Wednesday, December 21, 2011

திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள்

நாகிரெட்டி தயாரித்த படம் எங்க வீட்டுப்பிள்ளை.எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர் எனத் தாய்க்குலத்தால் போற்றிப் புகழப்பட்ட படம். பயந்த சுபாவமும் முரட்டுத்தனமும் மிக்க இரண்டு கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர் நடித்த இந்தப் படத்தின் மூலக்கதையுடன் பல படங்கள் வெளியாகின.
ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்று நடித்த வந்தாளே மகராசி, வாணிஸ்ரீயின்இருளும் ஒளியும், வாணி ராணி, தங்கமடி தங்கம் போன்ற படங்கள் எங்கவீட்டுப் பிள்ளையின் பாதிப்பினால் வெளியான படங்கள். பயந்த சுபாவமுள்ள எம்.ஜி.ஆர் நம்பியாரிடம் சவுக்கால் அடிவாங்குவதும் பயந்த எம்.ஜி.ஆருக்குப் பதிலாக வந்த முரட்டு எம்.ஜி.ஆர் நம்பியாரை சவுக்கால் விளாசுவதும் இன்று வரைக்கும் அப்படத்தைப் பற்றிப் பெரிதும் பேசப்பட்ட காட்சி. எங்க வீட்டுப் பிள்ளையின் பாதிப்பில் உருவான படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன என்பதாலும் ~நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலுடனான அந்தக் காட்சியைப் போன்று ஏனைய படங்களின் காட்சிகள் எவையும் மனதில் நிற்கவில்லை.
ஏ.வி.எம் தயாரித்தநானும் ஒரு பெண்கறுப்பு நிறப்பெண்ணின் வாழ்க்கையை வெளிச்சம் வெளிச்சம் போட்டுக்காட்டியது. விஜயகுமாரியின் உருக்கமான நடிப்பைப் பார்த்து அந்தக்காலப் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கண்கலங்கினர். அப்படமே மேகம் கறுத்திருக்கு என்ற பெயரில் வெளியாகியது.
சிவசங்கரிஎன்ற படம் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவர்ந்த படம். இது குழந்தையும் தெய்வமும் என்ற படத்தின் கதையை ஒத்தது. குழந்தையும் தெய்வமும் படத்தில் பிரிந்த பெற்றோரை ஒன்றாக்க இரட்டைக் குழந்தைகள் படும் கஷ்டம் தியோட்டருக்கு ரசிகர்களை அலைமோத வைத்தது.
குழந்தையும் தெய்வமும் படத்தில் நடித்த பேபி ஷகீலா சிறந்த குழந்தை நட்சத்திரமாகத் தெரிவு செய்யப்பட்டார். நம்ம வீட்டுத் தெய்வம்என்ற படமே ஆடி வெள்ளியாக வெளியானது.
இயக்குனர் திலகம் கே. பாலச்சந்தரின் கதை, வசனத்தில் உருவான படம் தெய்வத்தாய் எம்.ஜி.ஆருடன் பாலச்சந்தர் இணைந்த ஒரேயொரு படம் இது. இதே படம்தங்கச் சுரங்கம் என்ற பெயரில் சிவாஜியின் நடிப்பில் உருவானது. எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளில் மயங்கி இருந்த ரசிகர்களை அடிதடி மூலம் சிவாஜி கவர முயன்ற படம் தங்கச் சுரங்கம்,ராமராஜனின் அன்புக் கட்டளை என்ற படம் தெய்வத்தாய், தங்கச் சுரங்கம் ஆகியவற்றின் கூட்டுக் கலவை. நடிப்பிற்கு நவராத்திரி, பாட்டுக்குபடகோட்டி என்ற இரு பெரும் திலகங்களின் ரசிகர்களும் அடைமொழி கொடுத்தனர். அகில இந்திய ரீதியில் மீனவர்களின் வாழ்க்கையை செம்மீன் கூறியது போன்று தமிழகத்தின் படகோட்டி பட்டிதொட்டி எங்கும் புகழ் பரப்பியது. படகோட்டி படத்தில் இடம்பெற்ற தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத் தண்ணீரில் தவிக்க விட்டான் என்ற பாடல் இன்றும் மீனவர்களின் நிரந்தரமற்ற வாழ்வைக் கூறுகின்றது. படகோட்டி என்ற படமே சத்தமில்லாமல் ஒன்று எங்கள் ஜாதியே என்ற பெயரில் வெளியானது.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் வியந்த படங்களில் ஒன்று மனோகரா. நடிகை கண்ணாம்பாளின் கனல் தெறிக்கும் வசனங்கள் இன்றும் ரசிகர்களின் காதில் ஒலிக்கின்றனகலைஞரின் கவித்துவமான வசனங்கள் இன்றும் சிவாஜியின் குரலில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ராஜா ராணிக் கதையான மனோகரா, பாலாபிஷேகம் சரவணன் கதாநாயகனாக நடித்த திரும்பிப் பார் ஆகிய படங்கள் வெளிவர உதவி புரிந்தது.புகழ் பெற்ற கதை வசன கர்த்தாவும் இயக்குனருமான கே.எஸ். கோபால கிருஷ்ணன் கண்கண்ட தெய்வம் என்ற படத்தை படிக்காத பண்ணையார்என்ற பெயரில் மீண்டும் இயக்கினார்.

முருங்கைக்காய்க்கு புது மவுசை ஏற்படுத்திக் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. இப்படம் வெளியான பின்பு முருங்கைக்காயின் விலை கிடுகிடு என ஏறியது. வயதான சிலர் வெட்கத்தினால் முருங்கைக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர்.திறமை மிக்க ஊர்வசி அறிமுகமான முந்தானை முடிச்சு என்ற படம் பாக்கியராஜ், ஊர்வசி, தவக்களை ஆகியோரின் லு}ட்டியினால் தியேட்டரைக் கலகலப்பாக்கியது. பாக்கியராஜின் பெயரை உச்சத்தில் வைத்த இப்படம் ஹிந்தியிலும் பாக்கியராஜ் புகழைப் பரப்ப உதவியது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அறிமுகமான கற்பகம்கதைக்கும் முந்தானை முடிச்சுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.கே.எஸ்.கோபால கிருஸ்ணனின் இயக்கத்தில் உருவான கற்பகம் ரசிகர்களை உருக வைத்து வெற்றி பெற்றது. பாக்கியராஜின் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு கலகலப்பூட்டி வெற்றி பெற்றது. பாக்கியராஜின் வழிவந்தபாண்டியராஜன் மாமியார் மெச்சிய மருமகள் என்ற படத்தை பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பெயரில் வெளியிட்டுப் புகழ் பெற்றார்.எம்.ஜி.ஆரின்~கணவன், விஜயகாந்தின் தெற்கத்திக் கள்ளன் சந்திர சேகரின் ராஜாங்கம் சத்தியராஜின் எங்கிருந்தோ வந்தான் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை உள்ள படங்கள். ரவிச் சந்திரனின் குமரிப் பெண் என்ற படமே இத்தனை படங்களும் வெளிவரக் காரணம்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/03/2004

No comments: