Thursday, April 30, 2009

மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்



மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையே கேப்டவுனில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 119 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை இந்தியன் அணிவீரர்களின் பந்து வீச்சில் பஞ்சாப் அணி வீரர்கள் நிலை குலைந்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கயன் கோயல் ஹர்பஜனின் பந்தில் சிக்ஸர் அடித்து மகிழ்ந்திருந்த வேளையில் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
12 பந்துகளைச் சந்தித்த கயன் கோயல் ஒரு சிக்ஸர் உட்பட 12 ஓட்டங்கள் எடுத்தார். ரவி போபரா ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சங்ககாரவுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அணித் தலைவர் யுவராஜ் சிங் 10 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மஹேல 7, பதான் 7, மோடா ஐந்து, தவான் 0, சரத் பவார் 10 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
பஞ்சாப் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டிருந்த வேளை தனி நபராக தனித்து நின்று போராடிய சங்ககார ஆட்டமிழக்காது 45 ஓட்டங்கள் எடுத்தார். 44 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் ஒரு சிக்ஸர், இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். சக்கக்காரவுக்கு அடுத்தபடியாக உதிரிகளாக 17 ஓட்டங்களை மும்பை அணி கொடுத்தது. மும்பை அணியின் தோல்விக்கு அதிகூடிய உதிரிகளும் ஒரு காரணம். உதிரிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தால் மும்பை அணி சில வேளை வெற்றி பெற்றிருக்கலாம்.
மலிந்த இரண்டு விக்கெட்டுகளையும் சஹீர்கான், ஹர்பஜன் சிங், பிராவோ, டுமினி, ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
120 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது.
பதானின், பந்தை யுவராஜிடம் பிடிகொடுத்த ஜயசூரிய ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். மலிக்கின் பந்தை மஹேலவிடம் பிடிகொடுத்து சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
மூன்று ஓட்டங்கள் எடுத்த தவான் அப்துல்லாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 12 ஓட்டங்களில் மூன்று விக்öகட்டுகளை இழந்தது.
பிராவோ, நாயர் ஆகியோர் தலா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஹர்பஜன் ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆறு விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 101 ஓட்டங்களை எடுத்தது. மும்பை அணி வீரர்கள் ஆட்டமிழந்த போதும் டுமினி வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினார்.
கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தபோது டுமினியை நோக்கி யூசுப் அப்துல்லா பந்தை வீசினார். முதல் பந்தில் டுமினி இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் வைட் மூலம் ஒரு ஓட்டம் கிடைத்தது.
மீண்டும் வீசிய மூன்றாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார் டுமினி மூன்று பந்துகளில் ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டபோது பரபரப்பு தொற்றியது. நான்காவது பந்தை சிக்ஸரை நோக்கி தூக்கி அடித்தார் டுமினி. டீப் மிட் விக்கட் திசையில் டுமினி கோக்லி பிடித்து டுமினியை ஆட்டமிழக்கச் செய்தார்.
கோக்லி கொஞ்சம் தடுமாறி இருந்தால் அந்தப் பந்து சிக்ஸருக்குப் போயிருக்கும். 63 பந்துகளுக்கு முகம் கொடுத்த டுமினி நான்கு பௌண்டரி அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சவுராப் திவாரி ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் வெற்றி, பௌண்டரி அடித்தால் சமநிலை. கடைசிப் பந்தைச் சந்தித்த திவாரி ஒரு ஓட்டத்தை மட்டும் எடுத்தார். 20 ஓட்டங்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்த மும்பை அணி நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
ஐந்து போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டு வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இர்பான் பதான், அப்துல்லா ஆகியோர் தலா இரண்டு விக்öகட்டுகளையும் மாலிக் பவர், சவ்லா ஆகியோர் தலா ஒரு விக்öகட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.

ரமணி

0000


கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர்

பெங்களூர் ரோயல் சலஞ்சர் கொல்கத்தா நைட் ரைடர் அணிகளுக்கிடையே டேர்பனில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ரோயல் சலஞ்சர் அணி ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணித் தலைவர் மக்கலம் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அணித் தலைவர் மக்கலடு கைல்ஸும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் சார்பில் அதன் அணித்தலைவர் பீட்டர்சன் முதல் ஓவரை வீசினார். பார்வையாளர்களுக்கு இது பலத்த அதிர்ச்சியைத் கொடுத்தது. பீட்டர்சனின் பந்து வீச்சினால் பார்வையாளர்களை விட மக்கலம் அதிகம் ஆச்சரியப்பட்டார் மக்கலம். பீட்டர்ஸன் வீசிய முதல் பந்தை கோக்லியிடம் பிடி கொடுத்து ஓட்டம் எதுவும் எடுக்காது வெளியேறினார் மக்கலம். அடுத்து வந்த ஹெட்ஜை எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார் கும்ப்ளே. 15 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹெட்ஜ் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 17 ஓட்டங்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய கங்குலி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். எட்டு பந்துகளுக்கு முகம் கொடுத்த கங்கலி பிரவீன்குமாரின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
8.3 ஓவர்களில் 54 ஓட்டங்கள் எடுத்தவேளை கைல்ஸ் வான்விச் ஜோடி இணைந்தாலும் இந்த ஜோடியும் அதிக நேரம் ஆடவில்லை. பொறுப்புடன் விளையாடிய கைல்ஸ் ஆட்டமிழந்தார்.
37 பந்துகளுக்கு முகங்கொடுத்த கைல்ஸ் ஆறு பௌண்டரி அடங்கலாக 40 ஓட்டங்கள் எடுத்திருந்தவேளை அப்பன்னாவின் பந்தை கேன்ஸ் சுவாமியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
மத்திய வரிசை வீரர்களான வான்விக்ஷா ஆகியோரின் துடுப்பாட்டத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷா கும்ப்ளேயின் பந்தை பீட்டர்ஸனிடம் பிடிகொடுத்து ஒரு சிக்ஸர் அடங்கலாக 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுக்லா இரண்டு ஓட்டங்களில் வெளியேறினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது.
கும்ப்ளே 16 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பீட்டர்ஸன், வன்டேமெர்ன் பிரவீன்குமார் அப்பன்னா ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ரோயல் சலஞ்சர் அணி பரபரப்பான போட்டியில் ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கலிஸும் கோஸ்வாமியும் 11.1 ஓவர்கள் வரை விளையாடி 69 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
43 பந்துகளுக்கு முகம் கொடுத்த கோஸ்வாமி ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஹொட்ஜின் பந்தை விக்கெட் காப்பாளர் வின்டேமெர்னிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
23 ஓட்டங்களில் கலிஸ் ஆட்டமிழந்தார். பீட்டர்ஸனுடன் கோல்கி இணைந்தார். கோல்கி 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 18.5ஆவது ஓவரில் பீட்டர்ஸன் ஆட்டம் இழந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 14 ஓட்டங்கள் அடித்தார்.
வெற்றி பெறலாம் என்ற நிலையில் மார்க் பௌச்சருடன் இணைந்தார் வான்டன் மெர்வின். 19ஆவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். நான்கு ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுக்க முடிந்த சர்மா வான் டென் மெர்வினின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஒரு ஓவரில் 10 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மேற்கிந்தியத்தீவு அணி வீரரான கைல்ஸ் பந்தை வீசினார். அதனை எதிர்கொண்ட பன்ட் ஓட்டத்தை எடுத்தார். தென் ஆபிரிக்காவின் அனுபவ வீரரான மார்க் பௌச்சர், கைல் வீசிய இரண்டாவது பந்தில் பௌண்டரி அடித்து பதற்றத்தைக் குறைத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் அவர் இரண்டு ஓட்டங்களை எடுத்தார். வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு ஓட்டம் எடுக்க தேவைப்பட்டபோது பௌண்டரி அடித்து வெற்றி பெற்றது பெங்களூர் அணி. 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பௌச்சர் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்தார். ஹட்ஜ் மூன்று விக்öகட்டுகளையும், இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். பௌச்சர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
வானதி


000


பதானின் அதிரடியில் வென்றது ராஜஸ்தான்

செஞ்சூரியனில் நடந்த ஐ.பி.எல். ருவென்ரி20 போட்டியில் பதானின் அட்டகாசமான அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலாவது தோல்வியைப் பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 143 ஓட்டங்கள்
எடுத்தது.
மஸ்கரனாஸின் பந்தை ஷேன் வோர்னிடம் பிடி கொடுத்த கம்பீர் எட்டு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மஸ்கரனாஸ் டெல்லிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார். மஸ்கரனாஸின் பந்தை கம்ரன் கானிடம் பிடி கொடுத்த ஷெவாக் 16 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். வில்லி யஷûடன் இணைந்த டில்ஷான் 7 ஓட்டங்களுடன் டினேஷ் கார்த்திக் நான்கு ஓட்டங்களில் ஷேன் வோனின் பந்øத அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்த போதும் கலங்காது விளையாடிய டிவில்லியுஷûடன் இணைந்த வெட்டோரி அணியின் எண்ணி க்கை 100 ஐ கடக்க உதவி செய்தார்.
ஷேன் வோனின் பந்தில் பௌண்டரி அடித்து 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த டி. வில்லியஸ் ஷேன் வோனின் அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். 40 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் ஒரு சிக்ஸர், ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார். வெட்டோரி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் ஏழு விக்கட்டுகளை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 143 ஓட்டங்கள் எடுத்தது.
மஸ்கரனாஸ், பட்டேல், ஷேன் வோர்ன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் கம்ரன் கான் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
144 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குயினி நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த அஸ்நொட்கர் 11 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். ஸ்மித் போராட ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜடேஜா 16 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ஷேன் வோன் ஓட்டம் எதனையும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 64 ஓட்டங்கள் எடுத்தபோது ஸ்மித்துடன் பதான் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றிøயத் தேடிக் கொடுத்தனர். ஸ்மித் நிதானமாக ஆட யூசுப் பதான் அதிரடியாக ஆடி டெல்லியிடம் இருந்த வெற்றியை தட்டிப் பறித்தார்.டெல்லி அணியின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. வெட்டேரி. வீசிய முதல் பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்து தனது அதிரடியை நிரூபித்தார் பதான். பீட்டர்ஸனின் அந்த ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தார் பதான். 21 ஓட்டங்கள் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை பதானின் பிடிகளை டெல்லி வீரர்கள் தவறவிட்டனர். பதானின் மின்னல்வேக ஆட்டத்தினால் 18.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்த ராஜஸ்தான் 147 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
46 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்மித் ஐந்து பவுண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார். 30 பந்துகளைச் சந்தித்த பதான் ஆறு சிக்ஸர், மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்தார். அம்ரித் மிஸ்ரா மூன்று விக்கெட்டுகளையும் நெஹ்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பதான் தெரிவு செய்யப்பட்டார்
.வானதி

No comments: