Tuesday, November 29, 2011

ஜெயலலிதாவின் அதிரடியால்திண்டாடும் தமிழகம்

பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் தமிழக அரசு தாறுமாறாக உயர்த்தியதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி மீது நம்பிக்கை இழந்த மக்கள் ஜெயலலிதா மீது அதிக நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற அரியாசனத்தில் அவரை அமர்த்தினார்கள். கருணாநிதி செய்த தவறினால் தான் ஆட்சி அதிகாரத்தை இழந்தார் என்பதை உணர்ந்த ஜெயலலிதா தரமான ஆட்சியைத் தருவார் என்றே எதிர்பார்ப்பு மேலோங்கியது.
குடும்ப ஆட்சியிலிருந்து மீண்ட தமிழகம் குழப்ப ஆட்சியில் சிக்கியுள்ளது. ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனேயே கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்தத் தொடங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அவமான நடவடிக்கைகளைத் தாங்கிக் கொண்டு இடதுசாரிகளும், சரத்குமாரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். அவமானத்தைக் கண்டுபொறுக்க முடியாத விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கத் தொடங்கி விட்டார். கூட்டணிக் கட்சிகளைப் படுகுழியில் தள்ளிய ஜெயலலிதா பொதுமக்கள் மீது பெருஞ்சுமையைத் தூக்கி வைத்துள்ளார்.
எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றை மத்திய அரசு உயர்த்தும்போது கண்டன அறிக்கை போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயலலிதா நகர பஸ் கட்டணத்தை 50 சதவீதமாகவும் புறநகர் பஸ் கட்டணத்தை 60 சதவீதமாகவும் பால் விலையை 25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளõர். இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா. தமிழக அரசின் கடன் சுமையை நீக்குவதற்கு ஒரு இலட்சம் கோடி கடனாகத் தருமாறு பிரதமர் மன்மோகனைச் சந்தித்தபோது ஜெயலலிதா கோரிக்கை விடுத்தõர். அந்தக் கோரிக்கைக்கான பதிலை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ஆகையினால் விலையைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டதனால் கீழ்மட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை அதிகரிப்பினால் தமிழக அரசின் மீது மக்கள் சீற்றம் கொள்ளக் கூடாது என்பதில் ஜெயலலிதா அவதானமாக செயற்பட்டுள்ளார். விலை அதிகரிப்புக்கும் தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மத்திய அரசு கை விரித்ததனால் தான் விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் தோன்றி விளக்கமளித்துள்ளார் ஜெயலலிதா. விலை உயர்வுக்கு தமிழக அரசு மீது மக்கள் கோபம் கொள்ளாது மத்திய அரசின் மீது எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்றே தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். இந்த அணுகு முறை அவருக்கு எதிராகவே மாறும் நிலை உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை உயர்ந்துள்ளது. மின் கட்டணமும் விரைவில் உயரும் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக ஆட்சி மாற்றத்துக்குஇவைகாரணமாக அமையலாம்.தமது ஆட்சி பறிபோகும் என்றுமின் வாரியத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் அன்றே திருவாய் மலர்ந்தருளினார்.
பொருட்களின் விலையை உயர்த்தாது ஆட்சி நடத்த முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. விலை அதிகரிக்கப்படும் போது பொதுமக்களைப் பாதிக்காது அதிகரிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் விலை அதிகரிப்பு மக்களின் தலையில் பாரிய சுமைகளை ஏற்றியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது ஒரே தடவையில் இவ்வளவு அதிகமாக விலை உயர்த்தப்படவில்லை எனது ஆட்சிக் காலத்தின் போது பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பெருமையாக அறிக்கை விட்டுள்ளார் கருணாநிதி. பஸ் கட்டணத்தை நேரடியாக உயர்த்தாது மறைமுகமாக உயர்த்தியதாக கருணாநிதி மீது குற்றம் சாட்டப்படுகிறது. மறைமுக விலை உயர்வு மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை.
திரõவிட முன்னேற்றக் கழகம் விட்ட தவறுகள் காரணமாக தமிழக ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது. தமிழக ஆட்சி அதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டரை வருடங்கள் உள்ளது. ஆகையினால் இந்த விலை அதிகரிப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் விலை அதிகரிப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள ஜெயலலிதா தயவு தாட்சண்யமின்றி பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் அதிகரித்துள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு என்பனவற்றின் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தயாராகின்றன. எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தமிழக அரசுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆளும் கட்சியை அனுசரித்து அரசியல் நடத்தி வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைத் தாக்கத் தொடங்கி விட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த விஜயகாந்த் இப்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா தன்னை அவமதித்ததனால் ஜெயலலிதாவின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார் விஜயகாந்த். ஆளும் கட்சியை அனுசரித்துப் போவதைக் கைவிட்டு உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படப் போவதாக உணர்த்தியுள்ளார்.
சட்ட சபை இடமாற்றம், சமச்சீர் கல்வி, ஊழியர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றினால் கடும் விமர்சனத்துக்குள்ளான தமிழக அரசு பஸ் கட்டணம், பால் விலை அதிகரிப்பினால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளதை ஆட்சி பீடம் ஏறி ஆறு மாதங்களுக்கிடையில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தைநீதிமன்றத்தி நாடவேண்டியநிலை மக்களுக்கு ஏற்பட்டது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், மக்களின் உயர்வுக்குப் பாடுபடுவதும் அரசாங்கத்தின் கடமை என்பதை ஜெயலலிதா உணரத் தவறிவிட்டார். ஆட்சி பீடம் ஏறியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பழிவாங்க ஆரம்பித்தார். இப்போது பொது மக்களின் தலையில் கை வைக்கத் தொடங்கி விட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆட்சியின் போது ஏற்பட்ட கடன் சுமையைச் சமாளிக்கவே பஸ் கட்டண, பால் விலை உயர்த்தப்பட்டது என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மா



வீரகேசரிவாவாரவெளியீடு27/11/11

No comments: