குடும்பத்தை வழிநடத்தவேண்டிய அண்ணன், தம்பியின் மனைவியைச் சீரழிக்க முயற்சி செய்யும் ஒருவரிக்கதை தான் வாலி. கூட்டுக் குடும்பம் பண்பாடு கலாசாரம் என்ற கட்டுக் கோப்பிலிருந்து வெளியேறும் ஒரு காமுகனைப் பற்றிய கதையை தடம் மாறாமல் முடிந்திருக்கிறார் எஸ்.ஜேசூர்யா.
ஒரே உருவம் கொண்ட இரட்டைப் பிறவியான அண்ணன் வாய்பேச முடியாதவன். தம்பி உல்லா சமான பேர்வழி. அழகான ஒரு பெண்ணைக் கண்டு மையல் கொள்கிறான் அண்ணன். அவளை யே மனைவியாக்க வேண்டும் என்று தேடி அலைந்து தோல்வி அடைகிறான் அண்ணன். தான் ஒரு தலையாகக் காதலித்த பெண் தம்பியின் மனைவியானதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். தம்பியின் மனைவி என்றாலும் பரவாயில்லை அவளை அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறான்.
தம்பியின் முதலிரவு ஏற்பாடு தடல்புடலாக நடக்க ஆத்திரம் மேலிடத் துடிக்கிறான் அண்ணன். கனகச்சிதமாகத் திட்டமிட்டு முதலிரவைத் தடை செய்கிறான். உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி தம்பியின் மனைவியைக் குழப்புகிறான். அண்ணன் யார் தம்பி யார் என்று தெரியாது குழம்புகிறாள் தம்பியின் மனைவி. அண்ணனின் சதியை அறிந்த தம்பியும் மனைவியும் அதிர்ச்சியடைகின்றனர். அண்ணனைத் திருத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அண்ணன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.
வாய்பேச முடியாத அண்ணனாகவும் தம்பியாகவும் இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார் அஜித். நாயகன் அஜித்தையும் வில்லன் அஜித்தையும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். அஜித்தின் திரையுலக வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்திய படம் வாலி. அண்ணன் அஜித், தம்பி அஜித் ஆகிய இருவருக்கும் இணையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றவர் நாயகி சிம்ரன்.
1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் மிகச் சிறந்த ஒரு நடிகையான ஜோதிகா அறிமுகமானார். வாலி படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவர் தலையைக் காட்டினாலும் பின்னர் தவிர்க்க முடியாத நடிகையாக பரிணமித்தார். விவேக், லிவிங்ஸ்டன், இந்து, அஜித் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தரமான படங்களையும் வில்லங்கமான படங்களையும் தந்த எஸ்.ஜே.சூர்யா திரைகதை எழுதி இயக்கினார். ஆபாசம், விரசம் எதுவும் அதிகமாக இல்லாது சிறந்த முறையில் உருவாக்கினார் எஸ்.ஜே.சூர்யா.
நிலவைக் கொண்டு வா, சோனா ஓ சோனா, ஏப்ரல் மாதத்தில், வானில் காயுதே வெண்ணிலா ஆகிய பாடல்கள் தேனிசை தென்றல் தேவாவின் இசையில் மனதைக் கவர்ந்தன. நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வாலி திரைப்படம் வசூலில் புதியசாதனை செய்தது.
ரமணி
மித்திரன்27/11/11
2 comments:
தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 13 - ஒரு காமுகனைப் பற்றிய கதையை தடம் மாறாமல் முடிந்திருக்கிறார் எஸ்.ஜேசூர்யா.
What a contrast in ur post.
தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment