Saturday, December 21, 2013

உலகக்கிண்ண சிறந்த அணி

மனுவல் நெயூர்   
 
உலகக்கிண்ண உதை பந்தாடப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற நாடுகளின் வீரர்கள் உள்ளடக்கிய சிறந்த அணி ஒன்றை இரசிகர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த அணிக்கு  ஜேர்மன் நாட்டின் கோல் கீப்பர் மனுவல் நெயூர்   கோல் கீப்பராக உள்ளார். தகுதிகாண் இறுதி  சுற்றில் 10 போட்டிகளில் விளையாடிய ஜேர்மனி தோல்வியடைய வில்லை. ஐந்து போட்டிகளில் எதிரணி கோல் அடிக்கவில்லை. ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியது.    பின் களவீரர்களாக ஜேர்மன் வீரர் பிலிப்ஸ்லஹாம் , மான் சிஸ்றர் சிற்றி அணித்தலைவரும், பெல்ஜியம் வீரருமான வில்சன் கொம்பனி  ஆகியோர் உள்ளனர்.
தியாகோ சில்வா, அஸ்லிகோலா இருவரும் பிரேஸில் வீரர்கள். உலகின் முன்னணி வீரர்களான ரொனால்டோ, மேஸி ஸ்பெயினுக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுத்தந்த அன்ரிஸ் இனிஷ்டா,  ஐவரி கோஸ்ட், வீரர் யாயாதோர், நெதர்லாந்தின்   அர்ஜின் ரொபென், நெதர்லாந்து வீரர் லூயிஸ் சுயத்ஸ் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

சுடர் ஒளி

08/12/13

No comments: