Wednesday, December 28, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 17

காதலிப்பது போல் நடித்து ஏமாற்றும் பெண்ணால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஒருவன் வேதனை தாங்காது அப்பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்கிறான். இதனால் ஆத்திரமடைந்த அவனது சகோதரன் தவறு விடும் பெண்களை மயக்கி தன் வலையில் விழ வைத்து கொலை செய்கிறான். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் என்ற இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.
கல்லூரி மானவனான சிம்பு தன்னுடன் படிக்கும் சிந்துதுலானியைக் காதலிக்கிறார். ஆனால் சிந்துலானி சிம்புவை காதலிப்பது போல் நடிக்கிறார். தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் சிந்துதுலானியின் வீட்டை நோக்கிச் செல்லகிறார் சிம்பு. அங்@க எதிர்பாராத காட்சி ஒன்றைக் காண்கிறார். தன் எதிர்கால மனைவி இன்னொருவனுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் சிம்பு. ஏமாற்றம், ஆத்திரம், துக்கம் எல்லாம் ஒன்று சேர சிந்துதுலானியைக் கொலை செய்கிறார். நடந்த சம்பவத்தைத் தன்னைப் போன்ற உருவமுடைய அண்ணன் சிம்புவிடம் கூறிவிட்டு தலைகொலை செய்கிறார் தம்பி சிம்பு.
தம்பி சிம்புவின் மரணம் அண்ணன் சிம்புவை வெகுவாக வாட்டியது. தம்பியின் மரணத்துக்கு காரணமான தவறு செய்யும் பெண்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி சிம்புவுக்கு ஏற்படுகிறது. தவறு செய்யும் பெண்களைத் @தடத் தொடங்குகிறார். தவறு செய்யும் பெண்களை அடையாளங் கண்டு காதலிக்கத் தொடங்குகிறார். சிம்புவின் காதல் வலையில் விழுந்த பெண்கள் அவரின் பின்னால் "ற்றுகின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும்@பாது அப்பெண்களை கொலை செய்கிறார் சிம்பு.
அழகிய பெண்களை கொலை செய்வது யார் என்று தெரியாது பொலிஸார் தடுமாறுகின்றனர். ஒரு நாள் கொலை செய்து கொண்டிருக்கும் போது சிம்புவை பொலிஸார் பிடிக்கின்றனர். இந்த கொலை எல்லாவற்றையும் தன்னைப் போன்ற உருவ ஒற்றுமை உடைய தம்பிதான் செய்வதாக சிம்பு சொல்கிறார். தம்பி இறந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாததால் தம்பி சிம்புவைப் பொலிஸார் தேடத் தொடங்குகின்றனர். சிம்புவின் கொலை வெறி மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
சிம்பு, ஜோதிகா, சிந்துதுலானி, மந்த்ராபேடி, யானாகுப்தா, அதுல்குல்கர்ஷினி, ச‌த்யன், ஷாலின், ச‌ந்தானம் ஆகியோர் நடித்தனர். கதை திரைகதை சிம்பு. இயக்கம் ஏ.@ஜ.முருகன். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகரன். இசை யுவன்ஷங்கர் ராஜா.
சிம்புவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் மன்மதன். இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும் சிம்பு மட்டும் தான் பளிச்சென்று தெரிகிறார். அதேவேளை இயக்குனர் முருகனுக்கு கவலையை கொடுத்த படம் இது. இப்படத்தின் இயக்குநர் முருகன் அல்ல சிம்புதான் என்ற செய்தியால் முருகன் மிகுந்த கவலையடைந்தார்.
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன், என்னாசை மைதிலியே, மன்மதனே நீ கலைஞன்தான், வானம்னா உயரத்தைக் காட்டு, தத்தை தத்தை தத்தை போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றன. வசூலில் புதிய சாதனை செய்த இப்படம் தயாரிப்பாளரை விட விநியோகஸ்தர்களை ச‌ந்தோஷப்பட வைத்தது.
ரமணி
மித்திரன்25/12//11

No comments: