Wednesday, April 22, 2009

பெங்களூர் ரோயலை வீழ்த்தியதுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி


ஐ.பி.எல். சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸை வீழ்த்திய பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸுக் கும் இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 92 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
முதல் போட்டியில் விளையாடிய ஜேக்கப் ஓராம், துஷார ஆகியோர் நீக்கப்பட்டு முரளிதரனும் அல்பி மோர்கனும் சென் னை அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பாத்தீவ் பட்டேலும் ஹைடனும் அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். முதல் போட்டியில் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்த பட்டீல் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்தனர். இந்த ஜோடியை பீட்டர்சன் பிரித்தார்.
41 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு சிக்ஸர், இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக ஓட்டங்கள் எடுத்த பாத்தீவ் பட்டேல் 30 ஓட்டங்களில் பீட்டர்சனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பெங்களூர் ரோயல் வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஹைடன் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
35 பந்துகளைச் சந்தித்த ஹைடன் இரண்டு சிக்ஸர் ஒன்பது பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ரைனா, டோனி ஜோடியும் பெங்களூர் வீரர்களை திக்குமுக்காடச் செய்தது. 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனி ஒரு சிக்ஸர் அடங்கலாக 16 ஓட்டங்கள் எடுத்தார். மார்சல் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
பிளின்டொப் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்கள் எடுத்தார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பிளின்டொப் ஒரு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார்.
பிரவீன் குமார் இரண்டு விக்கட்டுகளையும் ஸ்ரெயின், பீட்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். பெங்களூர் ரோயல் அணி சார்பில் எட்டு வீரர்கள் பந்து வீசினர்.
இவர்கள் 13 உதிரிகளை விட்டுக் கொடுத்தனர். 180ஓட்டம் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ரோயல் அணி 15.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரவீன் குமார் கோனியின் பந்து வீச்சில் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். சென் னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் களத்தடுப்பும் பந்து வீச்சும் சிறப்பாக இருந்ததனால் பெங்களூர் ரோயல் வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தப்பா முரளியின் பந்தை அடிக்க முயன்றபோது டோனியால் ஸ்ரம்ஸ் செய்யப்பட்டார். இவர் 20 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
24 ஓட்டங்கள் எடுத்திருந்த கலிஸ் மார்க்கஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அட்டகாசமாக விளையாடிய டிராவிட் பாலாஜியின் பந்தை பிளின்டொப்பிடம் பிடி கொடுத்து 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
18 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிராவிட் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 20 ஓட்டங்கள் எடுத்தார். 15.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த பெங்களூர் ரோயல் சலஞ்சர் அணி 87 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட நான்கு ஓவர்கள் பந்து வீசிய முரளிதரன் 11 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். பாலாஜி இரண்டு விக்கட்களையும் கோனி, மார்க்கல், பிளின் டொப், ஜோஹிந்தர் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக முரளிதரன் தெரிவானார்.
ரமணி

No comments: