Tuesday, March 25, 2025

ருதுராஜ், ரச்சின் அரைசதம் சென்னை வெற்றி

 சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பைக்யை எதிர்த்து விளையாடிய சென்னை     4 விக்கெற்களால் சென்னை வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை கப்டன் ருதுராஜ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது

  மும்பை அணிக்கு ரோகித் சர்மா  18 ஆவது முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றினார்.   ரியான் ரிக்கிள்டன் 13, வில் ஜாக்ஸ் 11  ஓட்டங்களில் வெளியேறினர். க‌ப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 51  ஓட்டங்கள்  சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சிக்கிய சூர்யகுமார் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  தொடர்ந்து அசத்திய நுார் அகமது பந்தில் ராபின் மின்ஸ் 3,, திலக் வர்மா 31,, நமன் திர்  11  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்  மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155  ஓட்டங்கள் எடுத்தது.  .

156 எனும் எட்டக்கூடிய  இலக்கை சென்னை விரட்டியது.  ராகுல் திரிபாதி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.   ரச்சின் ரவிந்திரா, கப்டன் ருதுராஜ் ஜோடி கைகொடுத்தது. தீபக் சகார், சான்ட்னர், வில் ஜாக்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ருதுராஜ், 22 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 67  ஓட்டங்கள் சேர்த்த போது  56 ஓட்டங்கள் எடுத்த‌ ருதுருாஜ்  ஆட்டமிழந்தார்.   'சுழலில்' ஷிவம் துபே (9), தீபக் ஹூடா (3) ஆகிய இருவரும் விக்னேஷின் சுழலில் சிக்கினர்.


  மறுமுனையில் அசத்திய ரச்சின், விக்னேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது ரவிந்திர ஜடேஜா (17) 'ரன்-அவுட்' ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4  ஓட்டங் தேவைப்பட்டது. சான்ட்னர் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரச்சின், வெற்றி துவக்கத்தை உறுதி செய்தார்.சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் (65*), டோனி (0*) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சென்னையின் நுார் அகமது வென்றார்.

ரோகித் '18'

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் முதலிடத்தை மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டார் ரோகித். மூவரும் தலா 18 முறை 'டக்' அவுட்டாகினர்.

நுார் அசத்தல்

பிரிமியர் லீக் அரங்கில் மும்பைக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை (4 ஓவர், 18  ஓட்டங், 4 விக்கெட்) பதிவு செய்த சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரானார் நுார் அகமது. இதற்கு முன், ரவிந்திர ஜடேஜா (4 ஓவர், 20 ஓட்டங்கள் , 3 விக்கெட், 2023, இடம்: மும்பை) இச்சாதனை படைத்திருந்தார்.

  பிரிமியர் லீக் அரங்கில் நுார் அகமதுவின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன் 2023ல் குஜராத் அணிக்காக விளையாடிய இவர், மும்பைக்கு எதிராக 37/3 (4 ஓவர்) தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

22 பந்தில்

அபாரமாக ஆடிய சென்னை கப்டன் ருதுராஜ், பிரிமியர் லீக் அரங்கில் தனது அதிவேக (22 பந்து) அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன், 2023ல் குஜராத் அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

தொடரும் சோகம்

பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி, தனது முதல் போட்டியில் தொடர்ந்து 13வது ஆண்டாக (2013-2025) தோல்வியடைந்தது. கடைசியாக 2012ல் மும்பை அணி, தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

பிரிமியர் போட்டிக்காக சமீபத்தில் சென்னை வந்த 'தல' தோனியின் 'டி-சர்ட்டில்' 'மோர்ஸ் கோடு' ரகசிய மொழியில் 'கடைசியாக ஒரு முறை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

டோனி 43, கூறுகையில்,''நான் விரும்பும் வரை சென்னை அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். இது எனது அணி. நான் 'வீல் சேரில்' அமர்ந்திருந்தாலும், என்னை ரசிகர்கள் இழுத்துச் செல்வர்,'' என்றார்.

 

No comments: