Friday, December 27, 2013

உலகக்கிண்ணம் 2014

பிரேஸில்
 
 பிரேஸிலில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏ  பிரிவில்  பிரேஸில், குரோஷியா, மெக்ஸிகோ,கமரூன் ஆகிய நாடுகள் உள்ளன. ஏ.  பிரிவில் உள்ள நாடுகளின் பலம் பலவீனம் பற்றிய ஒரு பார்வை.\

பிரேஸில்
உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தை நடத்தும் நாடான பிரேஸில் சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தரப்படுத்தலில் ஓர் இடம் முன்னேறி 10 ஆவது இடத்தில் உள்ளது.குழு ஏயில் பிபரேஸில்,  குரோஷியா, கமரூன், மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உள்ளன.ஏனைய நான்கு  நாடுகளையும் விட முன்னிலையில் உள்ளது  பிரேஸில்.. ஐந்து தடவை உலகக்கிண்ண சம்பியனாகி சரித்திரம் படைத்த பிரேஸில் ஆறாவது முறையும் சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து உலகக்கிண்ணம் சம்பியன்,உட்பட 15 சம்பியன் கிண்ணங்களுடன் சரித்திரம் படைத்துள்ளது பிரேஸில். 59,62,70,94, 2004  ஆம் ஆண்டுகளில் 20 வயதுக்குட்பட்ட சம்பியன் .  97,99,2003  ஆம் ஆண்டுகளில் 17 வயதுக்குட்பட்ட சம்பியன் 97,2005,2009 ஆம் ஆண்டு களில் கொன்பரடேசன் சம்பியன் கிண்ணங்களை வென்றது.பிரேஸில், இவை தவிர 1950,2002 ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி  சம்பியன் கிண்ணத்தை தவறவிட்டது.

தென்னாபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் கால் இறுதியுடன் வெளியேறியது.2002ஆம் ஆண்டு பிரேஸிலுக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த பயிற்சியாளர் லுயிஸ் பெலிப்ஸ் கொலரி மீண்டும் பயிற்சியாளராக வந்திருப்பது மிகப்பெரிய பலம். 2002 ஆம் ஆண்டு பிரேஸில் சம்பிய னான போது பயிற்சியாளராக இருந்த இவரின் வழி காட்டல் வீரர்களுக்கு உற்சாகமாக உள்ளது.

உலகின் பிரபலமான வீரர்களான மேஸி, ரொனால்டோ, இப்ராஹிமோவிச் ஆகியோருக்கு ஈடுகொடுத்து விளையாடும் நெய்மர் பிரேஸில் அணியின் நம்பிக்கை நட்சத்திர மாக உள்ளார். பர்ஸி லோனா என்ற ஐரோப்பிய முன்னணிக் கழகம்  அண்மையில் 50 மில்லி யன் டொலர்கொடுத்து இவரை வாங்கியுள்ளது.  46 போட்டிகளில் விளையாடிய இவர்29 கோல்களை அடித்துள்ளார்.
பிரேஸில் விளையாடிய 17 உலகக்கிண்ணப் போட்டி களில் இரண்டு போட்டிகளில் மாத்திரம் தோல்வியடைந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தியது.தியாகோ சில்வா பிரேஸில் அணியின் தலைவராக உள்ளார்.  29 வயதான இவர் மிலான் பாரிஸ், சென் ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய கழகங்களில் விளையாடுகிறார். பர்ஸிலோனா வீரரான டானி அஸ்விஸ் மீது மிகுந்த  எதிர்பார்ப்பு உள்ளது.

கோல்கீப்பர்  டானி அல்விஸ் மார்ச்செலொரா,ஜீலியோ எச்சார்,  ஒஸ்கார், டேவிட்லுயிஸ் ரமிரிஸ்,ஹல்க் ஆகியோர் எதிரிகளுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். உதைபந்தாட்ட உலகின் சாதனைகள் பலவற்றின்   சொந்தக்காரன் பீலே, ரொனால்டோ, கரிஞ்சா ஆகியோர் பிரேஸிலின் வெற்றிக்குக் காரணமான முன்னாள் வீரர்களாவர். உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ரொனால்டோ அடித்த 15 கோல்களின் சாதனை இன்னும் முறியடிக்கப்படாது உள்ளது.ஜேர்மன் வீரரான குளோஸ் 14 கோல்கள் அடித்துள்ளார்.

குரோஷியா

ஐரோப்பாக் கண்டத்தில் ஏ பிரிவில் விளையாடிய குரோஷியா 5 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.பிளே ஓவ்போட்டியில் ஐஸ்லண்டுடன் விளையாடியது . முதலாவது போட்டியில் இரண்டு நாடுகளும் கோல் அடிக்காது சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியில் குரோஷியா இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற்று உலகக்கிண்ண  போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.  மரியோமன் ´கிக் நான்கு கோல்கள் அடித்தார்.ஈக்குவடோருக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்தார். தகுதி காண் போட்டிகளில்  14  கோல்கள்  அடித்தார். குரோஷியாவை எதிர்த்து விளையாடிய நாடுகள் ஒன்பது கோல்கள் அடித்தன. குரோஷியாவை எதிர்த்து விளையாடிய மூன்று நாடுகளும்கோல் அடிக்காது தோல்வியடைந்தன. ஸ்கொட்லாந்துக்கு  எதிரான போட்டியில் குரோஷியா கோல் அடிக்காது தோல்வியடைந்தது.

பிரான்ஸில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் முதல் முதலாக விளையாடும் தகுதி பெற்றது. அறிமுகமான அதே ஆண்டு அரை இறுதி  வரை முன்னேறியது. கால் இறுதியில் ஜேர்மனியைச் சந்தித்த குரோஷியா  3-0 என்ற கோல் கணக்கில வெற்றி பெற்றது. அரை இறுதியில் பிரான்ஸிடம் 2-0 கோல் கணக்கில் தோல்வியடைந்தது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்துடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

குரோஷியா
குரோஷியா 

ஐரோப்பாக் கண்டத்தில் ஏ பிரிவில் விளையாடிய குரோஷியா 5 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.பிளே ஓவ்போட்டியில் ஐஸ்லண்டுடன் விளையாடியது . முதலாவது போட்டியில் இரண்டு நாடுகளும் கோல் அடிக்காது சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியில் குரோஷியா இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற்று உலகக்கிண்ண  போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.  மரியோமன் ´கிக் நான்கு கோல்கள் அடித்தார்.ஈக்குவடோருக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்தார். தகுதி காண் போட்டிகளில்  14  கோல்கள்  அடித்தார். குரோஷியாவை எதிர்த்து விளையாடிய நாடுகள் ஒன்பது கோல்கள் அடித்தன. குரோஷியாவை எதிர்த்து விளையாடிய மூன்று நாடுகளும்கோல் அடிக்காது தோல்வியடைந்தன. ஸ்கொட்லாந்துக்கு  எதிரான போட்டியில் குரோஷியா கோல் அடிக்காது தோல்வியடைந்தது.

பிரான்ஸில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் முதல் முதலாக விளையாடும் தகுதி பெற்றது. அறிமுகமான அதே ஆண்டு அரை இறுதி  வரை முன்னேறியது. கால் இறுதியில் ஜேர்மனியைச் சந்தித்த குரோஷியா  3-0 என்ற கோல் கணக்கில வெற்றி பெற்றது. அரை இறுதியில் பிரான்ஸிடம் 2-0 கோல் கணக்கில் தோல்வியடைந்தது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்துடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தரவரிசையில் இரண்டு இடம் முன்னோக்கி 16 ஆவது இடத்தில் உள்ளது.கொரியா/ஜப்பான், ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில்  முதல் சுற்றுடன் வெளியேறியது. தென்னாபரிக்காவில் நடை பெற்ற போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது. குரோஷியாவின் முன்னாள் வீரரான நிகோ கோவக் (42) பயிற்சியாளராக உள்ளார்.20 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்த இவர் தேசிய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

உதைபந்தாட்டத்தில் புகழ் பெற்ற யூகஸ்லோவியா உடைந்த போது பறந்த நாடு குரோயா.1930 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை உலகக்கிண்ண  போட்டியில்  பங்குபற்றிய நாடு யூகஸ்லோவாக்கியா, குரோஷியா நாட்டு அணிக்கு டர்ஜியோஸ்ர்னா, அணித் தலைவராக உள்ளார்.400க்கு அதிகமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. ரியல்மட்ரிட் கழக வீரரான லுகா மட்ரிக் குரோஷியாவின் நட்சத்திர வீரராக உள்ளார். மத்தியகள் வீரரான இவர் மீது அதிக நம்பக்கை உள்ளது.
மட்ரியோ ஜேவசிக் மிகச் சிறந்த மத்தியகள் வீரர் ஏசிமிலான் அண்மையில் 14 மில்லியன்  டொலர் கொடுத்து இவரை வாங்கியுள்ளது.  நிகோ மக்ரஞ்கர் கொவக், எட்யுர்டோ, ஐவிகா எலிக், நிகிதாஜெவலவிக், மரியோ மன்ட்´திக் ஆகிய வீரர்கள் குரோயாவின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியுள்ளனர். டாவொர் சுகெர் ஹி வோநிமிர் போபன், ரொபேட் புரொமிநெகி ஆகியோர் குரோஷியாவின் முன்னாள் வீரர்களாவர்

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதல் முதலாக 1930 ஆம் ஆண்டு உருகுவேயில் நடை பெற்றது.18 நாடுகள் தகுதி காண் போட்டியில் பங்குபற்றி 13 நாடுகள் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யில் விளையாடின.அமெரிக்க, ஐரோப்பா ஆகிய கண்டங் களில் உள்ள நாடுகள் மட்டும் உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடின.
ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், பரான்ஸ், ரொமேனியா, யூகஸ்லோவியா,வட அமெரிக்காவி லிருந்து அமெரிக்கா, மெக்ஸிகோ தென்னமெரிக்கா விலிருந்து ஆர்ஜென்ரீனா, பொலிவியா,பரேஸில், சிலி, பரகுவே பெரு,உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடின. முதல் போட்டியில் விளையாடிய பரேஸில் மட்டும் தொடர்ச்சியாக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி கள் அனைத்திலும் விளையாடிய பெருமையைப் பெற்றது.

உருகுவேயில் 18 போட்டிகள் நடைபெற்றன. %0 கோல்கள் அடிக்கபட்டன. ஆர்ஜென்ரீனா அதிகூடிய 18 கோல்கள் அடித்தது.பெல்ஜியம், பொலிவியா ஆகிய நாடுகள் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. யாரும் எதிர் ப்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடிய அமெரிக்கா அரை இறுதி வரை முன்னேறியது.ஆர்ஜென்ரீனா, அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையிலான அரை இறுதிப் போட்டியில் 6!1 கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது.உருகுவே யுகனிலோவியா ஆகியவற்றுக்கிடை யேயான அரை இறுதிப்போட்டியில் 6!1 என்ற கோல் கணக்கில் உருகுவே  வென்றது.

பரபரப்பான இறுதிப் போட்டியில் உருகுவேயும், ஆர்ஜென்ரீனாவும் மோதின. 4!2 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்று முதலாவது சம்பயன் பட்டத்தைப் பெற்றது.அரை இறுதியில் தோல்வியடைந்த அமெரிக்கா யூகஸ்லோவியா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டி யில் வெற்றி பெற்ற அமெரிக்கா மூன்றாம் இடத்தையும் யூகஸ்லோவியா நான்காம் இடத்தையும் பெற்றன. எட்டு கோல்கள்   அடித்த ஆர்ஜென்ரீனா வீரர் குல்லெரிமோஸ் ரெபளிக் கோல்டன் பூட்ஸ் விருதைப் பெற்றார்.
ஆர்ஜென்ரீனா பரான்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி நடுவரின் தவறினால் ஆறு நிமிடங்கள் முன்பே முடிந்தது.
அப்போது ஆர்ஜென்ரீனா ஒரு கோல் அடி த்திருந்தது. பரான்ஸ் கோல் அடிக்கவில்லை.பன்னர் ஆறு நிமிடங்கள் விளையாடிய போதும் இரண்டு நாடுகளும் கோல் அடிக்க வில்லை. 

இறுதிப்போட்டியில்  இரண்டு பந்துகள் பாவிக்கப்பட்டன. முதல்பாதி போட்டி உருகுவே தெரிவு செய்த பந்திலும்  இரண்டாவது பாதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாதெரிவு செய்த பந்திலும்  நடைபெற்றது.
ரொமேனியா வீரர்களுடனான சச்சரவு காரணமாக பெரு அணித்தலைவர் பலசிடோ கலினோலோ பொலிஸால் கைது செய்யப்பட்டார்.மனைவி, பள்ளைகளை காண்பதற்காக ஹோட்டலின் வெளியே பதுங்கியிருந்த உருகுவே கோல் கீப்பர் கைதுசெய்யப்படட பன் அணியிலிருந்து  நீக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ண போட்டியை நடத்திய பன் இன்னொரு உலகக் கிண்ண  போட்டி  உருகுவேயில் நடைபெறவில்லை. 2030 ஆம் ஆண்டு உலகக்கிண்ண  நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உருகுவே விருப்பம் தெரிவித்துள்ளது.
சுடர் ஒளி
15/12/13
 


No comments: