Friday, February 27, 2009

எல்லாப்புகழும் இறைவனுக்கே


ஆங்கிலத் திரைப்படத்தின் தரத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் ஒஸ்கார் விருது முடிவுகளால் உலகமே இந்தியாவை திரும்பிப் பார்த்துள்ளது.
இந்தியாவில் தயாரான ஸ்லம்டோக் மில்லியனர் என்ற திரைப்படம் எட்டு விருதுகளையும் ஸ்மைல்பிங்கி என்ற ஆவணப் படம் சிறந்த ஒஸ்கார் விருதையும் தட்டிச் சென்றுள்ளன.
சிறந்த இசை, சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக இரண்டு விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார். விருதுப் பாடலை குல்சார் எழுதியவர் பிரபல ஹிந்திக் கவிஞரான சுவீந்தர் சிங், மகாலக்ஷ்மி ஐயர் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளõர். முதல்வனில் குறுக்குச் சிறுத்தவளே, அலைபாயுதேயில் யாரோ யாரோடி ஆகிய பாடல்களைப் பாடியவர்தான் மகா லக்ஷ்மி ஐயர்.
மேலைத்தேய இசை வித்தகர்களுடன் போட்டியிட்ட இந்தியரான ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றது இந்திய இசைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.
ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புகுந்த ரஹ்மான் இந்திய சினிமாவை தன் பிடிக்குள் அடக்கினார். ஒஸ்கார் விருதை வென்றதன் மூலம் திரை உலக சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துள்ளார்.
சாமானியரும் ரசிக்கும் வகையில் இசை அமைப்பது ரஹ்மானின் பாணியாகும். ஓஸ்கார் விருது என்பது தமிழ்க்கலைஞர்களுக்கு கனவாகவே இருந்தது. இரண்டு ஒஸ்கார் விருதுகளை ஒரே தடவையில் பெற்று கனவை நிஜமாக்கியுள்ளார் ரஹ்மான்.
விழா மேடையில் தாயையும், தனது கலாசாரத்தையும் அரங்கேற்றி தன்னடக்கத்தை வெளிப்படுத்தினார்.
ஒஸ்கார் விருது பெற்ற இன்னொரு இந்தியர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டி, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத புனலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர் ஒலிக்கலவையில் தன்னிகரில்லாதவராக விளங்குகிறார். ஒலியில் இவர் புரிந்த சித்து விளையாட்டை கஜினி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனுபவித்தார்கள்.
முஸ்லிம் மதத்தவரான இவரது கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் வேறுபாடு இன்றி ஒன்றாக வாழ்கின்றனர்.
விருது பெற்ற மகிழ்ச்சியில் பேசிய பூக்குட்டி சிவராத்திரியான இன்று என் நாட்டவருக்கும் உறவினர்களுக்கும் ஊர் மக்களுக்கும் கிடைத்த பரிசு என அடக்கத்துடன் கூறினார்.
ஒஸ்கார் விருதை வென்ற ஆவணப்படம் ஸ்மைல் பிங்கி உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிர்சா பூர் அருகே உள்ள ராம்பூர் தயாகி என்ற கிராமத்தில் எட்டு வயது சிறுமியின் உண்மைக்கதைதான் ஸ்மைல் பிங்கி.
உதடு பிளவுபட்ட இச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள், கேலிகள் என்பனவற்றை புடம் போட்டு வெளிக்காட்டிய ஆவணப் படம்.
ஸ்மைல் பிங்கியுடன் போட்டியிட்ட இன்னொரு குறும்படம் தி பைனல் இஞ்ச். போலியோவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவும் பணியாளர்களின் வெளிப்பாடு இதில் விபரிக்கப்பட்டுள்ளது.
நடித்த பின்னர் பிங்கிக்கு சமூகசேவை நிறுவனம் இலவசமாக சத்திரசிகிச் சை செய்து உதட்டை சரிப்படுத்தியது.எனக்கு மட்டும் வாழ்வு கிடை த்தால் போதாது இந்தியாவில் என்னைப் போன்ற 40 இலட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல மரு த்துவ சிகி ச்சை கிடைக்க வேண்டும் என்று லொஸ்ஏஞ்சல்ஸில் இருந்து குரல் கொடுத்துள்ளார் பிங்கி.
ஏழ்மை, வறுமை அங்கவீனம் இல்லாத ஒஸ்கார் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.





ரஹ்மானின் முதல் படங்கள்...
தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது.
இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா.
மலையாளத்தில் முதலம் படம் யோதா.
தெலுங்கில் முதல் படம் சூப்பர் பொலிஸ்.
ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஒப் ஹெவன்.
ரஹ்மானை அலங்கரித்த விருதுகள்...
எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதைவிட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான். அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டோக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப் பாஃப்டா விருதுகள்.
இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள்.
ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995) பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கல்விக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).
தேசிய விருதுகள்
ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).
பிலிம்பேர் விருதுகள்
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல்தேசம்(1997), மின்சாரகனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலைபாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை,(2008).
ஸ்க்ரீன்விருது
காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009),
தினகரன் சினி விருதுகள்
மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000),
தமிழக அரசு
விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).
சினிமா எக்ஸ்பிரஸ் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).
கலாசாகர் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).
பிலிம்பேன்ஸ் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).
சினி கோயர்ஸ் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995),பாம்பே (1996).
ஜீ விருது
ஜீ சினி விருது (குரு. 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999) ஜீ. சினி விருது (தால், 2000) ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஒப் பகத் சிங் 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007).
சர்வதேச இந்திய திரைப்பட விருது
தால் (2000). லகான் (2002). சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007).
குளோபல் இந்தியன் திரை விருது
சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி 2007)
உலக அரங்கில் தலை நிமிர்ந்த இந்தியா
பெப்ரவரி 24.02.2009
ரஹ்மான் பெற்ற விருதுகள்
ஸ்லம்÷டாக் மில்லியனர் படத்தில் இசை அமைத்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை தலைநிமிர செய்துள்ளார் ரஹ்மான். இப்படத்துக்கான ஒஸ்கார் உள்ளிட்ட சர்வதேச விருதுகள் தவிர்த்து அவர் பெற்ற பிற விருதுகள்.
குளோபல் இந்தியன் பிலிம் விருது (2007).
மகாவீர் மகாத்மா (2005)
சங்கீத் விருது (2004)
லதா மங்கேஷ்கர் விருது (2004)
பத்ம ஸ்ரீ (2000)
இன்டர் நேஷனல் இந்தியன் பிலிம் அகடமி விருது (2000.02.03. 07.08)
எம்.டிவி. விருது (1999, 2003).
கலைமாமணி (1995)
மொரீஷியஸ் தேசிய விருது (1995)
மலேசிய விருது (1995)
வரவிருக்கும் படங்கள். நாயர் சன் (ஜப்பான், மாண்டரின்,
மங்கோலி, ஆங்கிலம்)
ப்ளூ (இந்தி)
புலி (தெலுங்கு)
அசோகவனம் (தமிழ், இந்தி)
சென்னையில் ஒரு மழைக்காலம்
(தமிழ்)
எய்ட் பை டென் (இந்திய)
சுல்தான் தி வாரியர் (தமிழ்)
விண்ணை தாண்டி வருவாயா (தமிழ்)
எந்திரன் (தமிழ்)
தீ நைன்டீன்த் ஸ்டெப்(தமிழ், ஆங்கிலம் ஜப்பான்)
ரமணி
மெட்ரோநியூஸ்
27 02 2009

No comments: