Wednesday, February 25, 2009
முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையே கிரைஸ் சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது கூ20 போட்டியில் நியூசிலாந்து ஏழு விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 162 ஒட்டங்கள் எடுத்தது.
முதல் ஓவரிலேயே ஷெவாக் வழமையான அதிரடியை காட்டினார். அவர் சந்தித்த முதல் மூன்று பந்துகளையும் வரிசையாக சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களை பரவசமடையச் செய்தார். ஏழு பந்துகளில் ஒரேயொரு சிக்ஸர் அடித்த கம்பீர் பிரையனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சிறந்த முறையில் அதிரடியில் ஓட்டங்களைக் குவித்த ஷெவாக் பிரையனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 10 பந்துகளைச் சந்தித்த ஷெவாக் நான்கு சிக்ஸர் உட்பட 26 ஒட்டங்கள் எடுத்தார்.
ரோஹித் சர்மா 7, யுவராஜ் 1, டோனி 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எதிர்முனையில் ரெய்னா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார்.
7.5 ஓவரில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 61 ஓட்டங்கள் எடுத்து இந்தியா தடுமாறிய வேளை களமிறங்கிய யூசுப் பதான் அதிரடியாக எட்டு பந்துகளில் 20 ஒட்டங்களை குவித்தார். மக்கலம் வீசிய 10 ஆவது ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டினார். நான்காவது பந்தையும் சிக்ஸரை நோக்கி அடித்தபோது. எல்லையில் காத்திருந்த ஜேக்கப் ஓரமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இர்பான் பதான் 12, ஹர்பஜன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
43 பந்துகளைச்சந்தித்த ரெய்னா ஆட்டமிழக்காது 61 ஓட்டங்கள் எடுத்தார்.
163 என்ற இலகுவான ஓட்ட எண்ணிக்கையுடன் களமிறங்கிய நியூசிலாந்து 18.5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரைடர் இஷாந் சர்மாவின் பந்துவீச்சில் ஒரு ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
மக்கலம், குப்டில் ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை திணறடித்தது. இஷாந்த் சர்மா இரண்டு நோபோல்களை வீச அதனை பிரீகிட் மூலம் எதிர்கொண்ட குடில் பௌண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டி 10 ஓட்டங்களை எடுத்தார். பதானின் பந்தையும் பதம் பார்த்த குடில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.
ஹர்பஜனின் பந்த வீச்சில் ஆட்டமிழந்த குடில் 28 பந்துகளுக்கு முகம் கொடு த்து மூன்று சிக்ஸர் நான்கு பௌண்டரி அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுத்தார்.
மக்கலம் டெய்லர் ஜோடி 40 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்தது. 20 பந்துகளில் மூன்று சிக்ஸர் ஒரு பௌண்டரி அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்த ரெய்லர், சஹீர்கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மக்கலம் ஓராம் ஜோடி நியூசிலாந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. மக்கலம் 49 பந்துகளுக்கு முகம் கொடுத்து மூன்று சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.
15 பந்துகளைச் சந்தித்த ஓராம் இரண்டு சிக்ஸர் மூன்று பௌண்டரி அடங்கலாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியின் மக்கலம் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது டுவென்டி 20 போட்டி நாளை நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hai Ravi annna score 2000 ium thandi vidathu pola. epadi sugam. unga mail addressai mail pani vidunka.
kokulan
Post a Comment