Saturday, November 19, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 11

உயரமான இடத்தில் இருந்து விழுந்த பேராசிரியர் தாம்பத்திய சுகம் அனுபவித்தால் இறந்துவிடுவார் என வைத்தியர்கள் எச் ச‌ரிக்கின்றனர். தனது இயலாமையினால் இளம் மனைவியின் எதிர்பார்ப்பு கருகிப் @பாவதை விரும்பாத அந்தப் பேராசிரியர் மனைவிக்கு இன்னொருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இப்படிப்பட்ட ஒரு விபரீதமான கதைக் கருவுடன் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் சாரதா.
வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து வித்தியாசமான கதையுடன் வெளியான இப்படத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அந்த எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் புஷ்வாணமாக்கி சாரதாவை வெற்றிப்படமாக்கினார்கள் தமிழ் ரசிகர்கள். 1962 ஆம் ஆண்டு வெளியான படங்களில் பரபரப்பாக பேசப்பட்ட படம் சாரதா.
கல்லூரி பேராசிரியர் எஸ்.எஸ்.ஆரை அவரிடம் படிக்கும் மாணவி விஜயகுமாரி காதலிக்கிறார். மாணவியின்
காதலை ஏற்க மறுக்கிறார் பேராசிரியர் எஸ்.எஸ்.ஆர். எஸ்.எஸ்.ஆரை வெறித்தனமாக காதலிக்கும் விஜயகுமாரி எக்காரணம் கொண்டும் காதலை கைவிட முடியாது என்று கூறுகிறார். மாதா பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் குரு மாணவியை மணக்க முடியாது என்கிறார் எஸ்.எஸ்.ஆர். இறுதியில் எஸ்.எஸ்.ஆரின் மனது மாறுகிறது. விஜயகுமாரியின் பிடிவாதம் வெற்றிபெறுகிறது. கல்லூரி விழாவுக்காக உயரமான இடத்தில் நின்று அலங்காரம் செய்யும் பேராசிரியர் தவறி விழுகிறார். அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால் தாம்பத்திய சுகம் அனுபவித்தால் உயிர் போய் விடும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். இதனை கேட்ட விஜயகுமாரி அதிர்ச்சியடைகிறார்.
வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரியை நெருங்குகிறார். வைத்தியரின் எச்சரிக்கையினால் எஸ்.எஸ்.ஆரின் விருப்பத்தை நிறை@வற்றாது காலம் கடத்துகிறார் விஜயகுமாரி. தனது இயலாமையை தெரிந்துக் கொண்ட எஸ்.எஸ்.ஆர் துடிக்கிறார். விஜயகுமாரியின் வாழ்க்கை சூனியமாகிவிட்டதால் துயரடைகிறார். தன்னால் மனைவிக்கு இன்பமான வாழ்க்கை கொடுக்க முடியாததை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு அவளுக்கு அசோகனை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். எஸ்.எஸ்.ஆரின் விருப்பத்துக்கு விஜயகுமாரி சம்மதிக்கவில்லை இன்னொரு திருமணம் செய்ய முடியாது என மறுக்கிறாள். எஸ்.எஸ்.ஆரின் வற்புறுத்தலினால் இரண்டாவது திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள் சாரதா.
திருமண கோலத்துடன் எஸ்.எஸ்.ஆரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற விஜயகுமாரி எழுந்திருக்கவில்லை. கணவனின் காலடியில் உயிர் பிரிகிறது. ஒருவருக்கு ஒருத்தி என்ற @காட்பாட்டை நிலை நிறுத்துகிறார் விஜயகுமாரி.
எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி, அசோகன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், வி.நாகையா, சகஸ்ரநாமம், எஸ்.வி.ராஜம்மா, புஷ்பலதா @பான்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்தார்கள். வி.மகாதேவனின் இசையமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் உயிரூட்டின. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், கண்ணானால் நான் இமையாவேன், மெல்ல மெல்ல அருகில் வந்து, தட்டுத் தடுமாறி நெஞ்சம், கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் , மணமகளே மணமகளே வா வா ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. "மணமளேள மணமகளே வா வா' என்ற பாடல் இன்றும் திருமண வீடுகளில் ஓங்கி ஒலிக்கிறது. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சூல‌மங்கலம்ககோகாதரிகள் ஆகியோரின் குரல் பாடல்களுக்கு மெருகூட்டின.
சாரதா படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதிய கே.எஸ் கோபால கிருஷ்ணன் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடம் கொடுத்தார். .கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மீது அதிக நம்பிக்கை வைத்த ஏ.எல்.சீனிவாசன் சாரதா படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். திரைக்கதை வசன கர்த்தா மட்டுமல்ல சிறந்த இயக்குநர் என்பதையும் முதல் படத்தின் மூலம் நிரூபித்தார் கே.எஸ்கோபால கிருஷ்ணன்.
சாரதா படத்தின் கதையை கேள்விப்பட்ட ஏ.எல்.சீனிவாசனின் நண்பர்கள் அவரை எச்சரித்தனர். முற்பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் நம்பிக்கை இழந்து பணத்தைத் திரும்ப தரும்படி நெருக்கடி கொடுத்தனர். சாரதா படம் வெளியாகி வசூலை வாரி குவித்ததுடன் மாநிலத்துக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றது. ஏ.எல் புரடக்ஸன் என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்த ஏ.எல்.சீனிவாசன் மெஜஸ்டிக் என்ற ஸ்டூடி@யாவை குத்தகைக்கு எடுத்து படங்களை தயாரித்தார். சாரதா தந்த பெரும் வெற்றியின் பின்னர் மெஜஸ்டிக் ஸ்டூடியோவை வாங்கிசாரதா ஸ்டூடியோ எனப் பெயர் மாற்றினார்.
விஜயகுமாரி நடித்த பாத்திரத்தின் பெயர் சாரதா ஆகையினால் படத்துக்கு சாரதா எனப் பெயரிட்டார்கள். நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் இப்போது இல்லை. கதாநாயகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்று கதாநாயகிகளுக்கு இல்லை. தெய்வத்திருமகள் என்ற பெயரில் அண்மையில் ஒருபடம் வெளியானது. படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த குழந்தையை முன்னிலைப்படுத்தியே படத்துக்கு பெயர்சூட்டப்பட்டது. இப்படத்துக்கு முதலில் நாயகனை முன்னிலைப்படுத்தி தெய்வத்திருமகன் என்றே பெயர்சூட்டப்பட்டது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு அலை காரணமாகவே படத் தலைப்பு மாற்றப்பட்டது.
ரமணி


மித்திரன் 06/11/11

2 comments:

Anonymous said...

வணக்கம்

இன்று உங்களின் வலைப்பக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் அருமையான பதிவு உங்களின் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/02/6.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய வலைச்சரத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா