்!!!!!!!!!!!!!!

அடுத பிரதமர் மன்மொகன் சிங் தான்.

ஈழம் கொவிந்தா கொவிந்தா!!!!!!!!!!!!!