Friday, December 20, 2013

தென்னாபிரிக்காவில் சாதித்த நாடுகள்


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும்  நாடுகள் எட்டுக்குழுக்களாகப் பரிக்கப்பட்டன.  உலகக்கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் 32 நாடுகளும்  தயாராகின்றன. 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில்  விளையாடிய 20 நாடுகள் பிரேஸிலில்  நடைபெறும் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. உலகக்கிண்ணப் போட்டியில் முதன் முதலாக  விளையாடும் தகுதியை பொஸ்னியா பெற்றுள்ளது.

பிரேஸிலில் முதல்முதலாக 1950ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெற்றது. அப்போது பிரேஸில் இறுதிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தை வெல்லும்  வாய்ப்பை இழந்தது. அடுத்த உலகக் கிண்ண சம்பியானாகும் தகுதிம் பிரேஸிலுக்கு உள்ளது. பிரான்ஸ், ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, உருகுவே ஆகிய நாடுகள் உலகக்கிண்ணப் போட்டியை நடத்தி சம்பயனானவை. உலகக்கிண்ண இறுதிப்  போட்டியில் ஏழு தடவைகள் விளையாடி ஐந்து தடவை கள் சம்பயனான பிரேஸில், தாய் நாட்டில் நடைபெறும் போட்டியில் சம்பியனாக வேண்டும் எனத் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இரண்டு தடவைகள், மூன்றாவது இடத்தையும்,    ஒரு தடவை நான்காவது இடத்தையும் பெற்றது பிரேஸில்.

உலகக்கிண்ணப் போட்டிகளில் ஏனைய நாடுகளைவிட மிக உயர்ந்த நிலையிலேயே பிரேஸில் உள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் இரண்டாவது சுற்றுடன் பரேஸில் வெளியேறி விட்டது
உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டியை  பரேஸிலில் நடத்தக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மக்கள்மீது பொருளாதாரச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றால் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தற்போது அடங்கியுள்ளன. மைதானங்களைப் புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகம் என்றும் மக்கள் போராட் டம் நடத்தினார்கள். சில மைதானங்களை திட்டமிட்டபடி புனரமைக்க முடியவில்லை. ஆகையால், இரண்டு போட்டிகள் வேறு மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
மைதானப் புனரமைப்புப் பணி தாமதம், விபத்து, தொழிலாளர் உயிரிழப்பு  என்பனவற்றால் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது. உலகக்கிண்ணப்போட்டி ஆரம்பமாவதற்கிடையில் புனரமைப்புப்பணிகள் முடி வடைந்துவிடும் என்று புனரமைப்புச் செய்யும் நிறுவனங்கள் உறுதி மொழியளித்துள்ளன.

பிரேஸில் நாட்டின் சம்பா நடனமும், பாட்டும் உலக மக்களைக் கவர்ந்துள்ளன. உதைபந்தாட்டத்தை உயிரினும் மேலாக மதிக்கும் இரசிகர்கள் பிரேஸிலில் உள்ளனர். ஆகையால்,போட்டிகள் அனைத்தும் மிக உற்சாகமாக இருக்கும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
பிரிவில் பிரேஸில், குரோயா, மெக்ஸிகோ, கமரூன் ஆகியன உள்ளன. முதல் போட்டியில் பிரேஸிலும் குரோஷியாவும் மோதுகின்றன. பி பிரிவில் ஸ்பெயின் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளன. 2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய ஸ்பெயினும், நெதர்லாந்தும் முதல் போட்டியில் சந்திக்கின்றன. சி பிரிவில் கொலம்பியா, கிரீஸ், ஐவொரிகா, ஜப்பான். டி பிரிவில் உருகுவே, கொஸ்ரரிகா, இங்கிலாந்து, இத்தாலி. பிரிவில் சுவிட்ஸர்லாந்து, ஈக்குடோர், பிரான்ஸ், ஹாலண்ட். எவ் பிரிவில்  ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, ஈரான், நைஜீரியா உள்ளன. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு பொஸ்னியா முதன் முதலில் தகுதி பெற்றுள்ளது. ஜி பிரிவில்  ஜேர்மனி, போலந்து, கானா, அமெரிக்கா. எச் பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா உள்ளன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில்  பலம் குறைந்த தாகக் கருதப்படும் நாடு சிலவேளை பரபலமான நாடுகளை  வீழ்த்திவிடும். இம்முறை முதன் முதலாகக்  களமிறங்கும் பொஸ்னி யாவின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.



ஆபரிக்காக் கண்டத்தில் முதன் முதலில் 2010ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடை பெற்றது. தென்னாபிரிக்காவில் இப்போட்டி  நடைபெற்ற போது எழுந்த உவுசலாவின் சத்தத்தினால் உலகமே அதிர்ந்து குழல் போன்ற அந்த வாத்திய இசை உலகில் பிரபல மானது. ஐகீராவின் வசீகரக்குரலில் வாக்கா வாக்கா என்ற உலகக்கிண்ணப் பாடல் இரசிகர்களைக் கிறங்கடித்தது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியில் நைஜீரியா, அயர்லாந்து தவிர, 197 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. வட கொரியா, ஸ்லோவாக்கியா, நியூஸிலாந்து  ஆகிய நாடுகள் பலம்வாய்ந்த அணிகளை மிரட்டின. முதல் சுற்றில் விளை யாடிய நியூஸிலாந்து தோல்வியடையவில்லை. மூன்று போட்டிகளையும் சமப்படுத்தியது.64 போட்டிகளில் 145 கோல்கள் அடிக்கப்பட்டன. ஜேர்மன் நாடு அதிகூடுதலாக 16 கோல்கள் அடித்தது. நெதர்லாந்து, பிரேஸில், ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி, உருகுவே, கானா, பரகுவே, ஸ்பெயின் ஆகியன காலிறுதிவரை முன்னேறின. காலிறுதியில் வெற்றிபெற்ற உருகுவே, நெதர்லாந்து, ஜேர்மனி,ஸ்பெயின் ஆகியன அரை இறுதியில் மோதின. அரை இறுதியில்    தோல்வியடைந்த உருகுவே,ஜேர்மனி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்ற ஜேர்மனி மூன்றாவது இடத்தைப்பிடித்தது.

ஸ்பெயின்,நெதர்லாந்து ஆகியன இறுதிப்போட்டியில் விளையாடின. மேலதிக நேரத்தில் ஒரேயொரு கோல்  அடித்து ஸ்பெயின் உலகக்கிண்ண சம்பியனானது. உருகுவே வீரர் டியாகோபோர்லன் கோல்டன் போல் விருதைப் பெற்றார். ஜேர்மனி வீரர் தோமஸ் முல்லர் கோல்டன் பூட்ஸ் விருதையும் சிறந்த இளம் வீரர் விருதையும் பெற்றார். ஸ்பெயின்கோல் கீப்பர் ர்கஸிலிலாஸ் கோல்டன் கிளவ்ஸ் விருதை வென்றார்.  புரிந்துணர்வை வெளிப்படுத்தும் விருது ஸ்பெயினுக்கு வழங்கப்பட்டது

      உலகக்கிண்ணப்போட்டியை நடத்தும் நாடுகள் பல சிரமங்களையும், விமர்சனங்களையும் எதிர்நோக்குவது வழமை. தென்னாபரிக்காவும் பல சர்ச்சைகளைச் சந்தித்தது. மைதானப் புனரமைப்புப் பணிகளில் வேலைசெய்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பொலிஸாரின் துணையுடன் வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டது. தனது நாட்டில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியைப் பார்த்து பெருமைப்பட்டவர் நெல்சன் மண்டேலா

அடுத்த உலகக்கிண்ணப்போட்டி பற்றிய பரபரப்பான செய்தி வெளியான நாளில் அவர் மரணமானார். உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடும் குழுக்களின் தெரிவு பிரேஸிலில் நடைபெற்றபோது மண்டேலாவின் மரணச் செய்தி வெளியானது.
உதைபந்தாட்ட இரசிகர்களின் பார்வை  பிரேஸிலை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த வாரம் பிரேஸிலில் நடைபெற்ற  உதைபந்தாட்டப்போட்டியில் ஏற்பட்ட கலவரத் தில் ஒருவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்துள் ளார்கள். உலகக்கிண்ணப்போட்டியில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என பிரேஸில் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை பிரேஸிலில் பல மாற்றங்கள் நடைபெறவுள் ளன. உதைபந்தாட்ட இரசிகர்களால் உலகம் அதிரப் போகிறது.

சுடர் ஒளி
08/12/13

No comments: