ஒரு நாள் நடிகர் திலகத்தின் படத்தைப் பார்த்து விட்டு பஸ்ஸுக்காக காத்து நின்ற போது இயக்குனர் பி. மாதவன், விஜயகுமாரைக் கண்டு தனது படத்தில் நடிக்க அழைத்துச் சென்றார். பி. மாதவனிடமும் விஜயகுமார் ஏற்கெனவே வாய்ப்புக் கேட்டு சென்றிருந்தார்."பொண்ணுக்கு தங்க மனது' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார் விஜயகுமார். விஜயகுமாரிடம் இருந்துமுருகன் வாய்ப்பை தட்டிப் பறித்த சிவகுமாரும் பொண்ணுக்கு
தங்க மனசு படத்தில் நடித்தார். சிவகுமார் என்றஒருவர் சினிமாவில் இருப்பதால் விஜயகுமார் என்றபெயரை பி. மாதவன் சூட்டினார்.
கமல், ரஜினி ஆகியோரின் காலத்தில் கதாநாயகனாகநடித்த விஜயகுமார் பின்னர் அவர்களின் தந்தையாக நடித்தார். மிகச் சிறந்த குணசித்திர நடிகராக விஜயகுமார் இருக்கிறார்.சிறந்த கதாநாயகர்களில் ஒருவராக விஜயகுமாரை தமிழ்சினிமா உலகம் ஏற்றுக் கொண்டது. ஒரே மாதிரியான பாத்திரத்தில் நடித்த விஜயகுமார் வித்தியாசமான பாத்திரங்களைத் தேடினார். கதாநாயகனான விஜயகுமாருக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தது. நடிப்புத்தானே என்பதற்காகவில்லனாக நடித்தார்.மதுரையில் நடந்த விழாவுக்கு சென்ற விஜயகுமாரைச்சூழ்ந்து கொண்ட அவரது ரசிகர்கள் கதாநாயகனாக நடித்தஉங்களை வில்லனாக பார்க்க நாங்கள் விரும்பவில்லைஎன்றனர். தனது ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள பாசத்தில்நெகிழ்ந்து போன விஜயகுமார் அன்றிலிருந்து நடிப்புக்குமுழுக்கு போட்டார்.
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல் நகரில் மனைவி மஞ்சுளாவின்பெயரில் சைவ உணவகம் ஒன்று ஆரம்பித்தார். விஜயகுமார் சைவ உணவகம் மிகவும் பிரபல்யமாகி வாடிக்கையாளர்களை ஈர்த்தது. விஜயகுமார் சினிமாவைத் துறந்துமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.மூன்று வருடங்களின் பின்னர் விஜயகுமார் சென்னைக்குவந்த போது மணிரத்தினத்திடம் உதவியாளராக கடமையாற்றிய இயக்குநர் சுபாஷ் விஜயகுமாரைச் சந்தித்துமணிரத்தினத்தின் படத்தில் நடிக்கும்படி அøழப்பு விடுத்தார்.விஜயகுமார்மறுத்துவிட்டார்.இரண்டு பெண்டாட்டி காரனின் கதை. கதையைத்தூக்கி நிறுத்தும் அப்பாவின்பாத்திரத்தில் நடிகர்திலகம் நடிக்க வேண்டியகேரக்டர் அவர் நடித்தால்அவர்தான் ஜொலிப்பார்.கதை இரண்டாம் பட்சமாகிவிடும் நீங்கள் நடித்தால் நீங்களும் பேசப்படுவீர்கள் படமும் வெற்றி பெறும் என்றுசுபாஷ் கூறினார். சுபாஷின் வற்புறுத்தலினால் மணிரத்தினத்தைசந்தித்தார் விஜயகுமார். மணிரத்தினம் கதையைக்கூறியதும் அடடா இப்படிப்பட்ட படத்திலா நடிக்க மறுத்தேன் என்று வருந்தினார்
விஜயகுமார்.பிரபு, கார்த்திக், விஜயகுமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான அக்கினி நட்சத்திரம் என்ற அப்படம் பெரு வெற்றிபெற்றது. அதன் பின்னர் விஜயகுமார் பிஸியான நடிகராகிவிட்டார். குணச்சித்திர பாத்திரமா கூப்பிடு விஜயகுமாரைஎன்று அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
அவிநாசி மணி இயக்கிய ஜானகிசபதம் என்ற படத்தில்நடித்தபோது அங்கு சுறுசுறுப்புடன் பணியாற்றிய உதவிஇயக்குநர் ஒருவரைப் பார்த்து விஜயகுமார் வியந்தார். விஜயகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்த டூயட்காட்சி ஒன்றை பிறேம் பிறேமாக எப்படி எடுக்க வேண்டும்என அந்த இளைஞர் விபரித்தார். அந்த இளைஞனின் கற்பனையில் மனம் லயித்த விஜயகுமார் தயாரிப்பாளரிடம்அந்த இளைஞனின் கற்பனையைக் கூறி அவர் கூறுவது
போல் பாடல் காட்சியை மீண்டும் எடுப்பதாக இருந்தால்கால்ஷீட் தருகிறேன். அதற்கான பிலிம் செலவை நானேபொறுப்பேற்கிறேன் என்றார். நேரம் இல்லாமையால் அப்பாடல் காட்சியை திரும்ப எடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் கூறினார். விஜயகுமாரின் எண்ணம் வீண் போகவில்லை அந்த இளைஞன்தான்சினிமாவை கிராமத்துக்குஅழைத்துச் சென்ற பாரதிராஜா, பாரதிராஜாவின் படங்கள்பெரு வெற்றி பெற்றன. பாரதிராஜாவின் வெற்றியில் விஜயகுமார் மகிழ்ச்சியடைந்தார்.பாரதி ராஜாவின் இயக்கத்தில் கிழக்குச் சீமையிலே என்றபடத்தைத் தயாரிக்க கலைப்புலி தாணு திட்டமிட்டார். அண்ணன்
தங்கை பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் அப்படத்தில் தங்கையாக நடிக்க ராதிகாவை தேர்வு செய்தார்கள்.அண்ணனாக விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என்றபோது விஜயகுமாரை வைத்து நான் இயக்கமாட்டேன்என்று ஒரேயடியாக பாரதிராஜா கூறிவிட்டார்.மிகச் சிறந்த விஜயகுமாரை வைத்து படமெடுப்பதில்லைஎன்ற பாரதிராஜாவின் சபதத்தைக் கேட்டவர்கள் அதிர்ந்துவிட்டனர். 16 வயதினிலே படத்தின் பிரிவியூ காட்சிக்குவரும்படி அøழத்திருந்தேன். அவர் வரவில்லை எனதுஅழைப்பை மதிக்காதவரை வைத்து படமெடுப்பதில்லைஎன்று தீர்மானித்துவிட்டேன் என்றார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் சபதத்தை விஜயகுமாரிடம் கலைப்புலிதாணு கூறினார். நடிகர் திலகம் நடிக்க வேண்டிய பாத்திரம்நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கலைப்புலி தாணு.
பாரதிராஜாவின் சபதத்தை கேள்விப்பட்ட விஜயகுமார்உடனடியாக பாரதிராஜாவின் வீட்டுக்குச் சென்றார். விஜயகுமாரைக் கண்ட பாரதிராஜா அவரை அன்புடன் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் பொதுவான விசயங்கள்பற்றிப் பேசினார்கள். 16 வயதினிலே பிரிவியூ காட்சியைப்பார்ப்பதற்கு வர முடியாத நிலையை விஜயகுமார் விளக்கினார். படப்பிடிப்பு முடிந்தால் வருகிறேன் என்று கூறியதைநினைவு படுத்தினார். படப்பிடிப்பை இடையில் விட்டால்தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டம், பிஸி நடிகனின் அன்றாடநாள் கூட அவனுக்குச் சொந்தமில்லை என்று விஜயகுமார் கூறினார். விஜயகுமாரின் கருத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த பாரதிராஜா மனம் மாறினார். விஜயகுமார்,ராதிகா நடிப்பில் கிழக்குச் சீமையிலே வெற்றி பெற்றது. பாரதிராஜாவின் அந்திமந்தாரை என்ற படத்தில் விஜயகுமார்நடித்தார். அப்படத்துக்கு மத்திய அரசின் விருது கிடைத்தது.அப்படத்தில் நடித்த விஜயகுமாருக்கு சிறந்த நடிகருக்கானசிறப்புப் பரிசை தமிழக அரசு கொடுத்தது. சிறந்த நடிகருக்கான விருதை மத்திய அரசு விஜயகுமாருக்குக் கொடுக்காததற்கு பாரதிராஜா மனம் வருந்தினார்
ரமணி
மித்திரன்
2 comments:
உண்மைதான் சார், இதுவரை நான் அறிந்திடாத செய்திதான், பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment