Thursday, December 26, 2013

.இலங்கை குறும்படத்துக்கு ஜேர்மனிய இயக்குநர் பாராட்டு

கைத்தொலை பேசிமூலம் படமாக் கப்பட்ட மிச்சக் காசு எனும் குறும் படத்துக்கு ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த இயக்குநர் அலெக்சாண்டர் ரைடல் பாராட்டுத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் குறும்படம் சம்பந்தமான பயிற்சிப்பட்டறை ஒன்று  நடை பெற்றது. அப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட இயக்குநர் அலெக்சாண்டர் ரைடெல் கைத்தொலைபேசி மூலமும் குறும்படம் எடுக்கலாம் என்று கூறினார்.
அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மதிசுதா என்று அழைக்கப் படும் ம.தி. சுதா தான் ஏற்கனவே கைத்தொலைபேசி மூலம் குறும் படம்  எடுத்தாக கூறி தனது படத்தைக் காண்பத்தார்.அதனைப் பார்த்த ஜேர்மனிய இயக்குநர் பாராட்டினார்.
மிச்சக் காசு என்ற குறும்படத்தை படத்தொகுப்பு  செய்து இயக்கியவர்: மதி சுதா. படப்படிப்பு: மதுரன், திரைக் கதை: சுதேசினி, சுஜிதா உதவி இயக்கம்: துவா, இசை: மதுரன்  ரவீந்திரன்.
சம் சுங் S 3யில் மிச்சக் காசு படமாக்கப்பட்டது.சும்சுங் கலக்ஸி tabயில்  இசை அமைக்கப்பட்டது. குழந்தை நட்சத்திரமான சங்கர் இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மதிசுதாவின் துலைக்கோ போறியள்  என்ற குறும்படம் இரசிகர்களின்  மத்தியில் வரவேற்பைப் பெற்றது.ஒரு திருடனின் வாழ்க்கையை  நகைச்சுவையுடன் வெளிப் படுத்திய படம் துலைக்கே போறியள்.
உடுப்பட்டியைப் பறப்படமாகக் கொண்ட மதிசுதா யுத்த ழ்நிலை காரணமாக மல்லாவிக்கு இடம் பெயர்ந்தார். மருத்துவ படிப்பை மேற்கொண்ட இவர் வசதியீனம் காரணமாக படிப்பைக் கைவிட்டார். அதன் பன்னர் சுயமுயற்சியின் மூலம் கல்விகற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும்  இந்திய நிறுவனம் ஒன்றில்  உயர் பதவி வகிக்கிறார்.
திரைப்படத்துறையில் அதிக ஆர்வம் உடைய இவர் மதிசுதா என்ற பெயரில் இணையதளம் ஒன்றை இயக்குகிறார்.முழு நீள திரைப்படம் ஒன்றை இயக்குவதே இவரின் கனவு.

 சுடர் ஒளி
22/12/2013

No comments: