Friday, January 20, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 20

விலைமாதரின் வலையில் வீழ்ந்த தகப்பன் தாயை கொடுமைப்படுத்துவதை தினமும் பார்த்து துடித்த சிறுவன் வாலிபனானதும் விலை மாதரைத் தேடிக் கொலை செய்கிறான். தகப்பனின் நடத்தையால் மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞனை வைத்து எடுக்கப்பட்ட மூடுபனி என்ற படம் ரசிகர்களை அச்சத்தில் உறைய வைத்தது.
பிரதாப் போத்தன் சிறுவனாக இருக்கும்போது அவனது தகப்பன் குடித்து விட்டு வந்து தாøயத் துன்புறுத்துவான். பிரதõப்போத்தனின் தகப்பன் விலைமாதர் மீது அதில் மோகம் கொண்டவர். மனைவியை விட விலைமாதரையே அதிகம் நேசிப்பவர். விலை மாதருடன் அன்பாகப் பழகும் தகப்பன் தாயைக் கொடுமைப்படுத்துவதைத் தினமும் பார்த்துத் துடிப்பான். தாய் துன்பப்படுவதற்கும் அடி வாங்குவதற்கும் விலை மாதர் தான் காரணம் என்பதால் விலை மாதரை வெறுக்கத் தொடங்குகிறான்.
தன் சிறு வயதில் தாய் அனுபவித்த துன்பங்கள் பெரியவனானதும் பிரதாப்போத்தனின் மனதில் இருந்து மறையவில்லை. தாயின் துன்பத்துக்கு காரணமான விலை மாதர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி அவன் மனதில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது. விலை மாதரை தேடித் தெரிவு செய்ம் பிரதாப்போத்தன் அவர்களைத் தன் படுøக்கை அறைக்கு அழைத்து வந்து கொலை செய்கிறான்.
தான் செய்யும் கொடூரம் தவறானது என்பதை பிரதாப் பொத்தன் உணர்கிறான். என்றாலும் அந்தக் கொடுமையை நிறுத்த வேண்டும் என்ற மன நிலை அவருக்கு ஏற்படவில்லை. இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக மனோதத்துவ மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார் பிரதாப் போத்தன். மனோதத்துவ நிபுணர் பிரதாப் போத்தனின் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் கேட்டறிந்த பின்னர் ஒரு பெண்ணை உண்மையாகத் காதலித்தால் எல்லாப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
மனோதத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி @ஷாபாவைக் காதலிக்கிறார் பிரதாப் @பாத்தன் @ஷாபாவை உண்மையாக காதலிக்கும் @பாது விலை மாதøரப் பற்றிய எண்ணம் பிரதாப் போத்தனின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. தான் உயிருக்குயிராகக் காதலிக்கும் ஷோபா பானுச்சந்தரின் காதலி என்பதை அறிந்ததும் பிரதாப் போத்தன் துடி துடிக்கிறார். அவருடைய பழிவாங்கல் எண்ணம் மீண்டும் உயிர் பெறுகிறது. ஷோபாவை கடத்துகிறார் பிரதாப் போத்தன். பிரதாப் போத்தனிடமிருந்து ஷோபாவைக் காப்பாற்றும் பொலிஸ் பிரதாப் போத்தனைக் கைது செய்கிறது.
1980 ஆம் ஆண்டு வெளிவந்த மூடுபனி என்ற இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஒளிப்பதிவு இயக்கம் பாலு மகேந்திரா கதை ராஜேந்திரகுமார் . இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் இனிமையாக இருந்தன. பின்னணி இசை திகிலூட்டியது. மன நோயாளியான பிரதாப் போத்தனிடம் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ஷோபாவும் சிறப்பாக நடித்தனர். விலைமாதரை பிரதாப் போத்தன் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யும் காட்சியின் போது தியேட்டரே அச்சத்தில் நிசப்தமாகியது. தாராளமாக ஆபாசக் காட்சிகளைப் புகுத்தும் சந்தர்ப்பம் இருந்தும் முகம் சுழிக்கும் காட்சிகள் இன்றி இயல்பாகப் படமாக்கினார் பாலு மகேந்திரான. இப்படம் வெளியான போது என் இனிய வெண்ணிலாவே என்ற என்ற ஜேசுதாஸின் குரல் வானொலியில் தினமும் ஒலித்தது.
ரமணி
மித்திரன்22/01/12

2 comments:

காரிகன் said...

மூடுபனி நல்ல படம்தான். ஆனால் சிகப்பு ரோஜாக்கள் என்ற திரில்லர் வந்த பிறகு இந்த படம் வந்ததால் மக்களிடம் இது வெகுவாக எடுபடவில்லை. இது இளையராஜாவின் நூறாவது படம் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. பாடல்கள் இனிமையாக இருக்கும். பாலு மகேந்திரா சைக்கோவை நகல் எடுத்து சில காட்சிகளை எடுத்திருப்பார்.

வர்மா said...

உனமைதான்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா