Thursday, December 29, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 18

விபரீத விஞ்ஞானியின் கண்டு பிடிப்பினால் சிறுவன் ஒருவன் இளைஞனாகிரான். அந்த இளைஞனின் மூலம் ஒரு பெண் தாயாகிறார். இரவில் இளைஞனாகவவவும் பகலில் சிறுவனாகவும் மாரும் தன் கனவனைக் கண்டு அதிர்ச்சி அடைகிறால் அப் பெண். இந்த ஒருவரிக்கதையுடன் விரசம், கிளுகிளுப்பு எல்லாம் கலந்து 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நியூ.
அம்மா தேவயானியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் சிறுவன் விஞ்ஞானி மணிவண்ணணின் மூலம் இளைஞன் எஸ்.ஜே. சூரியாவாக மாறுகிறாள். இளைஞன் சூர்யாவைக் காதலிக்கிறார் சிம்ரன். சூர்யா சிம்ரன் காதல் திருமணத்தில் முடிகிறது. இனிதான இல்லற வாழ்வின் மூலம் சிம்ரன் கர்ப்பமடைகிறார். இந்த நிலையில் தன் கணவன் எஸ்.ஜே. சூர்யாவைப்பற்றிய உண்மை சிம்ரனுக்கு தெரியவருகிறது. இரவில் இளைஞனாகவும் பகலில் சிறுவனாகவும் இருக்கும் தன் கணவன் எஸ்.ஜே. சூர்யா நிரந்தரமாக சிறுவனாக மாறிவிட்டாள் தனதும் தனது குழந்தையின் நிலையும் என்ன என்று தவிக்கிறார்.
தன் கணவன் ஒரு சிறுவன். தன் குழந்தையின் தகப்பனும் அதே சிறுவன் என்பதை சிம்பரனால் ஏற்றும் கொள்ள முடியாவில்லை. சிறுவனான தன் மகன் தான் சிம்ரனின் கணவன் எஸ் .ஜே. சூரிய என்ற உண்மை தேயானிக்கும் தெரிய வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு காரணமான விஞ்ஞானி மணிவண்ணன் இதனைத் தீர்ப்பதற்காகக் கடுமையாக முயற்சி செய்கிறார். சிறுவன் இளைஞரனாகவும், இளைஞனை சிறுவனாகவும் மாற்றப்படுகிறான்.
விஞ்ஞான கதை என்ற போர்வையுடன் தாரளமாகக் புகுந்து விளையாடியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா . தயாரிப்பு, கதை ,இயக்கம் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தின் மூலம முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். தேவயானி, சிம்ரன், மணிவண்ணன், நாசர், கருணாஸ், ஐஸ்வர்யா ஆகியோர் நடித்தனர். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய கிரண் ரசிகர்களைத் கிறங்க வைத்தார்.
பாடல்கள் வாலி, இசை ஏ.ஆர். ரஹ்மான் காலையில் தினமும் கண் விழித்தால், இனிவரும், சக்கா இனிக்கிற சக்கா ஸ்பைடர் மேன், கொஞ்ச நேரம் கதகலி, மார்க்கண்டேயா, தொட்டால் பூ மலரும் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெறு வரவேற்பை பெற்றன. எம்.ஜி. ஆரின் படகோட்டி படத்தில் இடம் பெற்ற தொட்டதால் பூ மலரும் என்ற ரீரிமிக்ஸ் பாடலை இளைஞர்கள் விரும்பினாலும் எம்.ஜி. ஆரின் ரசிகர்கøள் அதனை விரும்பவில்லை.
விநியோகஸ்தர்களுக்கு இலாபத்தைக் கொடுத்த நியூ படத்தின் மூலம் நல்ல நடிகர் என்ற பெயரை சம்பாதித்தார் எஸ்.ஜே. சூர்யா . நியூ படத்தின் மூலம் எஸ்.ஜே. சூர்யாவுக்கும்,தணிக்கை குழுவிற்கும் பெரும் மோதலே ஏற்பட்டது. நீதிமன்றம் எஸ்.ஜே. சூர்யாவை எச்சரிக்கை செய்தது. தனிக்கைக்குழுவுடனான மோதல், நீதிமன்ற எச்சரிக்கை எல்லாவற்றையும் மீறி நியூவை வெற்றிப்படமாக்கினார்கள் ரசிகர்கள்.
ரமணிமித்திரன்10/01/12

No comments: