Monday, December 26, 2011

கங்கை கொண்ட சோழபுரத்தை நினைவூட்டிய கோர கடலலை

இந்திய அரசியல்வாதிகள் அனைவரின் வாயையும் சுனாமி தற்காலிகமாக மூடிவிட்டது. இந்தோனேஷியக் கடலில் ஆரம்பமான சுனாமி என்ற கொடூரமான பேரலை தன் ஆற்றல் முழுவதையும் இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலும் இந்தியாவிலும் காட்டியது.
சென்னை மாநகரத்தின் மொPனா கடற்கரை. இது உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை. டிசெம்பர் 26ம் திகதி அதிகாலையிலேயே கடற்கரை களைகட்டத் தொடங்கிவிட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமையாகையினால் அதிகாலையிலேயே கூட்டம் சேரத்தொடங்கிவிட்டது.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, விடுமுறை நாளில் விளையாட வந்த சிறுவர் கூட்டம் சிற்றுண்டி வியாபாரிகள் என மொPனா சுறுசுறுப்படையத் தொடங்கியது. சூரியன் மேலே உயர உயர மொPனாவை நோக்கிச் செல்லும் மக்களின் தொகையும் அதிகரித்தது.
காலை 6.30 மணிக்கு சென்னையில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பதால் எவரும் அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. எங்கோ தொலைது}ரத்தில் நடைபெறும் நிலநடுக்கத்தின் பாதிப்பு சென்னையில் பிரதிபலிப்பதால் எவரும் அதனைப் பெரிதாக எடுப்பதில்லை.
சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதேவேளை இந்தோனேஷியாவின் கடலுக்கடியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அது தரை கோரத்தாண்டவத்தை தொண்டமனாறு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மூது}ர், வாகரை, மட்டக்களப்பு, அம்பாறை, சென்னை, நாகப்பட்டினம், கடலு}ர், ஆந்திரா, கேரளம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ஆடி முடித்தது.
இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போகும் விபாPதத்தின் அறிகுறி எதுவுமே தெரியாத மக்கள் கடற்கரையில் மிக உற்சாகமாக நடமாடினர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். காலை 8.30 மணிக்கு எவருமே எதிர்பார்க்காத அந்த விபாPதம் மக்களை பலி வாங்கியது. எத்தனையோ நு}ற்றாண்டுகளுக்கு முன்பு பிரளயம் ஏற்பட்டு உலகின் சில பகுதிகள் அழிந்ததாகக் கேள்விப்பட்டவர்கள் அந்தப் பிரளயத்தை நேரில் கண்டார்கள். முதலாவது முறை கடலைத் தாக்கிய போது கடற்கரையில் நின்ற எவருமே உயிர் தப்பவில்லை. மணிக்கு 600 - 700 மைல் வேகத்தில் 100 முதல் 150 அடி வரை உயர்ந்தெழுந்த சுனாமி என்ற கொடுமையான கடலலை நான்கு மணித்தியாலங்களில் சுமார் 1600 கடல் மைல் து}ரத்தைக் கடந்து ஊழித் தாண்டவமாடியது. கடல் ஊருக்கு வந்ததைக் கண்ட சிலர் உயிர் தப்ப ஓடினார்கள். ஆனால், கடலலையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவர்களால் ஓட முடியவில்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவர்களை சுனாமி இழுத்துக் கொண்டு போனது.
கடற்கரையை அண்டி இருந்த உறுதி மிக்க கட்டடங்கள் சின்னாபின்னமாயின. கடற்கரையில் உள்ள மீனவர்களின் சிறு குடிசைகள் இருந்த இடம் தெரியாது மறைந்து போயின. என்ன நடந்தது எனச் சொல்வதற்கு எவருமே உயிருடன் இல்லை சுனாமியின் தாக்கத்தால் சிறுவரும் பெண்களும் தான் மிக அதிகளவில் உயிரிழந்துள்ளனர். ~கடல் பெருக்கெடுத்ததாம். எத்தனையோ பேர் அள்ளுப்பட்டுப் போனார்களாம். இப்போ கடல் வத்திப் போச்சாம் என்ற செய்தி பரவியதால் புதினம் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரையை நோக்கிச் சென்றனர். அதிகாலையில் கடற்கரைக்குச் சென்றவர்களின் கதி என்னவென்று தெரியாது. பதறியபடி சிலர் கடற்கரையை நோக்கி ஓடினார்கள். மிக அழகான கடற்கரை சின்னாபின்னமாகக் காட்சியளித்தது. கடலில் நிற்க வேண்டிய படகுகள் வீதியிலும், கான்களிலும் கிடந்தன. வீதியில் ஓட வேண்டிய வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் விபாPதத்தை அறியாத மக்கள் கூட்டம் கடற்கரையில் கூடியது.

காலையில் கடற்கரைக்குச் சென்றவர்களைத் தேடிக்கொண்டு கடற்கரைக்குச் சென்ற உறவினர்களும், நண்பர்களும் ஆங்காங்கே கிடந்த சடலங்களைப் புரட்டிப் பார்த்தனர். சிலர் வைத்தியசாலைகளை நோக்கி ஓடினர்.காலை 9.30 மணிக்கு சென்னை மொPனா கடற்கரையை இரண்டாவது முறையாக சுனாமி கலக்கியது. கடற்கரையில் நின்றவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இரண்டாவது தாக்குதலிலும் பலர் உயிரிழந்தார்கள்.மீண்டும் காலை 10.38 மணிக்கும் 10.50 மணிக்கும் பிற்பகல் 12.24 மணிக்கும் சுனாமி மொPனாவைத் தாக்கியது. சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரையிலான கடற்கரை முற்றாக துவம்சமானது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், து}த்துக்குடி, புதுச்சேரி, கடலு}ர், புதுச்சேரி, மாமல்லபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகள் சுனாமியின் தாக்குதலினால் உருத்தெரியாமல் அழிந்தன. இதே போன்றே ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களையும் சுனாமி விட்டுவைக்கவில்லை.
தமிழ்நாட்டில் நாகபட்டினத்திலேயே மிக அதிகமான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நாகபட்டினத்தில் 2500 பேர் பலியாகியுள்ளனர். வேளாங்கன்னியில் 500 பேர் பலியானார்கள். கன்னியாகுமாரி 625, கடலு}ர் 425, சென்னை 200, கல்பாக்கம் 80, புதுச்சேரி 129, காரைக்கால் 250 என தமிழ்நாடு அரசு மரணமானவர்களின் கணக்கைக் கூறுகின்றது. சுற்றுலாப் பயணிகளும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.தமிழ் நாட்டில் ஒட்டுமொத்தமாக 3000 பேர் மரணமானதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இத்தொகை அரசாங்கம் அறிவித்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடு வாசலை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர். தமிழக அரசின் உதவிப் பணிப்பாளர்கள் மிக மிக மந்தமாகவே உள்ளனர். மிக அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு உதவக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. இறந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபாவும், குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாவும் கொடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதிலும் இறந்தவர்களைத் தேடும் பணியிலும் பொதுமக்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர். பொலிஸாரும், இராணுவத்தினரும் செய்ய வேண்டிய பல வேலைகளைப் பொதுமக்கள் மனம் வைத்து செய்து முடித்தார்கள். பிணங்களை ஒவ்வொன்றாகப் புதைக்க முடியாது என்பதால் பாரிய கிடங்குகள் வெட்டப்பட்டு நு}ற்றுக்கணக்கான சடலங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. கொலரா போன்ற தொற்று வியாதிகளைத் தடுக்;க வேண்டுமென்றால் கண்ட உடல்களை அங்கேயே புதைக்க வேண்டும் என்பதால் உடல்கள் புதைப்பதில் மிகுந்த அவசரம் காட்டப்படுகிறது. எழில்மிகு கடற்கரைப் பிரதேசம் உருக்குலைந்துள்ளது. எங்கு திரும்பினாலும் நெஞ்சை உருக வைக்கும் ஒப்பாரி, பிஞ்சுக் குழந்தைகளை நெஞ்சில் அணைத்தபடி கதறி அழுபவர்களைக் கண்டவர்களும் கண்ணீர் சிந்தினர். சுனாமியின் ஊழித் தாண்டவம் முடிவுக்கு வந்த பின்னரும் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் பலர் விடுபடவில்லை. இராமேஸ்வரம், து}த்துக்குடி ஆகிய பிரதான கடற்கரை மூன்று நாட்கள் சுனாமியினால் தாக்கப்படாதிருக்க இலங்கை 25000 உடல்களைக் கொடுத்துள்ளது. இத்தனை அழிவுகளுக்கு மத்தியிலும் மிக முக்கியமான ஒரு சில இடங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கின்றன. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி, காமராஜர் சமாதி என்பவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மெரீனா கடற்கரையில் உள்ள பிள்ளையார் சிலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவர் சக்கரவர்த்தியால் அங்குலம் அங்குலமாகப் பார்த்து உருவாக்கப்பட்ட மாமல்லபுரச் சிற்பங்கள் அப்படியே உள்ளன. கடலலை தாலாட்டும் திருச்செந்து}ர் ஆலயத்துக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. வழமையாக ஆலயச் சுவரில் மோதும் அலை சம்பவம் நடந்த அன்று முக்கால் மணி நேரம் வற்றியிருந்தது. பின்னர் பழையபடி கடலலை சுவரைத் தாலாட்டியது.தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே இப்படிப்பட்ட பேரழிவு இதுவரை ஏற்படவில்லை. சுனாமி என்ற இந்த அலையினால் தாக்கப்படும் 28 நாடுகளில் இதனை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகள் உள்ளன. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சுனாமி தாக்காதபடியினால் இவை அந்த நாடுகளுடன் இதுவரை இணையவில்லை. அந்தக் கருவியைப் பொருத்துவதற்கு ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காசைப் பற்றிச் சிந்திக்காது சுனாமி முன்னெச்சரிக்கைக் கருவியைப் பொருத்த இந்தியா முடிவுசெய்துள்ளது. இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். இந்த அனர்த்தத்தில் இருந்து தமிழகக் கரையோரம் மீள்வதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியாது?
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/01/2005

No comments: