Sunday, December 1, 2013

பீஃபா அழைக்கிறது

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் சிறப்புகளில் பாடலுக்கும் முக்கிய இடம் உண்டு. பிரேஸிலில் நடக்க உள்ள போட்டியைப் பிரபல்யப்படுத்துவதற்காக பாடலை இயற்றி இசை அமிப்பதற்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரண்டாம் திகதி முதல் ஜனவரி 6ஆம் திகதிவரை இணைய தளத்தின் மூலம் பாடலை அனுப்பும்படி வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

 பிறேஸிலின் கலை,பண்பாடு, கலாசாரம்,மக்களின் வாழ்க்கை முறை, பெருமை என்பன பாடலில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். குளோபல் மியூசிக்கின் சுப்பர் ஸ்டார் பாடகரான ரிக்கி மாட்டின் தலைமையிலான குழு சிறந்த பாடலைத் தேர்வுசெய்யும், முதல் சுற்றில் 20 பாடல்கள் தேர்வு செய்யப்படும். இரண்டாவது சுற்றில் ஐந்து பாடல்கள் இறுதியில் ஒரு பாடல் உலகக்கிண்ணப் போட்டியில் பாடுவதற்காகத்தெரிவு செய்யப்படும்.

வெற்றி பெறுபவருக்கு ஏராளமான பரிசிசுகள் வழங்கப்படும் உலக்கக்கிண்ண இறுதிப்போட்டியையும் இறுதி நாள் நிகழ்ச்சிகளையும் வி..பிகளுடன் அமர்ந்து பார்க்க சந்தர்ப்பம் வழங்கப்படும். இவைதவிர ரிக்கி மாட்டினின் அல்பங்களிலும்  இப்போட்டிக்கு அனுசரணை வழங்கும் சொனி அல்பங்களிலும் அப்பாடல் சேர்த்துக்கொள்ளப்படுவதோடு சில இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.

என்றிகியூ மாட்டின் [42] என்ற இயற்பெயருடைய ரிக்கி மாட்டின் பிரபல பொப் இசைப்பாடகராவார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கருகே உள்ள தீவுக்கூட்டமான புலேட்டோரிக்கோவை தாயகமாகக்கொண்டவர் இப்போட்டியின் முடிவு அடுத்த வருடம் பெப்ரவரி மாத வெளியாகும்.

சுடர் ஒளி

01/12/13

No comments: