Friday, December 16, 2011

சாதனைப் புயல் ஷேவாக்

சச்சின் டென்டுல்கரின் 100 ஆவது சதத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்திருந்த வேளையில் சச்சினின் சாதனையையே முறியடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.
டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்கள் சிலர் சதமெடுத்து அசத்தியுள்ளனர். 100, 200, 300, 400 ஓட்டங்கள் டெஸ்ட் போட்டியின் அரிய சாதனைகளாக உள்ளன. ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்கள் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. கிரிக்கெட் உலகின் சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரராகிய சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியின் 200 ஓட்டங்கள் அடித்து புதிய சாதனையை ஏற்படுத்தினார்.
மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் 219 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனையை ஏற்படுத்தினார் ஷேவாக்.
இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஷேவாக் ஆட்டமிழக்கும் வரை எதிரணி வீரர்கள் பதற்றத்துடனேயே இருப்பார்கள். அவர் அடித்தாட ஆரம்பித்தால் டெஸ்ட் போட்டியே ஒரு நாள் போட்டி போன்று விறுவிறுப்பாகிவிடும். அத்தபத்து, டிராவிட், லக்ஷ்மன் போன்றவர்கள் டெஸ்ட் போட்டியின் போது அடித்தாட வேண்டிய பந்துகளை தவிர்த்து விடுவார்கள். தன்னை நோக்கி வரும் பந்தை அடித்தால் ஆட்டமிழந்து விடுவேன் என்று நினைக்கும் வீரர்கள் அப்படியான பந்துகளைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஷேவாக் இதற்கு எதிர்மாறானவர். ஆட்டமிழப்பைப்பற்றிக் கவலைப்படாது எதிரணியை அச்சுறுத்துவதிலேயே குறியாக இருப்பார்.
நான்காவது ஒரு நாள் போட்டியின் நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்த மேற்கு இந்தியத்தீவுகள் அணித்தலைவர் டெரன்சமி வெறுப்படைந்தார். இந்திய அணித்தலைவர் ஷேவாக்குடன் கைக்குலுக்காது விலகிச் சென்றார். 170 ஓட்டங்களில் ஷேவாக் அடித்த இலகுவான பந்தை பிடிக்கத் தவறினார் சமி. அதன் பலனாக ஷேவாக் புதிய சாதனை படைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
மேற்கு இந்தியத்தீவுகள் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1984 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காது 189 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு நாள் போட்டியில் அதி கூடிய ஓட்டமாக இருந்தது. ஜெயசூரிய 189, ஹேர்ஸ்டன் 188 (ஆ.இ), டெண்டுல்கர் 186 (ஆ.இ), வட்சன் 185 (ஆ.இ), டோனி 183 (ஆ.இ)கங்குலி 183, ஹைடன் 181 (ஆ.இ) ஆகியோர் நெருங்கினார்களே தவிர முறியடிக்கவில்லை.
14 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் வீரர் சயீட் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்கள் அடித்து அச்சாதனையை முறியடித்தார். 2009 ஆம் ஆண்டு பங்களாதேஷýக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே வீரர் கலென்ட்ரி 194 ஓட்டங்கள் எடுத்து சமப்படுத்தினார். மறுமுனையில் நின்ற வீரர் ஆட்டமிழந்ததனால் சயீட் அன்வரின் சாதனை முறியடிக்கப்படவில்லை. 13 வருடங்களின் பின் 200 ஓட்டங்கள் எடுத்து சயீட் அன்வரின் சாதனையை முறியடித்தார் சச்சின்.
டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதை நினைத்தும் பார்க்க முடியாது என்ற கருத்து வலிமையடைந்த வேளையில் ஒரு வருடம் 10 மாதங்களில் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை சில படைத்தார் ஷேவாக். இந்தப் போட்டியில் புதிய சாதனைகள் பதியப்பட்டன. சில சாதனைகள் சமப்படுத்தப்பட்டன. இன்னும் சில சாதனைகள் நூலிழையில் தவற விடப்பட்டன. 200 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த போது சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியன. இந்திய வீரர் ஒருவர் இந்தச் சாதனையை முறியடித்தால் சந்தோஷப்படுவேன் என்றார் சச்சின். அவர் விரும்பிய படியே இந்திய வீரர் ஷேவாக் அச் சாதனையை முறியடித்தார். சச்சினின் சிஷ்யப்பிள்ளையான @ஷவாக் இரட்டைச் சாதனையை முறியடித்ததனால் இந்திய ரசிகர்கள் இரட்டைச் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 295 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து 300 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 197 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது பவுன்ரி அடித்து 200 ஓட்டங்கள் எடுத்தார். இந்தத் துணிவு ஷேவாக்கை தவிர வேறு எவருக்கும் இல்லை. அதனால் தான் 90 ஓட்டங்கள் கடந்ததும் ஷேவாக் அங்கிள் போல் சிக்ஸர் பவுன்டரி அடியுங்கள் என்று அர்ஜூன் தகப்பனார் டெண்டுல்கருக்கு ஆலோசனை கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் 50 ஆவது ஓவரில் 147 பந்துகளுக்கு முகம் கொடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தார். ஷேவாக் 44 ஆவது ஓவரில் 140 பந்துகளுக்கு முகம் கொடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முழுமையாக நின்றால் இரட்டைச்சதம் அடிக்கலாம் என்று ஷேவாக் கூறியிருந்தார். இதுவரை 50 ஓவர்கள் விளையாடியதில்லை. 47 ஆவது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.
ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் டெஸ்ட் போட்டியில் முச்சதம் எடுத்த ஒ@ர வீரர் அணித்தலைவராக அதி கூடிய ஓட்டங்கள் எடுத்த வீரர் முன்னர் சனத் ஜயசூரிய 189, டெண்டுல்கர் 186, ஓட்டங்கள் எடுத்தனர். சச்சின், ஷேவாக் இருவரும் மத்திய பிரதேசத்தில் இரட்டைச் சதமடித்தனர்.
ஷேவாக், கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டில் 176 ஓட்டங்கள் எடுத்தது. 2002 ஆம் ஆண்டு கங்குலி ஷேவாக் ஜோடி எடுத்த 176 ஓட்டங்கள் சமப்படுத்தப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஷேவாக் முதன் முதலாக ஏழு சிக்ஸர்கள் அடித்தார்.
ஏழு சிக்ஸர், 25 பவுண்டரிகள் மூலம் 142 ஓட்டங்கள் எடுத்து சிக்ஸர் பவுண்டரிகள் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரராக உள்ளார். 15 சிக்ஸர் 15 பவுண்டரிகள் மூலம் 150 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலிய வீரர் வட்சன் முதலிடத்தில் உள்ளார். 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா இரண்டாவது பெரிய வெற்றியை பெற்றது.
160 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த் திய@த முதலிடத்தில் உள்ளது.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷûக்கு எதிராக 175 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக்கின் அதி கூடிய ஓட்டங்களாக இருந்தது.
140 பந்துகளில் ஆறு சிக்ஸர் 23 பவுண்டரிகள் மூலம் 175 ஓட்டங்களை குவித்தார்.
2001 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைச்சதமடித்தார். குறைந்த பந்தில் அரைச்சதமடித்த ட்ராவிட், கபில்தேவ், யுவராஜ் சிங் ஆகிய இந்திய வீரர்களுடன் இரண்டாவது இடத்தைப்பகிர்ந்து கொண்டனர்.
டொன் பிரட்மன் பிரையன் லாரா ஆகியோருக்கு அடுத்ததாக இரண்டு முறை 300 ஓட்டங்கள் அடித்தார்.
இலங்கை அணிக்கு எதிராக இரட்டைச் சதமடித்த முதல் வீரர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காது 201 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்கள் எடுத்ததே அதி கூடிய ஓட்டமாக இருந்தது.


டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது முறை இரட்டைச் சதமடித்த ஷேவாக் அதிக இரட்டைச் சதமடித்த இந்திய வீரர் ட்ராவிட்டுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் கவாஸ்கர் ஆகியோர் தலா இரட்டைச் சதமடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் முச்சதம் ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த ஒரே வீரர்.
ஷேவாக்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்கிய பெருமை கங்குலியையே சாரும். 2001 ஆம் ஆண்டு இலங்கை நியூஸிலாந்து இந்திய ஆகிய நாடுகள் கலந்து கொண்ட முத்தரப்பு போட்டியில் காயம் காரணமாக சச்சின் விளையாடவில்லை.
கங்குலியுடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரனாகக் களமிறங்கிய ஷேவாக் 69 பந்துகளில் அதிரடியாக விளையாடி தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். குறைந்த பந்தில் சதமடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்தார். 62 பந்துகளில் சதமடித்து அஸாருதீன் முதலிடத்தில் உள்ளார்.
துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல நெருக்கடியான நேரங்களில் சுழல் பந்து மூலம் முக்கியமான வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் நான்கு முறை 400 ஓட்டங்களை கடந்த ஒரேயொரு அணியாக இந்தியா உள்ளது. இலங்கை, தென்னாபிரிக்க ஆகியன தலா இரண்டு தடவையும் அவுஸ்திரரேலியா, நியூஸிலாந்து ஆகியன தலா ஒரு முறையும் 400 ஓட்டங்களைக் கடந்துள்ளன.


இரட்டைச் சதமடித்து உலக சாதனை செய்த ஷேவாக்குக்கு டெல்லி கிரிக்கெட் 25 இலட்சம் ரூபா பரிசு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஷேவாக்கை நோக்கி விளம்பர நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. சுமார் 10 நிறுவனங்களின் விளம்பரங்களில் ஷேவாக் தோன்றுகிறார். ஆண்டுக்கு இரண்டு கோடி முதல் 2.5 கோடி வரை விளம்பரத்துக்குப் பெறுகிறார். அடுத்த இரண்டு மாதங்களில் ஐந்து புதிய நிறுவனங்களுடன் ஷேவாக் ஒப்பந்தம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஷேவாக் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2001 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக விளையாடிய ஷேவாக் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்துக் கலக்கினார். 2006 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது 20 ஓவர் அணிக்கு தலைவராகச் செயற்பட்டார்.
சிறு வயதில் கிரிக்கெட் மீது அவர் ஆர்வங்கொண்ட ஷேவாக்கை தந்தை ஊக்குவித்தார். விளையாட்டை விட்டு விட்டு படிக்குமாறு தயார் அறிவுறுத்தினார். கிரிக்கெட் மீது பிரியம் கொண்ட ஷேவாக்கை அரோரா வித்யா பள்ளியில் தகப்பன் சேர்த்தார்.
அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளரான ஏ.என்.சர்மா, நுணுக்கங்களை ஷேவாக்குக்கு சொல்லிக் கொடுத்தார். 199798 இல் டில்லி அணியிலும் 199899 இல் துலிப் கோப்பைக்கான வடக்கு மண்டல அணியிலும் இடம்பிடித்தார்.
இப்போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட ஷேவாக் தென் ஆபிரிக்காவுக்குச் சென்ற 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பிடித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஒரு நாள் போட்டிகளில் ஷேவாக், அஸ்வின்,வருண் ஆரோன், @ராஹித் Œர்மா கோஹ்லி, ட்ராகுல் சர்மா ஆகியோர் முத்திரை பதித்தனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா இலங்கை ஆகியவற்றுக்கிடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டியிலும் இந்தியா விளையாடவுள்ளது.
சச்சின் மீதே சகலரின் பார்வையும் இருக்க புதியவர் யாராவது சாதனை படைப்பாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 16/12/11

No comments: