Tuesday, February 17, 2009
ஏமாந்தகமல்
உலக நாயகன் என்று வர்ணிக்கப்படும் கமல்ஹாசனை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் ஏ.வி.எம்மின் "களத்தூர் கண்ணம்மா'. சிறுவனாக இருந்த கமல் நடிக்கும் ஆர்வத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அவருடைய மனதைக் கவர்ந்ததனால் "களத்தூர் கண்ணம்மா'வில் நடிக்கும் வாய்ப்பு கமலுக்குக் கிடைத்தது.
திரைப்படங்களை வாங்கி விநியோகித்த ஏ.வி.எம்.மின் பிள்ளைகளின் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தடை கூறாது அனுமதி வழங்கினார்.
பட்டுவும் கிட்டுவும் என்ற கதையைப் படித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நல்ல கதை. ஆனால் இப்போதைக்கு தன்னால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகஜவார் சீதாராமனுக்கு தெரிவித்தார். படம் தயாரிப்பதற்கு தகப்பன் அனுமதி வழங்கிய பின்னர் கதையைத் தேடி அலைந்த சரவணனும் சகோதரர்களும்ஜவார் சீதாராமன் எழுதிய நல்ல கதை ஒன்று தகப்பனிடம் இருப்பதை அறிந்த பிள்ளைகள் அந்தக் கதையை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அன்று மாலை கதையை வாங்கி மேலும் ஒரு கொம்பனிக்கு கொடுப்பதற்காகஜவார் சீதாராமனுக்கு ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரைச் சந்தித்தார். அப்போது அக்கதையை தனது பிள்ளைகள் எடுக்கப் போவதாகக் கூறினார்.
முதன்முதலாகத் தயாரிக்கப் போகும் படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அமரதீபம், உத்தம புத்திரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய டி.பிரகாஷ்ராவை இயக்குனராக நியமித்தார்கள்.
"யார் பையன்' என்ற படத்தில் பிரமாதமாக நடித்த டெய்ஸி ராணி என்ற பெண் குழந்தைக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்தார்கள். ஹிந்தியில் பெயரும் புகழும் பெற்ற டெய்ஸி ராணியின் நடிப்பு அவர்களை கவர்ந்ததனால் பணத்தைப் பற்றிக் கவலைப்படாது ஒப்பந்தம் செய்தார்கள்.
சிறுவனான கமலைக் கண்ட ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் ஒரு நிமிடத்தில் கமலின் திறமையை இனம் கண்டு கமலுக்கு மேக் அப் டெஸ்ட் செய்யும்படி கூறினார். இயக்குனர் பிரகõஷ்ராவ்,ஜெமினி, சாவித்திரி ஆகியோருக்கும் கமலை மிகவும் பிடித்து விட்டது.
ஏ.வி.எம். சரவணனுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றான் சிறுவன் கமல். அப்போது ""கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ'' என்ற பாடலின் ஷூட்டிங் நடைபெற்றது. கமல் முதன் முதலில் பார்த்த ஷூட்டிங் அது தான். ஏற்கனவே எடுக்கப்பட்ட அப்பாடலின் சில காட்சிகள் மீண்டும் அன்று படமாக்கப்பட்டன. மாங்காய் சீஸனில் அப்பாடல் காட்சி முதலில் படமாக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது மாமரத்தில் மாங்காய்கள் இல்லை. ஆகையினால் டூப் மாங்காய்களை தொங்க விட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாங்காயைக் கண்டதும் சிறுவன் கமலின் நாவில் எச்சில் ஊறியது. தனக்கு ஒரு மாங்காய் பிடுங்கித் தரும் படி ஜெமினி கணேசனிடம் கேட்டான். குறும்புக்கார ஜெமினி கணேசன் மாமரத்தில் ஏறி டூப் மாங்காயை பறித்துக் கொடுத்தார். மாங்காயைக் கடித்ததும் டூப் மாங்காய் என்றதனை எறிந்தான் சிறுவன் கமல்.
படப்பிடிப்பு நடந்த வீட்டை உண்மையான வீடு என்றே கமல் முதலில் நினைத்தார். அது செற் என்று தெரிந்ததும் ""ஐயையோ டூப் வீடு'' என்று சத்தமிட்டான் சிறுவன் கமல்.
சாவித்திரி உப்புமாவை ஊட்டி விடும் காட்சியில்தான் சிறுவன் கமல் முதன்முதல் நடித்தார். சாவித்திரி ஊட்டிய உப்புமாவை வாயில் அடக்கி வைத்திருந்துவிட்டு படப்பிடிப்பு முடிந்ததும் துப்பி விட்டு ""ஐயையோ டூப் உப்புமா'' என்றார்.
அது உண்மையான உப்புமாதான் என்பதை நிரூபிப்பதற்காக உதவி இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் சாப்பிட்டுக் காட்டினார். அதன் பின்னர்தான் அது உண்மையான உப்புமா என்ற உண்மை சிறுவன் கமலுக்குத் தெரிந்தது.
"களத்தூர் கண்ணம்மா' மிகவும் சிறப்பான படமானது. எட்டாயிரம் அடி எடுக்கப்பட்டபோது படத்தைப் போட்டும் பார்த்தார்கள். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாருக்கு திருப்தி இல்லை, சிறுவன் கமலின் நடிப்பில் உருவான ""அம்மாவும் நீயே அப்பாவும் நீயே'' பாடல் ஒன்றரை நிமிடங்கள் படமாக்கப்பட்டது. அக்காட்சியை இன்னும் அதிகமாக்கி மூன்று நிமிடங்களுக்குள் படமாக்குமாறு கூறினார். அதேபோன்று வேறு சில காட்சிகளையும் மீண்டும் படமாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இயக்குநர் பிரகாஷ்ராவுக்கும் மற்றவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை. பிரகாஷ்ராவ் புதிய வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்வதற்கு நாள் குறித்து விட்டார். களத்தூர் கண்ணம்மாவை மீண்டும் படமாக்கினால் அவருடைய கிரகப்பிரவேசம் தள்ளிப் போய்விடும். ஆகையால் அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அவரை தடுத்து நிறுத்த ஏ.வி.எம். விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக பீம்சிங்கை இயக்குனராக ஒப்பந்தம் செய்தது.
பிரகாஷ் ராவுக்கு தமிழ் சரியாகத் தெரியாததõல் ""அருகில் வந்தõள் உருகி நின்றாள்'' என்ற பாடலின் பல்லவியை கவிஞர் கண்ணதாசன் எழுதிக் கொடுத்தபோது அதன் அர்த்தம் புரியாததால் இன்னொரு பல்லவி எழுதுங்கள் என்றார். கவியரசு இன்னொன்று எழுதிக் கொடுத்தார். அதுவும் திருப்தி கொடுக்காததால் இன்னொன்று கேட்டார். கவிஞரும் எழுதிக்கொடுத்தார். பிரகாஷ் ராவைத் திருப்திப்படுத்துவதற்காக சளைக்காது 58 பல்லவிகளை கவியரசு எழுதிக் கொடுத்தார்.
களத்தூர் கண்ணம்மா தயாரான அதே சமயம் கடவுளின் குழந்தை என்ற படத்தை சின்ன அண்ணாமலை தயாரித்தார். கல்யாண்குமார், ஜமுனா ஆகியோர் நடித்த கடவுளின் குழந்தை, களத்தூர் கண்ணம்மா ஆகிய இரண்டு படங்களும் நோபொடீஸ் சைல்ட் என்ற ஆங்கிலப் படத்தின் மூலக் கதையில் இருந்து உருவானவை.
"கடவுளின் குழந்தை' வெளியானதன் பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியானால் படம் வெற்றி பெறாது என்று ஏ.வி.எம். சரவணனும் மற்றவர்களும் நினைத்தனர். பல காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் கூறினார்.
களத்தூர் கண்ணம்மா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கடவுளின் குழந்தை வெளியாகி சிறந்த படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.
கடவுளின் குழந்தைக்குப்பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இரண்டு படங்களும் ஒரே கதை என்று தெரியாத வகையில் படமாக்கப்பட்டிருந்தன. சிறுவன் கமலின் நடிப்பு சகலரையும் கவர்ந்தது.
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. அப்பாடலின் முதல் வரி அம்மையும் நீயே அப்பனும் நீயே என்றுதான் இருந்தது. ஏ.வி.எம். சரவணனின் மூத்த சகோதரியின் கணவரான அருண் வீரப்பன்தான் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே எளிமையாக உள்ளது என்று யோசனை கூறினார்.
கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் வசூலை முறியடித்து புகழையும் பெற்றது "களத்தூர் கண்ணம்மா'.
ரமணி
மித்திரன்
08 02/15 02 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment