Wednesday, December 4, 2013

அரசியலான சிவாஜி சிலை

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்க ள்உட்பட 22 பேரும் விடுதலை நெடுஞ்சாலையில் உள்ள நடிகர்  திலகம் சிவாஜி கணேசன்  சிலையை அகற்றுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் ஆகிய இரண்டும் ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. காஞ்சி வரத ராஜப்பெருமாள் ஆலய மேலாளராக இருந்த சங்கரராமன், கோயில் அலுவலகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டது 2004 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சி வரதராஜர் ஆலய அலுவகத்தில் வெட்டுக்காயங்களுடன் சங்கரராமன் பிணமாகக் கிடந்தார்.அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான்  இக்கொலையை ச்செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணைம்மேற்கொள்ளப்பட்டது.இக் கொலையைச் செய்ததாக ஆறுபேர் சரணடைந்தார்கள் விசாரணையில் அவர்கள் போலிகள் என நிரூபணமானது. காஞ்சி சங்கர மடத்தில் நிலவும் ஊழல், நிர்வாகச் சீர்கேடு என்பனவற்றை ஆதாரங்களுடன் தமிழக அரசுக்கு கடித மூலம் அறிவித்ததால் மடத்தில் உள்ளவர்கள் இவர்மீது கோபமாக இருந்தனர். சங்கராமனின் குடும்பத்தவர்களின் சந்தேகம் காஞ்சி மடத்தில் மீது விழுந்தது.


தமிழகத்தில் உள்ள இந்து மதங்களில் காலத்தால் பழமையானதும் முதன்மையானதும்  காஞ்சி மடத்தின் மீதான குற்றச்சாட்டை எப்படிக் கையாள்வது என்ற சிக்கல் எழுந்தது.இச்சம்பவம்  நடைபெற்றபோது ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தார்.இந்து மதத்தின்மீது அசையாத நம்பிக்கையும், தனது தோ­ம் தீர்ப்பதற்காக யாகம், பூஜை செய்யும்ஜெயலலிதாவின் அரசாங்கம் காஞ்சி மடத்தின் மீது கைவக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.எவருமே எதிர் பார்க்காத நேரத்தில் சங்கரராச்சரியாரை கைதுசெய்ய ஜெயலலிதா  அனுமதி வழங்கினார்.
ஜெயலலிதா பச்சைக் கொடிக் காட்டியதும் 2004ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் திகதி தீபாவளி தினத்தில் காஞ்சி காம பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்தி சரஸ்வதி கைது செய்யப்பட்டார்ணணண. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி காஞ்சி காமகோடி இளவல் ஸ்ரீ விஜய சரஸ்வதி கைதுசெய்யப்பட்டார்.ஸ்ரீஜெயேந்தி சரஸ்வதி கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்கிடையில் இளவலும் கைதுசெய்யப்பட்டது.இந்து மக்களிடையே   பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்றே பல ஊடகங்கள் முடிவுகடடி செய்திகளையும்,கட்டுரைகளையும் வெளியிட்டன.

 இந்து மக்களால் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவர் ஒருவர் கொலைக் குற்றக் கூட்டில் கைது செய்யப்பட்டதைபெரும்பாலான  இந்து மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பொலிஸ் அதிகாரிகளின் முன்னால் விசாரணைக் கைதியாக கூனிக் குறுகி அவர் இருந்த காட்சிகள் இரக்கத்தை உருவாக்கின. இரகசியமாக நடைபெற்ற விசாரணைக் காட்சிகள்  பரகசியமாக்கப்பட்டன.  அவரின் புகழை க் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட இக்கட்சி களால் அவர்மீது இரக்கம் ஏற்பட்டது.
சங்கரராமன் கொலையில் சந்தேகத் தின் பேரில் ஆன்மீகத்தலைவர்கள் கைது செய்யப்பட்டதனால் மிக அவதான மாகச் செயற்பட வேண்டிய  நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது. அவர்கள்  நிபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டால் அரசுக்கு அது அவமானமாகிவிடும். மேலிடத்து நெருக்கடியால் துரிதமாக விசாரணை நடைபெற்றது. சங்கராச்சரியர்கள் உட்பட சுந்தரேசன்  ஐயர் விஜயேந்திரனின் தம்பி ரகு  தாதாசுப்பு, ரவிசுப்பிர மணியம், கதிரவன் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்த சதி செய்தவர்கள் கொலையாளிகளுக்கு பணம் கொடுத்தவர்கள்உதவி செய்தவர்கள் என நீண்டதொரு பட்டியலை பொலிஸார் வெளியிட்டனர்.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ரவி சுப்பரமணியம் அரசு தரப்பு சாட்சியாக மாறினார்.இதனால் பொலிஸார் மகிழ்ச்சியடைந்தனர் குற்றிவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார்கள். 1873 பக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.370 சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டனர்.712 ஆவணங்கள் நீதிமன்றத்துக்கு கையளிக்கப்பட்டன. அரசியல் பழிவாங்களினால் தன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகக் கூறிய ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி புதுச்சேரியில் நடைபெறும் இவ்வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி  நீதிமன்றத்தில் மனுகொடுத்தார்.அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை புதுவைக்கு மாற்றியது.

புதுவை முதன்மை நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வழக்கை இழுத்தடிப்பததிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். 86  சாட்சிகள் முன்னுக்குப்பி ன் முரணாக பிறழ் சாட்சியமளித்ததனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான பிடி நழுவியது. அடையாள அணிவகுப்பல் குற்றவாளிகள் இனம் காட்டப்படவில்லை. .குற்றவாளிகளில் ஒருவரான கதிரவன் இனம் தெரியாத குழுவால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஒன்பது வருடங்கள் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.இவர்கள் தான் குற்றவாளிகள் என்பதற்கான போதிய ஆதாரத்தை பொலிஸார் தாக்கல் செய்யவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சென்னை ராணிமேரி கல்லூரி டிஜிபி அலுவகம் ஆகியவற்றுக்குச் செல்லும் சந்தியில் கம்பீரமாக நிற்கும் நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு தமிழகபொலிஸார் ஒப்புதலளித்துள்ளனர்.நெடுஞ்சாலையில் உள்ள இந்தச் சிலையை போக்குவரத்துக்கு இடைஞ்சல், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என சீனிவாசன் என்பவர் வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நடை பெற்றுக்கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார்.அவருடைய வழக்கறிஞர் காந்தி இந்த வழக்கை முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
சிவாஜி சிலை அகற்றுவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் உள்ளது.கருணாநிதியின் முற்சியினால் 2006 ஆம் ஆண்டு ஜுலை21ஆம் திகதி சிவாஜியின் நினைவு நாள் கருணாநிதி இச்சிலையை திரை நீக்கம் செய்தார்.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலையில் சிவாஜிக்கு சிலை வைப்பதற்கான அனுமதியை தமிழகப் பொலிஸ் வழங்கியது.இப்போ ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது  அனுமதி மறுக்கப்பட்டடுள்ளது. தலைவர்கள் மாறும்போது அரசியல் கள நிலைமையும் மாறுவது தமிழகத்தில் சகஜமானதுதான்
கருணாநிதி முதல்வராக இருந்தபோது முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தையும் இடைநிறுத்திய ஜெலலிதா புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். புதியதலைமைச் செயலகம், செம்மொழி நூலகம் என்பன கருணாநிதியால் ஆரம்பி க்கப்பட்டதால் அவற்றின் மதிப்பைக் குறைத்தார் ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கும் அதுதான் நடந்தது.கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காக சிவாஜி சிலை அரசியலில் சிக்கியுள்ளது.
பத்தினித் தெய்வம் என தமிழக மக்களால் வணங்கப்படும் கண்ணகி  சிலையை பெயர்த்து ஒரு மூலையில் போட்டது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு.கண்ணகி சிலையின் பின்னணியிலும் கருணாநிதிதான் இருந்தார்.அதனால்தான் பத்தினித் தெய்வம் இருட்டறையில் சிறை வைக்கப்பட்டாள்.கருணாநிதி முதல்வரானதும் கண்ணகிக்கு விடுதலை கிடைத்தது.
நடிகர் திலகத்தின்  மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட கருணாநிதி  சிவாஜி சிலையை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது ஆட்சிகாலத்தில் சிவாஜி சிலையைத் திரை நீக்கம் செய்து மகிழ்ச்சியடைந்தார்.ஜெயலலிதாவின் ஆட்சியிலே அந்த மகிழ்ச்சிக்கு முட்டுக் கட்டை போடப்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
சிவாஜியுடன் பல பபங்களில் கதா நாயகியாகநடித்தவர் ஜெயலலிதா. தனது வளர்ப்பு மகனை சிவாஜியின் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆடம்பரமான அத்திருமணம் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியது.அரசியலுக்கு அப்பால் நடிகர் திலகத்தின் மீது அனைவரும் மதிப்பு வைத்துள்ளனர்.அப்படியான பெருமதிப்பு ஜெயலலிதாவிடமும்  இருக்கும் என்பதால் சிவாஜியின் சிலைக்கு ஆபத்து வராது என்றே அனைவரும் நம்பினர்.
 
 சிவாஜியின் சிலையை அகற்றக் கூடாது என்று சென்னை பொலிஸ்கமிசன‌ரிடமும், தமிழக அரசுக் கும்மனுக் கொடுத்து விட்டு நடிகர் சங்கம் தனது கடமை  முடிந்து விட்டதென்று பேசாமல் இருக்கிறது.சிவாஜியின் சிலையை அந்த இடத்தில் இருந்துஅகற்றக் கூடாது என்பதற்காக வலுவான  காரணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.அறிஞர் அண்ணாவுக்குப் பின் தமிழக முதல்வர்களில் பன்னீர்ச் செல்வம் ஒரு வரைத்தவிர ஏனைய அனைவரும் சினிமாவிலிருந்து ...... வந்தவர்கள்.நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனதால்  முதல்வராகும் வாய்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்குக் கிடைத்தது.
தமிழகத்தில் பலமிக்க அமைப்பாக இருக்கும் நகடிகர்சங்கம் மனது வைத்தால் முடிவு சில வேளை மாறியிருக்கும்இ தமது படங்களைத் திரையிடுவதற்கே ஜெயலலிதாவின் அனுமதியை எதிர்ப்பார்க்கும் தமிழ்க் கதாநாயகர்கள் சிவாஜிக்காகப் போராட்டம்  நடத்துவதற்குமுன்வர மாட்டார்கள். சிவாஜிக்குப்  பின்னால் இரசிகர்கள்  பலம்  உள்ளதே தவிர அரசியல் பலம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.காமராஜனுடன் மிக நெருக்கமாகப் பழகிய  இவர் காலக்கிரமத்தில் ஓரம்கட்டப்பட்டார். தனிக்கட்சி   ஆரம்பத்து அரசியல் சுழலில் மூழ்கிவிட்டார்.

சிவாஜி இறந்த பின்னர் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று நிலம் ஒதுக்கப்பட்டு பூஜை போடப்பட்டது.கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவரும் மாறிமாறி முதல்வராக இருந்தும் மணிமண்டபத்திற்கான அத்திவாரம் கூடப்போடப்படவில்லை.தென்நிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர். நடிகர் சங்கத்தின் தலைவராக பதவிவகித்தபோது பல சேவைகளை முன்னெடுத்தார்.நடிகர் சங்கம் அவரை கைவிட்டுவிட்டது.
காங்கிரஸ் கட்சியில் உள்ள சிவாஜியின் நண்பர்களும் சிவாஜி சமுதாயப்பேரவை உறுப்பினர்களும் எதிர்மனுத்தாக்கல் செய்யப்போவதாக   அறிவித்துள்ளனர்.தனது எதிர்காலம் என்னவென்று தெரியாது  கம்பீரமானநிற்கிறது சிவாஜி சிலை
 ரமணி  
சுடர் ஒளி
01/01/13


No comments: