Sunday, November 13, 2011

கட்சிகளின் கண்ணைத் திறந்தஉள்ளூராட்சித் @தர்தல்

தமிழக அரசியல் கட்சிகளின் பலமும் பலவீனமும் உள்ளாட்சித் தேர்தலின் மூலம் பட்டவர்த்தனமாகத் தெரியவந்துள்ளது. ஆளும்கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தல் நடைபெற முன்னமே கணித்தது சரியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நகரத்திலும் கிராமத்திலும் செல்வாக்குள்ளவர்களே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். வேட்பாளர்களின் செல்வாக்கும் தமிழக ஆளும்கட்சி என்ற அங்கீகாரமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது.
சென்னை மேயர் வேட்பாளராக சைதை துரைசாமி அறிவிக்கப்பட்டபோதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது ஸ்டாலினுக்கே நெருக்கடி கொடுத்தவர் சைதை துரைசாமி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவையில் எதிர்க் கட்சிகள் இருந்த இடம் தெரியாது துவண்டு விட்டனர்.
யாருடனும் கூட்டணி சேராது தனித்து நின்று தேர்தல்களைச் சந்தித்த விஜயகாந்த் சில இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தள்ளிவிட்டு இரண்டாம் இடம்பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்த விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலில் நிமிர முடியாது அடி வாங்கியுள்ளார். விஜயகாந்த் தனித்துத் தேர்தலைச் சந்தித்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தனித்து நின்று தேர்தலைச் சந்திப்பது விஜயகாந்தின் கொள்கையாக இருந்தது. கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தார் விஜயகாந்த். அந்தக் கூட்டணியே அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது. கருணாநிதியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வாக்களித்த மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே உள்ளாட் சித் தேர்தலில் வாக்களித்தனர்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் மாற்றீடாகவே விஜயகாந்தைத் தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் சந்தர்ப்பத்தில் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்த விஜயகாந்த் அடுத்து வரும் ஏதாவது ஒரு தேர்தலில் கருணாநிதியுடன் கூட்டுச் சேர்வார் என்பதை விளங்கிக் கொண்ட தமிழக மக்கள் விஜயகாந்தை ஒதுக்கியுள்ளனர். விஜயகாந்தின் ஆவேசமான பேச்சுகள் எவையும் ஜெயலலிதாவை வீழ்த்த உதவவில்லை. கடந்த தேர்தல்களின் போது சில இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி இரண்டாம் இடம்பிடித்த விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் சகல கட்சிகளும் தனித் தனியாகப் போட்டியிட்டதனை கட்சிகளின் உண்மையான வாக்கு வங்கி விபரம் தெரிய வந்துள் ளதுடன் இது வரை காலமும் திராவிடக் கட்சிகளின் முதுகில் Œவாரி öŒ#து வந்த காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலையை விஜயகாந்தின் கட்சி பிடித்துள்ளது. கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கடசியால் ஜெயிக்க முடியாது என்ற உண்மை தெளிவாகத் தெரிந்துள்ளது. வெறும் வாய்ச்சவடால் பேசிய தங்கபாலு, இளங்கோவன், யுவராஜ் ஆகி யோர் அடங்கிவிட்டனர்.
""தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த தனால் தான் தோல்வியடைந்தோம்'' என்று வாய்கிழிய பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தலின் தோல்விக்குரிய காரணத்தை வெளிப்படுத்த முடியாது மௌனமாகிவிட்டனர். தமது செல்வாக்கைப் பற்றி தலைமைப் பீடத்துக்கு தவறான தகவல்கள் கொடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமது தோல்விக்கான காரணத்தைத் தேடி அலைகின்றனர்.
ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்ட பின்னர் சோனியாவைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்த கருணாநிதி அண்மையில் டில்லி சென்றபோது சோனியா காந்தியைச் சந்தித்தார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கோனியõவின் சுகம் விசாரிப்பதற்கான சந்திப்பு என்ற வெளிப்படையாகக் கூறினாலும் உள்ளாட்சித் தேர்தலின் தோல்வியே இச்சந்திப்புக்கு வழிவகுத்தது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் சொல்கேட்டு நடந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும் என்பதை சோனியா காந்தி உணர்ந் துள்ளார்.
கூட்டணி சேர்ந்தõல்தான் வெற்றி பெறலாம் என்பதே உள்ளாட்சித் தேர்தல் விஜயகாந்துக்கும் சோனியாவுக்கும் அறிவுறுத்தியுள்ளது. விஜயகாந்தின் வாக்கு வங்கி அப்படியே தான் உள்ளது. இந்த வாக்கு பலத்துடன் தனித்துப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியாது என்பதை விஜயகாந்த் தெரிந்து கொண்டுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கி படிப்படியாகக் குறைந்து கொண்டே போகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததே இதற்கு முக்கிய காரணம். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பகைமையை அகற்றி ஒற்றுமையாகச் செயற்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது.
பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கறழகம் ஆகியன தனித்து தேர்தலில் போட்டியிட்டன. இருப்பதும் இல்லாமல் போய்விடும். கட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால் கூட்டணி அமைக்க வேண்டிய நிலையில் இக்கட்சிகள் உள்ளன.


பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வேளையில் முன்னரைப் போன்று பேச முடியாத நிலையில் இக்கட்சிகள் உள்ளன. இதேவேளை, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது இப்போது உள்ள இதே சதவீத வாக்கு வங்கி இருக்குமா என்பது சந்தேகமே.
தமிழக அரசியல் கட்சிகளின் செல்வாக்கு வெளிப்படையாகத் தெரியவந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விரும்பிக் கொடுப்பதைப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன. விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்ட இடதுசாரிகள் படுதோல்வியடைந்துள்ளன. இடதுசாரிகளால் விஜயகாந்துக்கு எதுவித இலாபமும் கிடைக்கவில்லை.
கனிமொழி பிணையில் வெளிவரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பின் பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாவாரவெளியீடு30/10/11


No comments: