Saturday, November 5, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 10

நண்பனின் காதலியை அனுபவிக்கத் துடிக்கும் ஒருவன் தன் ஆசையை அவள் நிறைவேற்றாதனால் நண்பன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து ரசிக்கிறான். நட்பு துரோகமாக மாறியதால் காதலனை இழந்த பெண் நான்கு பிள்ளைகளின் தகப்பனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். தன் காதலனின் மரணத்துக்குக் காரணமானவன் தன் கணவனின் மூத்த மகன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இவர்களின் உணர்ச்சிகரப் @பாராட்டத்தைச் சித்தரிக்கும் படம்தான் 1976 ஆம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு.
ஆபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில காட்சிகளில் மட்டும் தலையைக் காடிய ரஜினிகாந்த் வில்லனாக நடித்து படம் முழுவதும் ஆக்கிரமித்தார். சிகரெட்டை எறிந்து லாவகமாக வாயில் நிறுத்தி தீ மூட்டும் காட்சியின் @பாது விசித்தல் ச‌த்தத்தில் தியேட்டர் அதிர்ந்தது. மூன்று முடிச்சு படத்தில் ரஜினி பேசாமலே தியேட்டர் அதிர்ந்தது. பின்னர். சிவாஜி படத்தில் சும்மா அதிருதில்ல என ரஜினி வச‌னம் பேசியபோது தியேட்டர் அதிர்ந்தது.
கமலும் ரஜினியும் நண்பர்கள். கமல் ஸ்ரீ@தவியைக் காதலிக்கிறார். பெண் பித்தனான ரஜினி ஸ்ரீ@தவியை அனுபவிக்கத் துடிக்கிறார். ரஜினியின் விபரீத எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீ தேவி கமலிடம் ரஜினியைப் பற்றிக் கூறுகிறார். நண்பன் ரஜினி மீது அதீத நம்பிக்கை வைத்த கமல் அதனை நம்பவில்லை. ஸ்ரீதேவிக்கு கமல் வாங்கிக் கொடுத்த புடவையை சிகரெட்டால் சுட்டு ஓட்டையாக்குகிறார் ரஜினி. இது பற்றி கமலிடம் ஸ்ரீதேவி முறையிட்டு புடைவையை விரித்தபோது சுட்ட புடைவை எதுவித சேதமும் இன்றிக் காணப்பட்டது. தன் நன்பனைப் பற்றித் தவறாகக் கற்பனை செய்வதைக் கைவிடுமாறு கமல் அறிவுரை கூறுகிறார்.
கமல், ரஜினி, ஸ்ரீதேவி மூவரும் ஏரியிலே படகுச் சவாரி செல்லும்@பாது ஏரியிலே தவறி விழுகிறார் கமல். நீச்சல் தெரிந்த ரஜினி எதுவித சலனமும் இன்றி நண்பன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து ரசிக்கிறார். வாழ்க்கையில் விரக்தியடைந்த ஸ்ரீதேவி கமலின் நினைவாக வாழ்கின்றார். தனக்கென பாதுகாப்பான வாழ்க்கை ஒன்று தேவை என்பதை உணர்ந்த ஸ்ரீதேவி பத்திரிகையில் வெளிவந்த மணமகள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனான கல்கத்தா விஸ்வநாதனுக்கு. இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படுகிறாள். அங்கே ஸ்ரீதேவியின் நிம்மதியை குலைக்க கல்கத்தாவிலிருந்த விஸ்வநாதனின் மூத்த மகனான ரஜினி வந்து சேர்கிறார்.
மிருகங்களின் முகமூடி அணிந்து விளையாடும் சிறுவர்களுடன் ரஜினியும் முகமூடி அணிந்து விளையாடுகிறார். அப்போது அங்கே வந்த கல்கத்தா விஸ்வநாதன் தனது இரண்டாவது மனைவியான ஸ்ரீதேவிக்கு மூத்த மகன் ரஜினியை அறிமுகப்படுத்துகிறார். நான் இவரை ஏற்கனவே சந்தித்தேன் மிருகமாக என்று கூறுகிறார் ஸ்ரீதேவி. அதைக் கேட்ட தகப்பனும் ரஜினியும் அதிர்ச்சியடைகின்றனர். மிருக முகமூடி அணிந்திருந்ததை பார்த்ததாக கூறி சமாளிக்கிறார் ஸ்ரீதேவி. தன் இச்சைக்கு அடிப்பணிய மறுத்தவள் தாயாக வந்ததை ரஜினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காம வெறியுடன் தன்னை பார்த்த ரஜினியை மகனாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீதேவி தாயாக பணிவுடன் தலையைத் தடவி அதிர்ச்சி கொடுக்கிறார். ஸ்ரீதேவி தொட்டுக் கதைக்கும் போதெல்லாம் மின்சாரம் பாய்வது போல துடிக்கிறார் ரஜினி. ரஜினி முன்னர் கூறிய அதே வார்த்தைதனைக் திரும்பக் கூறி திக்குமுக்காட வைக்கிறார் ஸ்ரீதேவி.
பெண் பித்தனான ரஜினி வீட்டு வேலைக்காரியான அனுபமாவைக் கெடுக்கிறார். தன் தவறை உணர்ந்து ரஜினி திருந்துகிறார். தன்னால் கெடுக்கப்பட்ட அனுபமாவை திருமணம் செய்கிறார் ரஜினி. ரஜினி தவறுவிடும் போதெல்லாம் அவரின் மனச்சாட்சியாக வந்து மிரட்டுகிறார் கே.நடராஜ்.திரைக்கதை வசனம் எழுதி மிக் சிறந்த முறையில் இயக்கினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். பிரச்சினையான கதைகளை கையிலெடுத்து மிக லாவகமாக கையால்வதில் பாலசந்தருக்கு நிகர் பாலசந்தர் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் இயக்குநர் சிகரம். பாலசந்தரின் வசனங்களும் காட்சிகளும் பெரும் வரவே ற்பைப் பெற்றன.
அந்தாதி வடிவில் கவியரசு கண்ணதாசன் எழுதிய ஆடி வெள்ளி தேடி உன்னை, வசந்த கால நதிகளில் நானொரு கதாநாயகி ஆகிய பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசை இன்றும் மனதை வருடுகின்றது.
கதாநாயகனாகப் பவனிவந்த கமல் ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றி இருக்கிறார். கதாநாயகியான ஸ்ரீதேவி முதியவ
ருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறார். கமல், ஸ்ரீதேவி ஆகிய இருவரும் தமது நட்சத்திர அந்தஸ்த்தைப் பற்றிக் கவலைப்படாது கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளனர்.
தமிழில் வெற்றிபெற்ற இப்படம் மாத்தூரு சீதா என்னும் பெயரில் மலையாலத்திலும் ஓகசீகதா எனும் பெயரில் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது
ரமணி
மித்திரன் 23/10/11

No comments: