Monday, November 14, 2011

ஜெயலலிதா அதிரடிநடுத்தெருவில் ஊழியர்கள்!




தமிழக வாக்காளர்கள் ஐந்து வருடங்களுக் கொருமுறை மாற்றத்தை விரும்புகின்றார்கள். ஆனால் எத்தனை வருடங்கள் சென்றாலும் ஜெயலலிதா மாறமாட்டார். அவரது சுபாவம் அப்படியேதான் இருக்கும் என்பதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிப்படுத் துகின்றன.
ஆறு அமைச்சர்களை அதிரடியாக தூக்கிவிட்டு புதிய அமைச்சர்கள் ஆறு பேரை நியமித்துள்ளார். சுமார் 13,500 மக்கள் நலப்பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். மக்கள் நலப் பணியாளர்கள் இப்போது மூன்றாவது முறையாக ஜெயலலி தாவால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவிப்பது, மனுத்தாக்கல் செய்ய முதல் அவர்களை நீக்கி விட்டுப் புதியவர்களை நியமிப்பது, அடிக் கடி அமைச்சரவையை மாற்றி அமைப்பது எல்லாம் ஜெயலலிதாவுக்குக் கைவந்த கலை. கருணாநிதியின் தலைமையில் அமைச் சரவை ஐந்து வருடங்கள் அசைவில்லாமல் இருக்கலாம். ஜெயலலிதாவின் தலைமை யிலான அமைச்சரவையில் ஐந்து நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாது. எப்போ பதவி பறிபோகும் என்று தெரியாது பதை பதைப்புடன் தான் காலத்தை தள்ள வேண் டும்.
அதிகார துஷ்பிரயோகம், உள்ளாட்சித் தேர்தலின் போது அசமந்தமாகச் செயற் பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரின் வெற்றிகாகச் செயற்படாதது ஆகிய காரணங் களினால் ஆறு அமைச்சர்கள் தூக்கி எறியப் பட்டு புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர். கடந்த மே மாதம் எசக்கிமுத்து அமைச்சராகப் பதவி ஏற்றார். ஜூன் மாதம் அவர் பதவி இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக செந்தமிழன் பதவி ஏற்றார். இப்போது செந்தமிழனும் பதவி இழந்துள்ளார்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற பரஞ்சோதி மீது ஏகப் பட்ட புகார்கள் குவிந்தன. அப் புகார்களின் பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருக்க லாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதனால் சிவபதி அமைச்சுப் பதவி இழந்தார். உதயகுமாரின் குடும்பத்தவர் மீது ஊழல் புகார் சுமத்தப் பட்டதால் உதய குமாரின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட மக்களின் அதிருப்திக்கு ஆளான புத்தி சந்திரன் அமைச்சுப் பதவியை இழந்தார். சண்முகவேலுக்கு இரண்டு முறை அமைச்சுப்பதவி மாற்றப்பட்டது. அவரது நிருவாகத்திறன் குறைவானதன் காரணத்தி னால் அவரும் பதவி இழந்தவர்களின் பட்டியலில் இணைந்தார்.
அதிகார துஷ்பிரயோகம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என்பவையின் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியை இழந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என்பன இருக்காது என்று ஜெயலலிதா உறுதியளித்திருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா முதல்வராகி ஆறு மாதங்களுக்கிடையில் அதிரடி யாக அமைச்சர்களை மாற்றுகிறார். அமைச் சுப் பதவியை இழந்தவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். ஜெயலலிதாவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பது அவர் களுக்கு நன்கு தெரியும். இந்த அமைச்சரவை மாற்றம் கடைசியானதல்ல. இன்னும் பலமுறை மாற்றம் செய்யப்படும். அப்போது அமைச்சராகலாம் என்ற நம்பிக்கை அவர் களுக்கு இருக்கிறது.
ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் கதிகலங்கினர். ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களினால் முன்னாள் அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டர் வரை கைது செய்யப் பட்டனர். ஜெயலலிதாவின் பார்வை இப்போது திராவிட முன்னேற்றக்கழக ஊழியர்களின் மேல் விழுந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தினால் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். சுமார் 13,500 ஊழியர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகளின் அடிப்படைத் தகவல் களைப் பராமரித்து, ஊராட்சி சொத்துக் களைப் பாதுகாப்பது, சிறு சேமிப்பில் மக்களை ஊக்குவிப்பது ஆகியவை மக்கள் நலப்பணியாளர்களின் வேலையாகும். இவர்களின் பணிகளைக் கவனிக்க ஊராட்சியில் போதுமான ஊழியர்கள் இருப்பதனால் தற்காலிகப் பணியாளர்களான இவர்களின் பதவியை இரத்துச் செய்யலாம் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜதுறையின் ஆணையாளர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆணையாளர் திராவிட முன்னேற்றக் கழக அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர் களைப் பணி நீக்கம் செய்யலாம் எனப் பரிந்துரை செய்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி னால் மக்கள் நலப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். திராவிட முன்னேற்றக் கழகத் தால் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை 1999ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பினார். 1996ஆம் ஆண்டு முதல் வரான கருணாநிதி மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு முதல்வரான ஜெயலலிதா மீண்டும் அவர் களை வேலையிலிருந்து விரட்டினார். 2006 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வரானதும் ஜெயலலிதாவால் பதவி இழந்தவர்களுக்கு மீண்டும் பதவி கொடுத்தார். இப்போது ஜெயலலிதாவின் முறை. அவர் தனது அதிகாரத்தின் மூலம் சுமார் 13,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மதுபானச்சாலை ஊழியர்களாக நியமனம் பெற்றவர்களை கருணாநிதி வீட்டுக்கு அனுப்பவில்லை. 1999 ஆம் ஆண்டு இருந்த அதே மன நிலையிலேயே ஜெயலலிதா இப்பவும் இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் பயனடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை அவர் இன்னும் கைவிடவில்லை.
ஜெயலலிதாவின் பழிவாங்கும் படலத்துக்கு மக்கள் நலப்பணியாளர்கள் இறையாகியுள்ளனர். திராவிடமுன்னேற்றக் கழகத்தால் கட்டப்பட்ட கட்டடங்களே ஜெயலலிதாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இந்த நிலையில் ஊழியர்கள் எம்மாத்திரம்? ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு நாங்களாக இருக்குமோ என்ற அச்சம் சாலைப் பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு13/11/11

No comments: