Thursday, December 13, 2012

தடம் மாறிய தமிழ் படங்கள் 43


மகளைப் போன்று பாசம் காட்டி வளர்க்கும் அப்பாவியான இளம் பெண்ணைத் தாயாக்கிய கதை தான் 1979 ஆம் ஆண்டு வெளியான நூல்வேலி.
துணை நடிகையான சியாமளாவின் மகள் சரிதா. உலகம் அறியாத அப்பாவியான வெகுளிப் பெண். இவர்களின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியேறுகிறார் சரத்பாபு. அவரது மனைவி சுஜாதா எழுத்தாளர். இவர்களுக்கு தான் படப்பிடிப்புக்குச் செல்லும் போது சரத்பாவு சுஜாதா தம்பதியின் மகளுடன் விளையாடுவார் சரிதா. அப்பாவியான சரிதாவின் மீது பரிதாபப்பட்டு தன் வீட்டில் சுதந்திரமாகத் திரிவதற்கு அனுமதி வழங்குகிறார் சுஜாதா.
துணை நடிகையான சியாமளா இறந்த பின் அநாதரவாக நிற்கும் சரிதாவைத் தன் மகள் போல் வளர்க்கிறார் சுஜாதா. கணவர் சரத்பாவும் சரிதாவின் மீது பாசம் வைக்கிறார். தாய் இறந்த சோகம் தெரியாது சரிதாவின் மகளுடன் விளையாடுகிறார் வெகுளிப் பெண் சரிதா. ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்த படி வீட்டிற்கு வருகிறார் சரிதா. மழையில் நனைந்த சரிதாவின் இளமை சரத்பாவுவின் மனதில் இருந்த மோகத்தீயை தீண்டி விடுகிறது. காமத்தால் நிலை தடுமாறிய சரத்பாபு சரிதா வெகுளியென்பதையும் தான் அவளை மகளைப் போல் வளர்ப்பதையும் மறந்து தன் காம வெறித்தீர்க்கிறார். இதனை அறிந்த சுஜாதா மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
வெகுளிப் பெண்ணான சரிதா குழந்தையைப் பெற்றெடுத்து சரத்பாபுவிடமும் சுஜாதாவிடமும் ஒப்படைத்து விட்டு மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்கிறார்.
வெகுளிப் பெண்ணாக நடித்த சரிதா அற்புதமாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். சுஜாதாவும் தன் பங்குக்குத் திறமையை வெளிப்படுத்தித் தனது முத்திரையைப் பதிக்கிறார். சரத்பாபு, ஆனந்த் ஆகியோரும். பாத்திரமறிந்து நடித்தனர். படிச்சவங்கல்லையா அவங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்ற அவரின் வசனம் மிகப்பிரபலமானது.
இசை எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன், இயக்கம் கே.பாலச்சந்தர், பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா ஆகியோர் பாடியுள்ளனர். பாலமுரளி கிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே என்ற பாடல் காலம் கடந்தும் மனதில் ரீங்காரமிடுகிறது.
ரமணி
மித்திரன்  02/12/12

2 comments:

Tamil Illakiyam said...

நல்ல படம்.
உங்கள் விமர்சனம் பழைய நினைவுகளை தூண்டுகிறது.

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பழைய நினைவுகள் மனதைவிட்டு நீங்காது.