Thursday, November 10, 2011

திருச்சிமேற்கு இடைத் தேர்தலில்அ.தி.மு.க தி.மு.க. செல்வாக்கு ச‌ரிவு

திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலையில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாகப் போட்டியிட்டன.
திருச்சி இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் கடந்த @தர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.
திருச்சி மேற்கு சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மரியம் பிச்சை மரணமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான திருச்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நேருவை தோற்கடித்து வெற்றி பெற்றார். மரியம்பிச்சை மரணமானதால் அவரின் குடும்பத்தவர்களில் ஒருவருக்கு ஜெயலலிதா சந்தர்ப்பம் வழங்குவார் என்று எதிர்பார்க் கப்பட்டது. எதிர்பார்ப்புகளை உடைத்தெறி வதில் புகழ்பெற்ற ஜெயலலிதா பரஞ்சோதி என்பவருக்கு சந்தர்ப்பம் வழங்கினார்.
2006ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பரஞ்சோதி. இம்முறை ஸ்ரீரங்கம் தொகுதியை ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுத்தார் பரஞ்சோதி. ஸ்ரீரங்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி என்பதனால் ஜெயலலிதா அங்கு ஸ்ரீரங்கத்தை தனக்கு விட்டுத்தந்த பரஞ்சோதிக்கு நன்றி செலுத்துமுகமாகவே திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் பரஞ்சோதிக்குச் சந்தர்ப்பம் கொடுத்தார் ஜெயலலிதா.
திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர். இத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும். ஆதரவாக வேறு கட்சிகள் எவையும் பிரசாரம் செய்யவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 68,804 வாக்கு களையும், கே. என். நேரு 54,196 வாக்குகளையும் பெற்றனர். 14,608 வாக்கு வித்தியாசத்தில் பரஞ்சோதி வெற்றி பெற்றார். ஆனால் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளது. மரியம்பிச்சை 7179 வாக்குகளின் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றார். பரஞ்சோதி 14,608 வாக்குகள் மேலதிகமாகப் பெற்று வெற்றி பெற்றாலும். மரியம்பிச்சை கடந்த @தர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைந்த வாக்குகளையே பரஞ்சோதி பெற்றார். நேருவும் கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குகளைப் பெற்றார்.
மரியம் பிச்சை 77, 890 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பரஞ்சோதி 68,804 வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலில் நேரு 70, 711 வாக்குகளைப் பெற்றார். இம்முறை 54,196 வாக்குகளைப் பெற்றார். இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழமை. ஆனால் கடந்த தேர்தலை விட ஆளும் கட்சி குறைவான வாக்குகளைப் பெற்றதால் அதன் செல்வாக்கு சரிந்துள்ளது. அதே போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் மிகவும் குறைந் துள்ளது. இடைத் தேர்தலில் தோல்வியால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பாதிப்பும் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னைத் திருத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கும் பண்ருட்டி இராமச்சந்திர னுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. விஜயகாந்தின் ரசிகர்களை அரசியல் தொண்டர்களாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர். தமிழக சட்ட மன்றத் தலைவராக விஜயகாந்த் வீற்றிருப் பதற்கு காரணமானவர். சினிமா நடிகரும் ரசிகர் மன்றங்களும் அரசியலில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைத்தவர். விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்கு பின்புலமாக நின்று உழைத்தவர். விஜயகாந்தும் பண்ருட்டி இராமச்சந்திரனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயற்படு கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதாக அண்மையில் செய்தி கசிந்துள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்லிலும், உள்ளூராட்சித் தேர்தலிலும் நடை பெற்ற சம்பவங்களை நோக்கும் போது இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளது உண்மை போல் தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை என்றால் கல்யாண சுந்தரம் ஞாபகத்துக்கு வருவதுபோல். பண்ருட்டி என்றால் இராமச்சந்திரன் தான் நினைவுக்கு வருவார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப் பெரும் அரசியல் சக்தியாக விளங்கியவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேறிய போது அவருடன் சேர்ந்து வெளியேறி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் வளரப் பாடுபட்டார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஓரம் கட்டப்பட்ட எம்.ஜி. ஆரின் விசுவாசிகளில் பண்ருட்டியும் ஒருவர்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழ கத்தில் இருந்து வெளியேறி பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் முதலாவது சட்ட மன்ற உறுப்பினர் இவர்தான். விஜயகாந்த் அரசியல்கட்சி ஆரம்பித்தபோது விஜயகாந்துடன் இணைந்தார்.

பண்ருட்டி தொகுதியில் இருந்து தொடர்ந்து ஆறு தடவை வெற்றி பெற்றார். கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது பண்டிருட்டித் தொகுதியையே எதிர்பார்த்தார். ஆனால் அவரை ஆபத்தூர் தொகுதியில் போட்டியிடுமாறு விஜயகாந்த் பணித்தார். விஜயகாந்தின் இந்த முடிவால் தனது தொகுதியை இழந்து ஆபத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விஜயகாந்தின் கட்சித் தலைவராகச் செயற்படுகிறார்.
அரசியல்வாதிகள் எல்லோருக்கும் உள்ள ஆசை பண்ருட்டியிடமும் உள்ளது. தனது மகனுக்கு கட்சியில் பொறுப்பான பதவி ஒன்றைக் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை விஜயகாந்த் உதாசீனம் செய்தார். இதனால் விஜயகாந்துக்கும் பண்ரூட்டிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பண்ருட்டி கலந்து கொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியான பின்னர் பண்ருட்டியும் இன்னும் சிலரும் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் தாவலாம் என்ற கருத்து நிலவுகிறது. பண்ருட்டி கட்சியை விட்டு வெளியேறினால் அது விஜயகாந்துக்குப் பேரிழப்பு. தமிழக சட்ட மன்றத் தேர்தலின்@பாது அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பண்ருட்டி கூறிய பதில் நிஜமாவதும் பொய்யாவதும் விஜயகாந்தின் செயற்பாட்டில்தான் உள்ளது.


சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு23/10/11




No comments: