
மா பத்திரிகையில் பணியாற்றிய போது அவரது சினிமாஆர்வம் இன்னும் அதிகரித்தது. சண்டமாருதம் பத்திரிகையின் ஆசிரிய ராகத் திகழ்ந்தவர் கவியரசு கண்ணதாசன்
.அந்தக்கால சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி. ஆர், பி.யு. சின்னப்பா ஆகியோரின் பாடல்களை அப்படியே அழகாக பாடும் திறமை கோவி மணிசேகரனுக்கு இருந்தது. பிற்காலத்தில்முறைப்படி சங்கீதம் பயின்று பட்டம் பெற்றார். மந்திரிகுமாரி படத்தின் வசனங்களைக் கேட்டுவிட்டு இப்படியும்
வசனம் எழுதலாமா என்று வியந்தார் கோவி மணிசேகரன்.எதிர்பார்த்த சினிமா ஆசை அவரைத் தேடிவந்தது. 24 வயதில் "நல்லகாலம்' என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அப்படத்தின் கதாநாயகனாக எம்.கே. ராதா நடித்தார். அதற்காகஅவருக்கு 101 ரூபா வழங்கப்பட்டது. பூலோகரம்பை படத்துக்காக இரண்டு பாடல்கள் எழுதினார். அப்பாடல்களைஏ.எம். ராஜாவும், ராதாஜெயலக்ஷ்மி பாடினார்கள். ஏ.எம்.ராஜாவும், கோவி மணிசேகரனும் வேலூரில் நரசிம்மனு நாயுடு என்றசங்கீத வித்துவானிடம் ஒன்றாகசங்கீதம் பயின்றவர்கள். பூலோகரம்பையின்பாடல்களுக்காக கோவிமணிசேகரனுக்கு 1000ரூபா வழங்கப்பட்டது.
இது அந்தக்காலத்தில்மிக அதிக தொகை.சினிமாவில் வெற்றிபெற முடியாததனால் மீண்டும் இலக்கியத்தில் முழுமூச்சாக ஈடுபடத்தொடங்கினார்.
கோவி மணிசேகரன்
சினிமா ஆசையை ஒரு புறம் ஒதுக்கிவைத்து விட்டு நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார். அவருடைய நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.
கோவி மணிசேகரனின் நாடகங்கள் மக்களைக் கவர்ந்ததனால்அவரிடம் கதை கேட்க பல தயாரிப்பாளர்கள்போட்டியிட்டனர். சினிமாவுக்கு கதை கூறும் திறமை இல்லாததனால் கதையைக் கேட்ட எவரும் படத்தைத் தயாரிக்கமுன்வரவில்லை. திரைப்பட நுணுக்கங்களைப் பற்றி அறியவேண்டுமானால் அனுபவம் உள்ள இயக்குநரிடம் உதவியாளராக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். யாரிடம் உதவியாளராகச்சேர்ந்தால் முறைப்படி சினிமாவை
ப் பற்றிய சகல நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று யோசித்தவரின் மனதில் இயக்குநர் சிகரம்கே.பாலச்சந்தர் மனதில் வந்தார்.பாலச்சந்தரின் ""வெள்ளி விழா'' படம் வெற்றி பெற்றிருந்த வேளை, அடுத்து அரங்கேற்றம் என்ற படத்தை தயாரிப்பதற்கு கே.பாலச்சந்தர் அறிவித்தல் விடுத்திருந்தார்.
அரங்கேற்றவேலையில் பாலச்சந்தர் இருந்த வேளையில்அவரின் முன்னால் போய் நின்றார் கோவி மணிசேகரன்.மிகச் சிறந்த இலக்கியவாதி தனது வீட்டிற்கு வந்ததைப்பார்த்த கே.பாலச்சந்தர் "என்ன இந்தப் பக்கம்' எனஆச்சரியத்தோடு கேட்டார். இமயமலையைத் தேடிபறங்கிமலையான தான் வந்த காரணத்தைக் கூறினார்கோவி மணிசேகரன்.

ரமணி
மித்திரன்28/10/2007
1 comment:
I've seen him when I was little,he was my mothers music teacher heard that he was Madurai somu's friend and they learnt music from the same guru...
Post a Comment