Monday, December 16, 2013

மோடியில் அலையில் சிக்கிய காங்கிரஸ்


டில்லி, ராஜஸ்தான், சதீஷ்கார், மத்திய  பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங் களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. மிசோராம் மாநிலத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல மாநிலங்களில்    எதிர்ப்பு அலை எழுந்தது. மோடியின் வருகையினால் அந்த அலை சுனாமி போல் சுழன்றடித்து காங்கிரஸை சுருட்டியது.பா தீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக  மோடி அறிவிக்கப்பட்ட போது அவருக்குச் சமமான ஒரு தலைவரை காங்கிரஸ் கட்சி அடையாளம் காட்டத் தவறியதால் பாரிய பின்னடைவைச் சந்தித்தது.
இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. ஆகையினால், இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்திய நாடாளுமன்றத் திற்கான முன்னோடித் தேர்தலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்வி யடையும்  என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இப்படி மோசமாகத் தோல்வியடையும் என்று எதிர்பார்க்க வில்லை.
டில்லியின் மூன்று முறை முதல்வ ராக இருந்தவர் லீலா தீக்ஷித். காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த மூன்று வருடங்களாக டில்லியில் ஏற்பட்ட மாற்றத்தை இவர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு எதிராக அண்ணா ஹஸாரே முன்னெடுத்த சத்தியாக் கிரகப் போராட்டம் டில்லியை திக்குமுக்காடச் செய்தது. அதனை அடக்குவதற்காக மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் பயனாக அரவிந்த் ஜெக்ரிவால் என்ற புதிய தலைவர்  உருவாகினார்.அவருடைய ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் டில்லியிலிருந்து காங்கிரஸ் கட்சியை கூட்டிக் குப்பையில் போட்டுவிட்டது.அன்னா ஹஸா ரேயின் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்ட அரவிந்த்  ஜெக்ரிவால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார். வருமான வரித்துறை அதிகாரியாக இருந்த இவர் ஹஸாரேயின் நம்பிக்கைக்குரிய வராக மாறினார். அண்ணா ஹஸாரேயின் இயக்கம் நடத்திய ஊழல்களுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.ஊழல் செய்பவர் களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததைக் கண்ட அரவிந்த்  ஜெக்ரிவால் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைகளை அண்ணா   ஹஸாரே புறக்கணித்ததனால் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி ஆம் ஆத்மி என்ற புதிய கட்சியை ஆரம்பத்தார். 2012 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பக்கப்பட்ட புதிய கட்சியினால் டில்லி மாநிலத்தை தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி செய்த காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.புதிய கட்சியை ஆரம்பத்த  தலைவர்    மிகவும் துணிச்சலாக டில்லி முதல்வர் லீலாதீக்  ஷித்தை எதிர்த்துப் போட்டியிட்டார். லீலா தீக்ஷித்தின் பலம் காங்கிரஸின் பலம் என்பவற் றின் முன்னால் புதிய கட்சித்தலைவர் தாக்குப்படிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகங் கள் எல்லாவற் றையும் தவிடு பொடியாக்கி 25 ஆயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார்.  டில்லியின் முன்னாள் முதல்வர் லீலா தீக்ஷித்தின் அரசியல் எதிர் காலத்தை னிய மாக்கியுள்ளார்.
சட்டம்,ஒழுங்கு பரச்சினை,ஓடும் பஸ் ஸில் மருத்துவ மாணவி கற்பழித்துக் கொலை, கொமன் வெல்த் ஊழல், பாதுகாப் பன்மை போன்றவற்றினால் டில்லி அரசியல்களம் காங்கிரஸின் கையை விட்டுபோய் விட்டது.பாரதீய ஜனதாக்கட்சி முதலிடத்தில் உள்ளது.2008 ஆம் ஆண்டு 23 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக்கட்சி இப்போது 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.புதிய கட்சியான ஆம் ஆத்மி 28 இடங்களைப் படித்தது.பாரதீய ஜனதாக்கட்சி கடந்த ஆண்டு வெற்றி பெற்ற தொகுதிகளை விட ஒன்பது தொகுதிகளை அதிகமாக வெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு 43 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் இப்போது எட்டுத் தொகுதிகளில்  மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
டில்லியில் ஆட்சி அமைப்பதற்கு போது மான அறுதிப் பெரும்பான்மை பாரதீய ஜன தாக்கட்சிக்கு இல்லை.ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆகியவற்றின் துணையின்றி பாரதீய ஜனதாக்கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாது.பாரதீய ஜனதாக் கட்சிக்கு உதவி செய்யும் நிலையில் ஆம் ஆத்மி இல்லை. பாரதீய ஜனதாக்கட்சி யைப் பழிவாங்குவதற்கு காங்கிரஸ் உதவி செய்யலாம். ஆனால், அப்படியான உதவி யை ஆம் ஆத்மி  கட்சித்தலைவர் கோரப் போவதில்லை. மறு தேர்தலுக்குத் தயார் என்று கூறினார்.
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றா வது முறையாக பதவியேற்கிறார் சிவாஜ் சிங்சவுகான். பாரதீய ஜனதாக்கட்சி கடந்த 2005 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி களை விட அதிக தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2008 ஆம் ஆண்டு 143 தொகுதி களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக்கட்சி இப்போது165 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

சதீஸ்காரில் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.மிசோராமில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துள் ளது. பாரதீய ஜனதாக்கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. டில்லி நிலைமைதான் சிக்க லில் உள்ளது.ஆம் ஆத்மி இல்லை யயன் றால் பாரதீய ஜனதாக்கட்சி அறுதிப் பெரும் பான்மை பெற்றிருக்கும்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டால்  பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் ஆகியவற்றுக்கு பின்ன டைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. காங்கிர ஸின் படுதோல்வியினால் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளியேறும் நிலை  உள்ளது. மாநிலக்கட்சிகளின்  ஆதரவு  இல்லாமல் மத்தியில் ஆட்சி செய்ய முடியாது.
ஊழலுக்கு எதிரான இயக்கமாகத் தோன்றி அரசியல் கட்சியாக மாறியுள்ள ஆம் ஆத்மி ஊழல் செய்யாதக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து இந்திய நாடாளு மன்றத் தேர்தலை சந்திக்கும் அல்லது தனிக் கட்சி யாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்பது பற்றிய விபரத்தை தலைவர் வெளியிடவில்லை. ஊழல் செய்யாத கட்சி யை இந்தியாவில் அடையாளம் காண முடியாது.
மாநிலத் தேர்தலில் 346 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.111 பேர்குற்றப் பின்னணி  உள்ளவர்கள். அவர்களில்  66 பேர் கொடூரக் கொலைப் பின்னணியில் உள்ள வர்கள். பாரதீய ஜனதாக்கட்சி 150, காங்கிர ஸில்139, பகுஜன் சமாஜில் 35 கோடீஸ் வரர்கள் போட்டியிட்டார்கள். சமஷ்டி வேட் பாளரான சஞ்சய்பன்  வெளியிட்ட சொத்து விபரம் அதிர்ச்சியா இருந்தது. தன்னிடம் 5 ஆயிரம் ரூபா மட்டும் இருப்ப தாகக் குறிப்பட்டுள்ளார்.
சிவராஜ் சிந்தியா,விஜயராஜ் இந்துஜா ஆகியோரின் மகளான வசுந்தராஜே சிந்தியா ராஜஸ்தான் முதல்வராகிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். லோக் சபை நாடாளுமன்ற செயலாளராக பதவி வகித்துள்ளார். 2003 முதல் 08 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த இவர் காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்த பதவியை மீன்டும் பெற்றுள்ளார்.
டில்லி மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர்  ஹர்ஐவர் தன்கான் பூர் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர். 1993 ஆம் ஆண்டு  டில்லி மாநிலத்திலிருந்து  தொடர்ந்து ஆறாவது தடவை வெற்றி பெற்றுள்ளார்.93ஆம் ஆண்டு சட்டமைச்சராகவும், 96 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தவர். டில்லியில் முதல்வராகும் எதிர்பார்ப்பல் இருக்கிறார்.
     மத்திய பரதேச முதல்வராகப் பதவி ஏற்க உள்ள சிவராஜ் சிங் சவுகான் தத்துவ இயலின் முதுகலைப் பட்டம் பெற்றவர். பாரதீய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் மத்திய பரதேச மா நிலத்தலைவராகவும் பதவி வகித்தவர். தொடர்ந்து மூன்றாவது தடவையாக மத்திய பரதேச முதல்வர் கதிரையில் அமர்கிறார்.
ராஜஸ்தான் மத்திய பரதேசம், டில்லி, சத்திஸ்கார் ஆகிய மாநிலங்களில் உள்ள 72 நாடாளுமன்றத்தொகுதிகளில்  பாரதீய ஜனதாக்கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.குஜராத்தின் 26 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இம் மாநிலங்களில் உள்ள 100 தொகுதிகளில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறும் என்று கணிக்கப் பட்டதினால்  அடுத்த பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுகிறது.
உத்தரபரதேசம், மகாராஷ்டிரம், பீகார், ஒடிசா, தழிழ் நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு வீழ்ச்சியடைந் துள்ளது.தெலுங்கானா பரச்சினையும் காங்கிரஸுக்கு பெரும் தலையிடியாக உள்ளது.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மாநிலக்கட்சிகள் அணி மாறுவதற்காக மதில் மேல் பூனையாக காத்திருக்கின்றன.  

வானதி 
சுடர் ஒளி 22/12/13

No comments: