Tuesday, December 10, 2013

மனதைக் கவர்ந்த இணையற்ற தலைவர்தென் ஆபிரிக்காவில் வெள்ளை இன நிறவெறி அரசினால் அடிமைகளாக நடத்தப்பட்ட கறுப்பின மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து அவர் களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நெல்சன் மண்டேலா கடந்த 5 ஆம் திகதி காலமானார்.இந்த நூற்றாண்டின்  இணையற்ற தலைவரான  இவரின் மறைவுக்கு உலகமே அஞ்சலி செலுத்து கிறது.

நாடு பிடிக்கும் பேராசையினால்  பிரிட்டிஷ் ஏகாதியத்தியம் உலகின் நாடு களை தன் காலடியின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தது. போராட்டங்களின் மூலம்  சில நாடுகள் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்தன. காலப் போக்கில் தன் ஆளுமைக்கு உட்பட்ட எல்லா நாடுகளுக் கும் பிரிட்டன் சுதந்திரம் கொடுத்தது. சுதந்திரத்தின் பின்னும் தென் ஆபரிக்கா, சிம்பாப்பே போன்ற சில  நாடுகளில் வெள்ளை இன நிறவெறி தலைவரித்தாடியது. தென்ஆபிரிக்காவில் ஆங்காங்கே சிறு சிறு போராட்டங்கள் நடைபெற்றன. கறுப்பின மக்களின் விடிவுக்காக உதயமானது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்.ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தமையிலான போராட்டம் எழுச்சி பெற்றபோது இளைஞனான நெல்சன் மண்டேலா அதில் இணைந்தார். போராளியாக இணைந்த மண்டேலா ஆயுதப்போராட்டத் தலைவரானார். போராட்டம், தியாகம் ஆகியவற்றின் மூலம்தென்னா பிரிக்காவின் ஜனாதிபதி யானார். தென் ஆபரிக்காவில்  இருந்த போதுதான் தம்மை அடிமைப்படுத்தி வைத்தி ருக்கும் வெள்ளையனை  வெளியேற்ற வேண்டும் என்ற வேட்கை மகாத்மா காந்திக்கு உதயமானது. காந்தியின் வழி யின் தனது போராட்டத்தை ஆரம்பித்த நெல்சன் மண்டேலா வெள்ளை இன ஆட்சி யை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
தென் ஆபிரிக்கா நாட்டின் மக்கள் தொகையில் கறுப்பன மக்களே அதிகம். அங்கு சிறுபான்மையினரான வெள்ளை யர்கள் ஆட்சி அதிகாரத்தை தமது கைகளில் வைத்துக் கொண்டு சிறுபான்மை இன மக்களை துன்புறுத்தினார்கள். அதற்கு முடிவுகட்டப் பிறந்ததுதான் தேசிய காங்கிரஸ். விடுதலை போராட்ட இயக்கமாக ஆரம்பமாகிய தேசிய காங்கிரஸ் இன்று உலகம் போற்றும் தலைவரால் பெருமைப் படுகிறது.
தென் ஆபிரிக்காவின் கேட் அருகே உள்ள குலுகிரா மத்தில் 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி பிறந்தார் ரொபிசலா மண்டேலா. பாடசாலை ஆசிரியர் இவருக்கு   சூட்டிய   பெயர் மண்டேலா ரொபிசலா  மண்டேலா  என்ற பெயரில் உள்ள ரொபிசலா காலப் போக்கில மறைந்து நெல்சன் மண்டேலா என்று பரிணமித்தது.சோசா பழங்குடி இனத் தலைவரின் மகனாகப் பறந்த மண்டேலா உலகம் போற்றும் தலை வரானார்

சிறுவதில் ஆடுமேய்த்துக் கொண்டே படிப்பைத் தொடர்ந்தார்.1941 ஆம் ஆண்டு சட்டக்கல்வியை முடித்தார்.அப்போது தனது இன மக்கள் படும் துன்பதுயரங்களைக் கண்டு 1943 ஆம் ஆண்டு தேசிய காங்கி ரஸில் இணைந்தார் குத்துச்சண்டை போர்க் கலைகள் என்பனவற்றிலும் பயிற்சி பெற்றார்.

மண்டேலாவின் நடவடிக்கைகள் அரசுக்கு கிலேசத்தை ஏற்படுத்தியது.1956 ஆம் ஆண்டு தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைநடைபெற்றது.நான்கு வருட விசாரணையின் பின்னர் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

 நீதிமன்றத்தால் மண்டேலா விடுதலை செய்யப்பட்டாலும் அவரை சிறையில்   அடைக்கவேண்டும் என்ற நோக்கத்துட னேயே தென் ஆபிரிக்க அரசு செயற்பட்டது. கலவரத்தைத் தூண்டியது.கடவுச்சீட்டு இல்லாமல் வெளிநாடு சென்றது போன்ற குற்றச் சாட்டுகளைச் சுமத்தி ஐந்துவருடச் சிறைத் தண்டனை விதித்தது. சிறையி லிருந்து மீண்ட மண்டேலா தனது போராட் டத்தைத் தீவிரப்படுத்தினார். நாசவேலை குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.
நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப் பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக தென் ஆபிரிக்காவிலும் உலக மெங்கும்  கண் டனப் போராட்டங்கள் நடைபெற்றன. அவரது இரண்டாவது மனைவியின் தலை மையில் தென் ஆபி ரிக்காவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கை மிகவும் கொடூர மானது. தனிமைச் சிறையில் அடைக்கப் பட்ட அவரை யாரும் பார்க்க முடியாது சிறையில் அவருக்கு ஏற்பட்ட நோய்க்கு மருத்துவ வசதி வழங்கப்பட வில்லை.
 மண்டேலா சிறையிலிருந்தபோது தயார் மரணமானார்.இறுதிக்கிரியைகளில் அவர்  கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்புக்கேட்டால் விடுதலையாகலாம் என்று அரசாங்கம் கூறியது. தனது போராட் டம் கறுப்பு மக்களின் விடுதலைக் கானது என்று கூறிய மண்டேலா  மன்னிப்புக்கேட்க மறுத்து விட்டார். உடல் நிலைகாரணமாக வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.உலக நாடுகளின் நெருக்குதலும் உள்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் மண்டேலா விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கின. தென் ஆபரிக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டெக்கிளார்க் மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்று உறுதியளித்தார். 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மனைவி வின்னியின் கைகளைப் படித்துக் கொண்டு  சிறையிலிருந்து வெளியே வந்தார் தென்ஆபி ரிக்க மக்கள் ஆனந்தக் கூத்தாடினார் கள். மண்டேலா விடுதலை செய்யப்பட்ட நாளை சுதந்திர தினம் போல் தென் ஆபிரிக்க மக்கள் கொண்டாடினார் கள்.
கொடுமையான சிறையில் இருந்து வெளி யேறிய மண்டேலா துவண்டு விட வில்லை. தென் ஆபரிக்க மக்களின் தலைவ னானார்.தென் ஆ பிரிக்காவில் வாழும் கறுப்பு இன மக்களின் விடுதலைக்காகப் போராட்டிய மண்டேலா 1994 ஆம் ஆண்டு தென் ஆ பிரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மக்களின் விருப்பத் துக்கு தலைமைப்பதவியை ஏற்றக்கொண்ட மண்டேலா 99 ஆம் ஆண்டு உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து வெளியேறி னார். 2004 ஆம் ஆண்டு பொது வாழ்க்கை யிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.
உலகின் மிகச் சிறந்த நோபல் பரிசு 1993 ஆண் ஆண்டு சமாதானம் என மகுடமிட்டு அவரைத் தேடிவந்தது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக நீண்ட காலம் 27 வருடம் சிறைவாசம் அனு பவித்த ஒரே ஒரு தலைவர் இவர்தான். கறுப்பு இன மக்களை வெறுத்த தென் ஆ பி ரிக்க வெள்ளை இன மக்களும் இவருடைய தலைமைத்து வத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றனர்.
நெல்சன் மண்டேலாவின் அரசியல் வாழ்க்கைப் பயணம் வெற்றிக் கம்பத்தை  எட்டி யது.ஆனால், அவரது தனிப் பட்ட வாழ்க்கை துன்பம், துயரம், சோகம் நிறைந் தது.நோமதாம் சங்கா என்ற தாதியை முதலில் திருமணம்  செய்தார். இவர்களுக்குப் பிறந்த முதல் பெண் குழந்தை ஒன்பது மாதங்களில் இறந்து விட்டது.தேசிய காங்கிரஸில் தன்னுடன் இணைத்து போராடிய வின்னியை  இரண்டாவதாக மண முடித்தார். பின்னர் விவாகரத்துச் செய்தார். வின்னிக்கு எதிராக மோசடிக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.98 ஆம் ஆண்டு கிரேக்கா மெக்கல் எனும் பெண்ணை மணமுடித்தார். மொஸாம் பிக்கின் முன்னாள் ஜனாதிபதி அமோரா மெச்சலின் மனைவியை மணந்ததனால் சர்ச்சை உண்டானது.
தென் ஆபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடை பெற்றபோது கொள்ளுப்பேத்தி கார் விபத்தில் மரணமானார். இறந்த அதிர்ச்சியிலிருநந்து மீள சில காலம் எடுத்தது. மூத்த மகன் 69 ஆம் ஆண்டுகள் கார் விபத்தில் மரணமானார்.
2005 ஆம் ஆண்டு இன்னொரு மகன் எய்ட்ஸ்நோயால் இறந்தார். 2001 ஆம் ஆண்டு புற்றுறோயால் பாதிக்கப்பட்டார்.
தென் ஆ பிரிக்கா மக்களின் விடி வெள்ளியான மண்டேலா உலகத் தலைவர்களில் மிக உன்னதமான வராதத் தன்னை தன்னை நிறுத்தியுள்ளார்.தென் ஆபரிக்காவின்  கறுப்பு முத்து உலகை விட்டு  மறைந்தாலும் மக்கள் மனங்களில் ஒளிவீசிக் கொண்டிருக்கும். 

ரமணி
சுடர் ஒளி

08/12/13

No comments: