கே.பாலச்சந்தரின் மற்றுமொரு அற்புதப் படைப்புதான் அபூர்வ ராகங்கள்.
பிரபல பாடகி ஸ்ரீவித்யாவின் மகள் ஜெயசுதா. தாயுடன் ஏற்பட்ட கருத்துவேவறுபாட்டினால் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். தொழிலதிபர் சுந்தரராஜனின் மகன் கமல்ஹாசன். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயயான சிறு பிணக்கினால் கமல் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். ஜெயசுதாவின் வீட்டில் கமலும் சுந்தராஜனின் வீட்டில் ஜெயசுதாவும் தஞ்சமடைகின்றனர். காலப்போக்கில் ஸ்ரீவித்தியாவை கமலும் சுந்தராஜனை ஜெயசுதாவும் காதலிக்கின்றனர்.
கமல், ஜெயசுதா ஆகியோரின் விபரீதக் காதலைத் தெரிந்துகொண்ட ஸ்ரீவித்யாவும் சுந்தராஜனும் முறை தவறிய காதலைத் தொடரக்கூடாது என்று எடுத்துரைத்த@போதும் கமலும் ஜெயசுதாவும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பொருந்தாத இக்காதலின் முடிவு எப்படி இருக்கும் என்று இரசிகர்கள் குழம்பிப்போபாயிருக்கையில் காணாமல்போன ஸ்ரீவித்யாவின் கணவன் திரும்பிவருகிறான். ஸ்ரீ வித்யாவின் கணவன் திரும்பி வந்ததும் கதையில் திருப்பம் ஏற்படுகின்றது. ஸ்ரீவித்யாவின் கணவன் இறந்ததும் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. கமலும் ஜெயசுதாவும் தமது தவறான காதல் உணர்விலிருந்து விடுபடுகின்றனர். ஜெயசுதாவின் தாய் ஸ்ரீவித்தியாவுடனும் கமல் தகப்பன் சுந்தராஜனுடனும் இணைகின்றனர்.
1975 ஆம் ஆண்டுகளில் வெளியான இப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காட்சி அமைப்புகளும் , வசனங்களும் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கமல், ஸ்ரீவித்தியா, சுந்தர்ராஜன், ஜெயசுதா ஆகியோர் தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். டாக்டராக வரும் நாகேஷ் படத்துக்கு கலகலப்பூட்டுகிறார். குடிக்க விரும்பும் நாகேகஷ் தான் டாக்டரின் சகோதரன் என்று கூறி எல்லோரையும் ஏமாற்றுகிறார்.ஸ்ரீவித்யாவின் கணவனாக ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். ஒரு சில காட்சிகளில் மின்னி மறைந்த ரஜினிகாந்த் இன்று "சூப்பர்ஸ்டாராகப் பரிணமிக்கின்றார்.எம்.எஸ். விஸ்வநாதனின் இசை அமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன. "ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. வாணிஜெயராம், "அதிசய இராகம் ஆனந்த ராகம்..கே.ஜே.ஜேசுதாஸ் கைகொட்டிச் சிரிப்பார்கள்.கேள்வியின் நாயகனே.. பி.சுசிலா இப்பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தன. சிறந்த ஒளிப்பதிவுக்கானதேசிய விருதை பி.எஸ்.லோலாகநாதனும் சிறந்த பிண்ணனிப் பாடககிக்கான விருதை வாணிஜெயராமும் பெற்றனர். சிறந்த சிறந்த பிராந்திய விருதை அபூர்வ இராகங்கள் பெற்றது.
பைரவி, ரஞ்சனி, கல்யாணி என்ற இராகங்களின் பெயரிலேயே பெண் பாத்திரங்களைப் படைத்த பாலச்சந்தர் பைரவி என்ற பாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். தன்னிடம் படிக்கும் மாணவிகளில் ஒருவரை கமல் காதலிப்பதாக நினைத்த ஸ்ரீவித்தியா அதுபற்றி கமலிடம்கேட்கிறார். அதிசய ராகம் என்று பாடல் ஆரம்பித்து அவர் ஒரு பைரவி என்று கமல் முடிக்க பைரவியாக நடித்த ஸ்ரீவித்தியா அதிர்ச்சியடைகிறார்.தன் மனைவி ஸ்ரீவித்தியாவைச்சந்திக்க ரஜினி விரும்புகிறார். கமல் அதற்கு தடைபோடுகிறார். என் மனைவிக்கும் எனக்கும் இடையே நீ யார் தம்பி? என்று ரஜினி கேட்கிறார். நிச்சயமாக உன் தம்பி இல்லை என்று கமல் கூறுகிறார்.மதுக்கோப்பையை கையில் ஏந்தி சுவரிலே தெரியும் தான் நிழலைப் பார்த்து சியஸ் சொல்லுடா என்று நாகேஷ் கூறுகிறார். இக்காட்சிகளின்போது தியேட்டர் கரகோகேஷத்தில் அதிர்ந்தது.
இப்படத்தில் கூறப்பட்ட எனது தகப்பனார் யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனார் என்றால் அவருக்கும் எனக்கும் என்ன உறவு என்ற விடுகதைக்கும்விடைதெரியவில்லை.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மித்திரன் 08/01/12
2 comments:
விடை:சம்மந்தி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment